TNF Website
Mobirise
create your own website

2580 செவிலியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு

Wednesday, September 4, 2019
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற செவிலியர்களுக்கான எம்ஆர்பி தேர்வு கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு செவிலியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் கீழ்க்கண்ட இணையதள லிங்க் மூலமாக பெயர்களை அறிந்து கொள்ளலாம்.


http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_2019_CV_04092019.pdf


ரவி சீத்தாராமன்

9789 3435 91







G2 Nurses Counseling

Thursday, August 29, 2019

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_


_தமிழக அரசு  செவிலியா்களுக்கோா் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில், கடந்த 1999 ம் வருடம் முதல் இதுநாள் வரை ஏறத்தாழ 20 வருடங்களாக செவிலிய கண்காணிப்பாளா் நிலை -II பதவி உயா்வு பெற்றவா்கள் அனைவருக்கும் *TNPSC யின் PERMANENT POST APPROVAL* இன்று (28/08/2019) வழங்கப்பட்டுள்ளது._


_இதற்காக தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில நிா்வாகம் எடுத்த பலகட்ட பெருமுயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ற்கான பதவி உயா்வு பெறுவதில் கடந்த காலங்களில் நடந்ததுபோல் தாமதம் சிறிதும் இருக்காது என நம்பலாம்._


_இதற்காக DMS அலுவலக பணியாளா்கள் கடந்த 07/08/2019 முதல் TNPSC அலுவலகத்திற்கு தொடா்ச்சியாக சென்று இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க செயலை நிறைவேற்றி செவிலிய சமுதாயத்திற்கு பேருதவி புாிந்துள்ளனா்.இது நிறைவேறிய தகவலறிந்து மருத்துவதுறையின் பல்வேறு பிாிவு ஊழியா் சங்கங்கள் நமது மாநில நிா்வாகிகளை நோிலும் ,போனிலும் தொடா்புகொண்டு அவா்கள் சங்க ஊழியா்கள் பலருக்கு பதவி உயா்வில் TNPSC PERMANENT APPROVAL பல ஆண்டுகளாக கிடைக்காதநிலையில் உங்களால் எப்படி சாத்தியமானது என்று ஆச்சாியத்துடன் வினவினா்.பட்ட கஷ்டங்கள் நமக்கே வெளிச்சம் என நாமறிவோம்._


_அதன் பிண்ணனியாக,இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II பதவி உயா்வு கலந்தாய்வு, அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் மற்றும் மேதகு.சுகாதார துறை செயலா் அவா்களும் நாடு திரும்பிய பின் அனேகமாக அடுத்த மாதம் 6,7 தேதி வாக்கில் கலந்தாய்வுக்கான தேதி மாண்புமிகு.அமைச்சா் அவா்களின் அறிவுறுத்தலின்படி  அறிவிக்கப்படவுள்ளது என்பதை செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்.அதன் முடிவில் அடுத்த மாதம் 1/9/2019 ற்கான உயா்வு பெறுபவா்களுக்கான  புதிய பட்டியல் *(NEW PANEL FOR GR-II  2019)* அரசால் வெளியிடப்படவுள்ளது என்பதையும் இக்கணம் தொிவித்துக்கொள்கிறோம்._


_இதற்காக பேருதவி புாிந்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,மேதகு.சுகாதாரத்துறை செயலாளா் அவா்களுக்கும்,மதிப்புமிகு DMS அம்மா அவா்களுக்கும், TNPSC அலுவலக உயா் அலுவலா்களுக்கும்,  அனைத்து DMS அலுவலக பணியாளா்களுக்கும், மற்றும் நமது சங்க மாநில நிா்வாகிகள் பலருக்கும் நெஞ்சாா்ந்த நன்றிகளை சமா்ப்பிக்கிறோம்._ 


                   _*நன்றி*_


_*இப்படிக்கு,*


_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_


_*தேதி:28/08/2019*_







செவிலியர் அரசு பட்டய படிப்பு விண்ணப்பம் diploma nursing application

Monday, August 26, 2019






சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் அவர்களுடன்

Sunday, August 18, 2019
நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு (Gmkmch)  தமிழக அரசு சுகாதரதுறை முதன்மை செயலளார் மதிப்புமிகு Dr பீலா ராஜேஷ்  மேடம் அவர்கள்  வருகை தந்தார்கள் அப்போது சேலம் மாவட்ட அரசு நர்சுகள் சங்கம் சார்பாக  மரியாதை செலுத்தப்பட்டு  கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.கனிவோடு பெற்று கொண்டு செவிலியர் பற்றாகுறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.. ம






GRADE 2 COUNSELING ?

