TNF Website
Mobirise
create your own website


செவிலியர்களுக்கு புதிய சீருடை

Date : 2/6/2019 12:00:00 AM

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நர்சுகள் சங்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு ஆகும்.


கடந்த 15 வருடங்களாக அரசாணைகளில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பெயரே வெளிவராத நிலையில் தற்போது தலைப்பிலேயே தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கோரிக்கை என வர வைத்து இருப்பது மிகச்சிறப்பான சீரிய முயற்சியாகும்.

செவிலியர்களின் பணியில் பழமையை புகுத்தி, அடிமைத்தனத்தை நிலைக்க வைத்திருப்பதில் இந்த சீருடைக்கும் ஒரு பங்கு உண்டு.

செவிலிய பயிற்சியை இந்தியாவிற்கே வழங்கி முன்னோடியாக இருந்த தமிழகம் செவிலியர் சீருடை கூட மாற்றாமல் இருந்தது நமது பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொண்டிருந்தது.

ஆனால் தற்போதைய செவிலியர் சங்கத்தின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் விளைவாக இந்த சீருடை மாற்ற அரசாணை வந்துள்ளது என்பதை யாராலும் இங்கு மறுக்க இயலாது.

குறிப்பாக அதிகாரிகள் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்துகொண்டிருந்தபோது, நமது சங்கம் சீருடைகளை ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கு தைத்து, அணிவித்து, அதிகாரிகளின் முன்நிறுத்தி, இதுதான் நாங்கள் கேட்கும் சீருடை என காட்டியது தலைமைப்பண்பின் செயல்பாடுகளின் மிக சிறப்பான முடிவு ஆகும்.

இங்கே சீருடையை மட்டும் காணும் நாம் அதற்காக எடுத்த சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும், வெள்ளைத்தாளில் எழுதி கொடுப்பதற்கே சிரமப்படும் நாம் இத்தகைய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

நமது ஷிப்ட் பணிக்கான அரசாணை பெற்றபோது  செய்ய தவறிய ஒரு பணியை இப்போது நாம்  கண்டிப்பாக செய்ய வேண்டி இருக்கிறது  அது இந்த சீருடை மாற்றத்திற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆரம்பத்திலிருந்து,  முறையாக, காலவரிசைப்படி, புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெற்றது என்பதை இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகால தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். அதே நேரத்தில் சில செயல்கள் விமர்சனத்திற்கு உரியதாகவும் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.

மேலும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் எதிர்கால நோக்கங்களில்  அனைத்து செவிலியர்களும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 1) ஒப்பந்த முறையை ஒழிப்பது 2) செவிலிய பணி அல்லாத பணிகளை வரையறுப்பது மற்றும் 3) ஆறாவது ஊதியக் குழுவில் கோட்டைவிட்ட செவிலியர்களின் ஊதியத்தை மீண்டும் பெறுவது ஆகும்.

இந்த குறைபாடுகளை சரி செய்ய இதுபோலவே முயற்சி எடுத்து செவிலியர் சங்க வரலாற்றில் பொற்காலமாக இக்குழுவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செவிலியர்களின் விருப்பமாகும்.

ம. உமாபதி.


PDF Files


COMMENT

express your opinion



Contacts

Ravi Seetharaman
Mobile : 9789343591
Email : tnnursesfederation@gmail.com