Sunday, 16 May 2021

பத்திரிகை செய்தி

தமிழகத்தில் புதிதாக 6000 செவிலியர்கள், 2000 மருத்துவர்கள் நியமனம் – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 2ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 30,000க்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருவதால் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2500 மேல் உள்ளதால் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருவதாக புகார் வந்துள்ளது. அதனால் கூடுதலாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 6 ஆயிரம் செவிலியர்கள் கொரோனா நோய்யாளிகளை கவனிக்க நியமிக்கப்பட உள்ளதாக சுகராதரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

(நமக்கு தெரிந்த வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக பல்வேறு இடங்களில் பணி நியமனம் நடைபெற்று வருகிறது.

ஒருவேளை MRB மூலம் நடைபெற்றாலும் தகவல் வந்தால் தெரிவிக்கிறோம்).

Wednesday, 12 May 2021

அனைவர்க்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்

கொரோனா கொல்லும், செவிலியம் அதனை வெல்லும்






கொரோனா காலத்தில்;

பணியை பிணியென்று பாராமல் ;

உயிரினை பாராமல் ;

உறவினை பாராமல் ;

உலகம் முழுவதும் 

கண்ணனுக்கு தெரியாத இந்த கொடிய கொரோனாவை எதிர்த்து களத்தில் நிற்கும் 

செவிலிய சகோதரசகோதரிகள் அனைவர்க்கும் செவிலிய தின வாழ்த்துக்கள்.




Tuesday, 4 May 2021

1212 MRB TO REGULAR(ON DIVERTION- FOR CORONA CHENNAI)

1212 எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உடனடியாக பணிநிரந்தரம் வழங்குவதற்காகவும் தலைநகர் சென்னையில் உள்ள கொரோனா நிலவரத்தை திறம்பட கையாளவும் அந்த ஆயிரத்து 212 செவிலியர்களும்  சென்னையில் Divertion இல் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.



நமக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் சென்னையில் DIVERTION இல் பணியமர்த்த பட்ட நாள் முதலே நிரந்தரப் பணி வரன்முறைகுள் வந்து விடுவார்கள்.  

DIVERTION   இல் பணியில் இணைந்த உடன் ஓரிரு நாட்களுக்குள் அல்லது ஒரு வாரத்திற்குள் DMS இல் இருந்து  அவர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளும்  வழங்கப்பட்டுவிடும்.

இங்கு கொரோனா நிலவரங்கள் ஓரளவு கட்டுக்குள் வந்தவுடன் அவர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்ட இடங்களுக்கு பணி விடுவிப்பு செய்யப்படுவார்கள்.

எனவே வரும் 5ஆம் தேதிக்குள் இந்த ஆயிரத்து 212 செவிலியர்களையும் பணிவிடுவிப்பு செய்து வரும் 10ஆம் தேதிக்குள் அனைவரும் சென்னை DME அலுவலகத்துக்கு வருமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,( மேற்கொண்டு  மேம்படுத்தப்பட்ட தகவல் வந்தால் நாளையோ நாளை மறுநாளோ இங்கு அப்டேட் செய்கிறோம்)

மேற்கூறிய அனைத்துமே நமக்கு கிடைத்த தகவல்கள்.  அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடையாது. முடிந்த வரை நமக்கு தெரிந்த சரியான தகவல்களைத் தெரிவிக்க முயற்சி செய்கிறோம்.

அதிகாரபூர்வ தகவல்களுக்கு தங்களது இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

எம்ஆர்பி எண்கள் தொடங்குமிடம்

MRB எண்கள் முடியும் இடம்


ரவி சீத்தாராமன்
9789 3435 91