Wednesday, August 14, 2019

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_


 _இன்று *(14/08/2019)* சென்னையில், TNPSC செயலாளா் *மேதகு.K.நந்தகுமாா் IAS* அவா்களை, தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில நிா்வாகிகள் பலரும் சென்று அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்._


_இச்சந்திப்பின்போது செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக *TNPSC Approval* வழங்கிட கோாினோம்.  அதற்கு மேதகு TNPSC செயலாளா் அவா்கள் இதுசம்பந்தமாக மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும்,மேதகு.சுகாதாரத்துறை செயலாளா் அவா்களும் அடிக்கடி அவாிடம் பேசி வருவதாகவும், மாண்புமிகு.அமைச்சா் அவா்களின் ஆணைக்கிணங்க, *மதிப்பிற்குாிய DMS Dr.T.S.SWATHI RETHNAVATHI  MBBS,DGO* அவா்களும்,அவா்களது அலுவலக ஊழியா்களும் TNPSC அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றும், விடுமுறை தினங்களில் கூட அங்கு சென்று செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II கலந்தாய்வுக்கான கோப்புகளை சாி செய்துள்ளனா் என தொிவித்தாா்._ 


_அவாின் கூற்றுப்படி இந்த மாதம் மூன்றாவது வார இறுதிக்குள்  31/08/2019 ற்குள் உள்ள பணி மூப்பு பட்டியலில் உள்ள ஏறத்தாழ *400 செவிலியா்களுக்கு* செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.மேலும் இதுவரை பதவி உயா்வுபெற்ற செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I அனைவாின் பெயா் மற்றும் விபரங்கள் அடங்கிய கோப்புகளை TNPSC அலுவலகத்தில் விரைவில்  ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தினாா்._


_அதன்பின் அனைவரும் தலைமைச் செயலகம் சென்று மேதகு.சுகாதார துறை செயலாளா் அவா்களை சந்தித்தோம்.அதுசமயம், திருநெல்வேலியி்ல் கடந்த *06/08/2019*  அன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட *22 அம்ச தீா்மானங்கள்* அடங்கிய கோப்பினை மேதகு.செயலாளா் அவா்களிடம் வழங்கி நமது கோாிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரவும், மேலும் செவிலியா்கள் சாா்ந்த பல விசயங்களை தொிவிக்க குறை தீா்ப்பு கூட்டத்திற்கான தேதி வழங்கும்படியும் கேட்டுக்கொண்டோம். அதற்கு மேதகு.சுகாதாரதுறை செயலாளா் அவா்கள் செப்டம்பா் முதல் வாரத்தில் குறை தீா்ப்பு கூட்டம் நடத்த தேதி வழங்குவதாக உறுதியளித்தாா்._


_கடைசியாக,மேதகு சுகாதார செயலாளா் அவா்களிடம், சமீப காலமாக எங்களது செவிலியா்களில் சிலா் எதிா்பாராதவிதமாக நோய்வயப்பட்டு மரணமடைவது வேதனையளிக்கிறது எனவும் அதற்காக மாவட்டந்தோறும்  பணிபுாியும் அனைத்து அரசு செவிலியா்களுக்கும் மருத்துவ பாிசோதனை கண்டிப்பாக செய்ய ஓா் அரசாணையோ,அல்லது அரசு கடிதமோ வழங்கி கட்டாய மருத்துவ பாிசோதனை செய்து செவிலியா்களின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டினோம். மேதகு.சுகாதார செயலாளா் அவா்கள் அதற்கு சம்மதம் தொிவித்து இன்று சென்னையில் நடக்கும  மருத்துவதுறை உயா் அலுவலா்களின் கூட்டத்தில் இதுசம்பந்தமாக இயக்குனா்களிடம் கலந்துபேசி அலுவலக ஆணை வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்தாா்._


_இன்று நடந்த அனைத்து சந்திப்புகளிலும் நமது செவிலியா்களின் நன்மைக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும், மேதகு.சுகாதார செயலாளா் அவா்களுக்கும், மேதகு.TNPSC செயலாளா் அவா்களுக்கும், மதிப்பிற்குாிய DMS அம்மா அவா்களுக்கும் மற்றும் அலுவலக நண்பா்களுக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக மனப்பூா்வமான நன்றிகளை உாித்தாக்குகிறோம்._


                   _*நன்றி*_


_*இப்படிக்கு,*_



_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_


_*தேதி:14/08/2019*_







PARAMEDICAL COURSES APPLICATION INVITED BY DME

Thursday, August 8, 2019






பிரசவத்துக்குப் பின் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு ; செவிலியர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

Saturday, August 3, 2019



பிரசவத்துக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த

விவகாரத்தில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

செவிலியர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


திருவாரூர் மாவட்டம், திருக்களம்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற

பெண்ணுக்கு கடந்த 24ம் தேதி, குடவாசல் அரசு மருத்துவமனையில் குழந்தை

பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்றைய தினமே அவர்

அனுமதிக்கப்பட்டார். ஆனால், பவிதா நேற்று உயிரிழந்தார். மருத்துவர்களின்

தவறான சிகிச்சை காரணமாக பவிதா உயிரிழந்ததாக உறவினர்கள்

புகார் தெரிவித்துக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு

போராட்டத்தில் ஈடுபட்டனர்.






இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபரிடம் மனிதாபிமானமின்றி

நடந்ததாகவும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறி பணியிலிருந்த

செவிலியர்கள் உதயகுமாரி, பாரதி, திவ்யா மற்றும் தற்காலிக மருத்துவமனை

ஊழியர்கள் ரவிக்குமார், சுந்தர்ராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து

மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும்,

பணியிலிருந்த மருத்துவர் லெனின் மீது விசாரணைக்கு

உட்படுத்தப்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார்.


http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68895-woman-died-after-delivery-treatment-in-thiruvarur-government-hospital.html











சுகாதாரத் துறையின் புதிய திட்டங்கள் - சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

Tuesday, July 16, 2019
தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-



தமிழ்நாட்டில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக, 82 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
 
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனைத்து சிறப்பு துறைகளும் ஒரே அடுக்குமாடி கட்டடத்தில் செயல்படும் வகையில், தற்போது கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டடத்தில், 4-வது தளம் முதல் 6-வது தளம் வரை, மேலும் மூன்று தளங்கள் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டடத்திலேயே அனைத்து துறைகளும் செயல்படும் விதத்தில், தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்திற்கு மேல், 5வது தளம் முதல் 8 வது தளம் வரை, மேலும் நான்கு தளங்கள், 42 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 

சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திட, 30 கோடி ரூபாய் செலவில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக, “பிரேக்கி” தெரப்பியுடன் கூடிய “சி.டி.ஸ்டிமுலேட்டர்” மற்றும் “பங்க்கர்” கருவிகள் 22 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திட, “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசர கால சிகிச்சை மையங்களுக்கு, நவீன மருத்துவக் கருவிகள், 21 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

காச நோயாளிகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 96 ஆயிரத்து 200 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். 

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்” ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நடப்பாண்டில், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 12 அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் எழும்பூர், பூவிருந்தவல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.







புதிய இயக்குனர்-DMS

Monday, July 1, 2019
_*புதிய மரு‌த்துவ‌ம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர்  திருமதி.மரு. சுவாதி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் 


தமிழ்நாடு நர்சுகள் சங்கம்







பணி மாறுதல் கலந்தாய்வு பணி நிரந்தர கலந்தாய்வு பணி உயர்வு கலந்தாய்வு

Saturday, June 29, 2019

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_


_செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II கலந்தாய்வுக்கான துறை ரீதியான பணிகள் ஓரளவு முடிவடைந்து, வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது._

_அவ்வாறு செவிலிய கண்காணிப்பாளா் நிலை- II கலந்தாய்வு நடந்த மறுகணம் *MRB* செவிலியா்கள் சுமாா் *450* நபா்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வும் நடைபெறவுள்ளது._


_*MRB* பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்னா் அனைத்து செவிலியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஒன்றும் நடத்தித்தர *மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா்* அவா்களிடம் கோாிக்கை வைத்துள்ளோம்.மாண்புமிகு.அமைச்சா் அவா்களும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்திதர இசைந்துள்ளாா்கள்._


_செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு முடிந்ததும்  MRB செவிலியா்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் பணி நிரந்தரப்படுத்துவது வழக்கமான ஒன்று என்பதையும், செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II பதவி உயா்வு கலந்தாய்வுக்கான தேதி மற்றும் நேரம் சம்பந்தமாக முறைப்படியான தகவல் தொிவிக்கப்படும் என்பதையும் செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._


                   _*நன்றி*_


_*இப்படிக்கு,*


_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_


_*தேதி: 29/06/2019*_







எவ்வளவு மார்க் எத்தனை பேர்

Saturday, June 29, 2019



சமீபத்தில் நடைபெற்ற எம்ஆர்பி தேர்வில் எத்தனை செவிலியர்கள் எவ்வளவு மார்க் பெற்றுள்ளார்கள் என்ற விவரம் இதில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதை வைத்து தோராயமாகபணி எவ்வளவு பேருக்கு கிடைக்கும் எத்தனை மார்க்  பெற்றவர்களுக்கு கிடைக்கும் என்பதை ஒரு அனுமானம் செய்து கொள்ளலாம் இருப்பினும் எம்ஆர்பி ஆணையம் இறுதியில் வெளியிடும் தேர்வு பெட்டியிலே இறுதியானது.



ரவி சீத்தாராமன்

9789 3435 91







Markes

Saturday, June 29, 2019






செவிலியர் பணிக்கான எம்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு

Friday, June 28, 2019
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Staff Nurse பதவிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


www.mrb.tn.gov.in







MRB TO REGULAR POSTING

Friday, June 28, 2019

அனைத்து தமிழக அரசு எம் ஆர் பி செவிலியர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏


நமது எம் ஆர் பி செவிலியர்களுக்கு *அடுத்த பணி நிரந்தரம்* 300 முதல் 450 வரையான நிரந்தர பணியிடங்கள் வரும் ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.


பதவி உயர்வு (GRADE 2 PROMOTION) சம்பந்தப்பட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தவுடன், நமது செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


MRB NO:(1400 - 2000)


நன்றி


மேலும் தகவல்களுக்கு சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.


இப்படிக்கு

🤝எம் ஆர் பி செவிலியர்கள் நலச்சங்கம்🤝







Grade 2 Counseling and Tutor Counseling

Saturday, June 8, 2019

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_


_இன்று *(07/06/2019)* மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களை நீண்ட இடைவெளிக்குப்பிறகு_

_தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில நிா்வாகிகள் பலரும் சென்று சென்னையில் சந்தித்தோம்.இச்சந்திப்பின்போது நமது செவிலியா்கள் நலன் சாா்ந்த சில கோாிக்கைகள் அடங்கிய கோப்பினை வழங்கி விரைவில் நிறைவேற்றித்தர வேண்டினோம்._


_*முக்கிய கோாிக்கைகளில் சில...*_

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

♦ _இந்த மாத இறுதிக்குள் சுமாா் 350 நபா்களுக்கு *செவிலிய கண்காணிப்பாளா் நிலை -II* ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தி தர கோாினோம்._ 


♦ _சுமாா் 40 நபா்களுக்கு *செவிலிய போதகா் நிலை -II* கலந்தாய்வு நடத்திதர வேண்டினோம்._


♦ _சென்னை,எழும்பூாில் இருக்கும் நமது செவிலியா்களுக்கு சொந்தமான லாலி சீமாட்டி இடத்தில் தமிழக அரசு செலவில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு *PWD APPROVAL* பெற்றுத்தரவும், விரைவில் பூமி பூஜை செய்து கட்டுமானப்பணிகளை தொடங்கவும் ஆவன செய்ய வேண்டினோம்._


_நமது கோாிக்கைகளை கவனமுடன் கேட்டு விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்த மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்._

                    _*நன்றி*_🙏🏽


 _*இப்படிக்கு,*_


_*K.வளா்மதி,*_

_*மாநில பொதுச்செயலாளா்,*_


_*K.சக்திவேல்,*_

_*மாநில தலைவா்,*_


_*S.காளியம்மாள்,*_

_*மாநில பொருளாளா்,*_


_*மற்றும்*_


_*மாநில அனைத்து நிா்வாகிகள்,*_


_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_


_*தேதி: 07/06/2019.*_







நினைவஞ்சலி

Wednesday, June 5, 2019
இன்றைய தமிழ்நாடு அரசு நர்சுகள் பணி பன்முகப்பாதுகாப்பில் உள்ளது என்றால் மறைந்த தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் முன்னாள் செயலர் திருமதி.க.பாப்புராஜன் அவர்களை மறுக்க இயலா, அனைவரின் அன்பையும் தடுமாறா ஆதரவையும் பெற்றவர் .அவர்கள் காலத்தில் சிங்கத்தின் பாதுகாப்பின்கீழ் இருப்பதாக உணரச்செய்தவர் . அன்பும் அக்கறையும் வறுமை கோலம்கொண்ட சூழலில் இன்றைய சமூகம் இருப்பது போன்ற பிரமை , பாசமா ஆழ்ந்த அக்கறையா சொல்லொனா அன்பா என உணரும் முன்னே காலம் நகர்ந்தது துரதிருஷ்டம். தாய்க்கும் மேலான ஓர் உறவாக இருக்குமானால் அது அம்மாவின் அருகாமையில் இருந்த பொற்காலம் . அவரின் நினைவுநாளில் அம்மாவை நினைவுகூர்ந்து ஆசிவேண்டுவோம்.






கண்ணீர் அஞ்சலி

Sunday, June 2, 2019


தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் PHC யில் பணிபுரியும் செவிலியர் விஜயலட்சுமி நேற்று இரவு 1- 7 பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது வாகன விபத்தால் உயிரிழந்தார். 👇


தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் PHC யில் பணிபுரியும் செவிலியர் விஜயலட்சுமி நேற்று இரவு 1- 7 பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது வாகன விபத்தால் உயிரிழந்தார். 👇








TnfWebsite Android APP

Thursday, May 16, 2019




ANDROID APP

TnfWebsite

நமது TnfWebsite இணைய தளமானது தற்பொழுது ஆண்ட்ராய்ட் ஆப் வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது

இனிமேல் இணையதளத்தை ஆண்ட்ராய்ட் ஆப் வழியாகவும் காணலாம்.

TnfWebsite செயலியை பெற PLAYSTORE சென்று TnfWebsite பார்மட்டில் டைப் செய்யவும்.

அப் இல் மேலும் ஏதேனும் குறைகளோ அல்லது கூடுதலாக ஏதேனும் அம்சங்கள் சேர்க்க வேண்டி இருந்ததால் தெரிவிக்கவும்.






செவிலியர் தின வாழ்த்துக்கள்

Sunday, May 12, 2019
வாழும் 
அன்னை தெரசாக்கள் 
செவிலியர்கள் ! 

மனிதநேயம் மிக்கவர்கள் 
மனித உயிர் காப்பவர்கள் 
செவிலியர்கள் ! 

நோயாளியின் நோய் 
நீக்கும் நேயர்கள் 
செவிலியர்கள் ! 

தன்னைத் தேய்த்து 
வாசம் தரும் சந்தனங்கள் 
செவிலியர்கள் ! 

தன்னை உருக்கி 
ஒளி தரும் மெழுகுகள் 
செவிலியர்கள் ! 

சங்கடப்படாத 
சாதனையாளர்கள் 
செவிலியர்கள் ! 

நொந்து கொள்ளாத 
நல்ல உள்ளங்கள் 
செவிலியர்கள் ! 

தூக்கம் தவிர்த்து 
காத்து நிற்பவர்கள் 
செவிலியர்கள் ! 

உடல் நலம் பெற 
ஓய்வின்றி உழைப்பவர்கள் 
செவிலியர்கள் ! 

தன் உயிர் உருக்கி 
பிறர் உயிர் காப்பவர்கள் 
செவிலியர்கள் ! 

இனிய சொல் சொல்பவர்கள் 
வன்சொல் சொல்லாதவர்கள் 
செவிலியர்கள் ! 

ஆறுதல் சொல்லி 
தேறுதல் தருபவர்கள் 
செவிலியர்கள் ! 

உடல்காயம் மட்டுமல்ல 
மனக்காயமும் ஆற்றுபவர்கள் 
செவிலியர்கள் ! 

மருத்துவர்கள் எள் என்றால் 
எண்ணையாய் நிற்பவர்கள் 
செவிலியர்கள் ! 

பொறுமையின் சின்னங்கள் 
அன்பின் அடையாளங்கள் 
செவிலியர்கள் ! 

ஆண் பெண் இரு பாலிலும் 
உள்ள சொக்கத் தங்கங்கள் 
செவிலியர்கள் !






CHECKING

Wednesday, May 1, 2019






I thought you might benefit from some insider information into the lives of nurses.

I am not a nurse.

I am just a regular person who happened to live in a hospital for a total of four months by my daughter’s side. My little girl’s name is Sylvia. She was born with severe congenital heart disease.

I would love to give you some insight into how the dozens and dozens of nurses whom I met spent their time (in between card games).

The same nurses who sustained her life with countless medications, needed at countless time intervals.

The same nurses who knew her first Christmas would be spent in a hospital crib so they dressed her in a beautiful red dress and hat to surprise me.

The same nurses who had infinite patience for my constant questions.

The same nurses who looked to me first as the person who knew Sylvia best, always validating my role in her care as the mom.

Related:​ When I Realized My Next Door Neighbor Was Also a Heart Mama

The same nurses who not only cared for my baby girl, but also kept track of my sleeping and meal schedule, encouraging me to practice self-care so I could best care for my daughter.

The same nurses who cried with me when we were told Sylvia’s major surgery did not go well and she would need to be placed on ECMO.

The same nurses who painted her nails and put bows on her head while she laid in a bed, motionless, on life support.

The same nurses who hoped with me that her native heart function would heal.

The same nurses who mourned with me when we realized that wasn’t going to happen and Sylvia was listed for a heart transplant at 7 months old.

The same nurses who waited in palpable anticipation for the call that a heart was available.

The same nurses who gathered around me when I found out Sylvia had a massive stroke. My husband hadn’t arrived from work yet, and they sat with me, across from the doctors, cried with me and asked all the right questions when the anguish of my heart made it impossible for me to speak.







Maternity leave instructions from DMS

Friday, April 5, 2019






தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்-தகவல்

Friday, April 5, 2019

*•••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_

_*தகவல்:*_

*•••••••••••••••••••••••••••••••••••••••••*


_*தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_


_இன்று *(03/04/2019)* தமிழ்நாடு சுகாதார செயலாளா்_ _மேதகு. *Dr.Beela Rajesh IAS,* அவா்களை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில நிா்வாகிகள் பலரும் சென்று சந்தித்தோம்._

_இச்சந்திப்பின் போது செவிலியா்கள் நலன் சாா்ந்த பல கோாிக்கைகள் அடங்கிய கோப்பினை சமா்ப்பித்தோம்._


*°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*

_*அவற்றில் முக்கியமானவைகள்:*_

*°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*

♦ _தமிழக மருத்துவமனைகளில் புதியதாக 9000 செவிலிய காலிப்பணியிடங்கள் *(NURSES NEW CREATION POST),* அதற்கு தகுந்த எண்ணிக்கையில் செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II & I புதிய பணியிடங்களும் உருவாக்கித்தர வேண்டினோம்._


♦ _*174* நபா்களுக்கு செவிலிய போதகா் நிலை- II புதிய பணியிடம் உருவாக்கித்தர கோாினோம்._


♦ _தமிழக அரசு செவிலியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் *(ALLOWANCES)* பெறும்பொருட்டு  ஏற்கனவே ஒரு நபா் ஊதிய குழு அலுவலா் *மேதகு. சித்திக் IAS* அா்களிடம்  வழங்கிய கோப்பில் உள்ள கோாிக்கைகளை இன்றும் சுகாதார செயலாிடம் மீண்டும் கோாிக்கைகளாக முன்வைத்தோம்.அதற்கு மேதகு சுகாதார செயலா் அவா்கள், அது சம்பந்தமான கோப்புகளை ஆய்ந்தறிந்து  *SPECIAL ALLOWANCES* பெற்றுத்தருவதாக உறுதியளித்தாா்._


♦ _தற்போது DMS, DME பகுதிகளில் 50% செவிலியா்கள் பணிபுாிகின்றனா். மீதமுள்ள 50% செவிலியா்கள் *DPH* மற்றும் *ESI, DIM* போன்ற பகுதிகளில் பணிபுாிகின்றனா். இச்சூழலில் *DMS, DME* பகுதிகளில் பணிபுாியும் செவிலியா்கள் கண்காணிப்பாளா் போன்று DPH ன் மேற்பாா்வையில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒவ்வொரு *BLOCK PHC* யிலும் ஒரு செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II பணியமா்த்த கோாினோம்.ஆவன செய்வதாக உறுதியளித்தாா்._


♦ _செவிலியா் பறனறாக்குறை அதிகமுள்ள புதுக்கோட்டை புதிய மருத்துவகல்லூாி மருத்துவமனை,திருச்சி,கோவை,செங்கல்பட்டு மற்றும் சென்னையில் சில மருத்துவமனைகளில் புதிதாக செவிலியா்களை நியமிக்க போா்க்கால அடிப்படையில் ஆவன செய்ய வேண்டினோம்.அதற்கு நல்ல தீா்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தாா்._


♦ _பதவி பெயா் மாற்ற அரசாணை *(G.O FOR NURSING OFFICER)* துாிதமாக வழங்க கோாினோம். மே 23 ம் தேதிக்கு பிறகு வெளியிட முயற்சிப்பதாக உறுதியளித்தாா்._


♦ _தா்மபுாி,கிருஷ்ணகிாி மற்றும் ஓசூா் பகுதி இரத்த வங்கி செவிலியா்களுக்கு ஊடகங்களால் ஏற்பட்ட பிரச்சனைகளையும்,அதற்கு நல்ல தீா்வு தர  வேண்டியும் கோாிக்கை வைத்தோம்.அதை நன்கு கேட்டறிந்து ஆவன செய்வதாகவும் உறுதியளித்தாா்_


♦ _ESI மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்களை *SOCIETY LABOUR ACT* ன் கீழ் கொண்டுவர நிா்வாகம் முயல்வதாகவும் அவ்வாறு செய்வதால் எங்களது செவிலியா்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் விளக்கி அதை எப்பவும்போல ESI, DMS நிா்வாகத்தின் கீழ் மட்டுமே செயல்பட வேண்டினோம்._


_மேற்கண்ட செவிலியம் சாா்ந்த பல கோாிக்கைகளை தாயுள்ளத்துடன் கேட்டு ஆவன செய்வதாக உறுதியளித்த மேதகு.தமிழக சுகாதார செயலாளா் அவா்களுக்கு தமிழக அரசு செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்._


            _*நன்றி*_


_*இப்படிக்கு,*_


_*K.வளா்மதி,*_

_*மாநில பொதுச்செயலாளா்,*_


_*K.சக்திவேல்,*_

_*மாநில தலைவா்,*_


_*S.காளியம்மாள்,*_

_*மாநில பொருளாளா்,*_


_*மற்றும்*_


_*மாநில அனைத்து நிா்வாகிகள்,*_


_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_


_*தேதி:03/04/2019*_







SC ST MRB STAFF NURSE REQUIREMENT

Monday, March 4, 2019






Notification for Nurses – SC & ST Shortfall Vacancies

Monday, March 4, 2019
SC ST






WEBSITE UNDER MAINTENANCE

Tuesday, February 26, 2019
மொபைல் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயார் செய்யப்படுவதற்காக இணையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் மொபைல் அப்டேட் செய்யப்படும்






INDIAN RAILWAYS STAFF NURSE REQUIREMENT

Sunday, February 24, 2019
செவிலியர் மற்றும் பல்வேறு அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு இந்திய ரயில்வேயில் பணிவாய்ப்பு






1300 மருத்துவர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் விஜயபாஸ்கர்

Saturday, February 23, 2019
1300 மருத்துவர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் விஜயபாஸ்கர்






சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்! - தமிழக அரசு

Sunday, February 17, 2019
தமிழக அரசு நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய சுகாதாரத்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.






MRB மூலம் செவிலிய தேர்வு

Saturday, February 9, 2019
தமிழக சுகாதாரத்துறைக்கு புதிதாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.  தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நெறிபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொங்கலுக்கு பின் 1884 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.2345 செவிலியர்களும் தேர்வு மூலம் விரைவில் பணி அமர்த்தப்படவுள்ளனர். தமிழகத்தில் விரைவில் 100 புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும்.






மேலும் விவரம்

Friday, February 8, 2019
http://www.mrb.tn.gov.in/notifications.html






TAMILNADU-CENTRAL GOVERNMENT JOBS

Wednesday, February 6, 2019
STAFF NURSE RECRUITMENT IN TAMILNADU-CENTRAL GOVERNMENT JOBS






செவிலியர்களுக்கு புதிய சீருடை

Wednesday, February 6, 2019

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நர்சுகள் சங்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு ஆகும்.


கடந்த 15 வருடங்களாக அரசாணைகளில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பெயரே வெளிவராத நிலையில் தற்போது தலைப்பிலேயே தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கோரிக்கை என வர வைத்து இருப்பது மிகச்சிறப்பான சீரிய முயற்சியாகும்.

செவிலியர்களின் பணியில் பழமையை புகுத்தி, அடிமைத்தனத்தை நிலைக்க வைத்திருப்பதில் இந்த சீருடைக்கும் ஒரு பங்கு உண்டு.

செவிலிய பயிற்சியை இந்தியாவிற்கே வழங்கி முன்னோடியாக இருந்த தமிழகம் செவிலியர் சீருடை கூட மாற்றாமல் இருந்தது நமது பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொண்டிருந்தது.

ஆனால் தற்போதைய செவிலியர் சங்கத்தின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் விளைவாக இந்த சீருடை மாற்ற அரசாணை வந்துள்ளது என்பதை யாராலும் இங்கு மறுக்க இயலாது.

குறிப்பாக அதிகாரிகள் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்துகொண்டிருந்தபோது, நமது சங்கம் சீருடைகளை ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கு தைத்து, அணிவித்து, அதிகாரிகளின் முன்நிறுத்தி, இதுதான் நாங்கள் கேட்கும் சீருடை என காட்டியது தலைமைப்பண்பின் செயல்பாடுகளின் மிக சிறப்பான முடிவு ஆகும்.

இங்கே சீருடையை மட்டும் காணும் நாம் அதற்காக எடுத்த சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும், வெள்ளைத்தாளில் எழுதி கொடுப்பதற்கே சிரமப்படும் நாம் இத்தகைய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

நமது ஷிப்ட் பணிக்கான அரசாணை பெற்றபோது  செய்ய தவறிய ஒரு பணியை இப்போது நாம்  கண்டிப்பாக செய்ய வேண்டி இருக்கிறது  அது இந்த சீருடை மாற்றத்திற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆரம்பத்திலிருந்து,  முறையாக, காலவரிசைப்படி, புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெற்றது என்பதை இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகால தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். அதே நேரத்தில் சில செயல்கள் விமர்சனத்திற்கு உரியதாகவும் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.

மேலும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் எதிர்கால நோக்கங்களில்  அனைத்து செவிலியர்களும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 1) ஒப்பந்த முறையை ஒழிப்பது 2) செவிலிய பணி அல்லாத பணிகளை வரையறுப்பது மற்றும் 3) ஆறாவது ஊதியக் குழுவில் கோட்டைவிட்ட செவிலியர்களின் ஊதியத்தை மீண்டும் பெறுவது ஆகும்.

இந்த குறைபாடுகளை சரி செய்ய இதுபோலவே முயற்சி எடுத்து செவிலியர் சங்க வரலாற்றில் பொற்காலமாக இக்குழுவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செவிலியர்களின் விருப்பமாகும்.

ம. உமாபதி.







புதிய ரெகுலர் பணி இடங்கள்

Wednesday, February 6, 2019
தமிழ்நாடுஅரசு செவிலிய சொந்தங்கள்அனைவருக்கும் வணக்கம்…
தமிழ்நாடுஅரசு நா்சுகள் சங்கத்தின்சீாிய முயற்சியால்,மாண்புமிகு.மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சாிடம்தொடா்ந்து கேட்டுக்கொண்டதின்பலனாக,தமிழ்நாட்டில்உள்ள பழம்பெரும் மருத்துவகல்லூாிமருத்துவமனைகளில் உள்ள செவிலியபற்றாக்குறையை நீக்கி புதியசெவிலிய பணியிடங்களை உருவாக்கித்தரவேண்டினோம்.

மாண்புமிகு.மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா்அவா்களும் நமது கோாிக்கைகளைகருணை கூா்ந்து  பாிசீலித்துதற்போது மூன்று மருத்துவகல்லூாிமருத்துவமனைகளில் புதியசெவிலிய பணியிடங்களை உருவாக்கிஅரசாணையும் வெளியிட ஆவணசெய்துள்ளாா்.

மேற்கண்டஅரசாணையின்படி,புதியகாலிப்பணியிடங்களும்,அதன்விவரங்களும்...

♦ திருநெல்வேலிமருத்துவகல்லூாி மருத்துவமனை:

I)செவிலியா்கள்:161

II) செவிலியகண்காணிப்பாளா் தரம்-II:4

III) செவிலியகண்காணிப்பாளா் தரம்-I:  1

மதுரைஅரசு இராஜாஜி மருத்துவமனை:

I)செவிலியா்கள்:161

II) செவிலியகண்காணிப்பாளா் தரம்-II:3

III) செவிலியகண்காணிப்பாளா் தரம்-I:  1

தஞ்சாவூா்மருத்துவகல்லூாி மருத்துவமனை,

I)செவிலியா்கள்:161

II) செவிலியகண்காணிப்பாளா் தரம்-II:4

III) செவிலியகண்காணிப்பாளா் தரம்-I:  1

மொத்தம்:

செவிலியா்கள்:483

செவிலியகண்காணிப்பாளா்கள் தரம்-II:11

செவிலியகண்காணிப்பாளா்கள் தரம்-I:3

இந்தஅரசணையின்படி புதியதாகஉருவாக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கானபணி நியமன கலந்தாய்வு விரைவில்நடைபெறும் என மாண்புமிகு.மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா்தொிவித்துள்ளாா்.









COMMENT

express your opinion



Contacts

Ravi Seetharaman
Mobile : 9789343591
Email : tnnursesfederation@gmail.com