Thursday, 25 February 2021

MRB TO REGULAR

MRB யிள் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில்ஆணைகள் தயாராக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

எண்ணிக்கை எவ்வளவு எந்த சீரியல் நம்பர் வரை போன்ற தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்

Saturday, 13 February 2021

புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்

2020 - 21 ம் ஆண்டில் புதியதாக உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி (ம) மருத்துமனைகளுக்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவிக்கபட்டதற்கான அரசாணை.

விருதுநகர் : GO (Ms) No : 55/H & FW (J 2) Dt. 4.2.21

கள்ளகுறிச்சி: GO (Ms) No : 56/H & FW (J 1) Dt. 4.2.21

நாமக்கல் : GO (Ms) No : 58/H & FW ( E2) Dt. 4.2.21

திருப்பூர்: GO (Ms) No : 61/H & FW ( E2) Dt. 5.2.21

கிருஷ்ணகிரி: GO (Ms) No : 64/H & FW (E 1) Dt. 8.2.21

திண்டுக்கல்: GO (Ms) No : 65/H & FW ( E.1) Dt. 8.2.21

முதற்கட்டமாக மேற்கண்ட 6 அரசாணை தகவல்களும் நாமக்கல் மருத்துவக் கல்லூரியின் அரசாணை நகலும் பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்கள் நாம் ஏற்கனவே அரசிடம் கோரியவாறும் உரிய தகவல் தெரிவித்தவாறும்
        நிஅ : 2
இ நி அ : 4
     அ.க. : 8
உதவி : 8
இ நி 2. : 15
R.C. . 8
St.Ty. 8
Ty. 4
OA. 6 
என்ற விகித அடிப்படையில் 600-க்கும் மேற்பட்ட புதிய அமைச்சுப் பணியிடங்கள் மருத்துவமனைக்கும் / கல்லூரிக்கும் புதிய பணியிடங்களாக 20 - 21 நடப்பாண்டிலேயே நிரப்பிடதக்கவாறும் அரசு ஆணைகள்
பெறப்பட்டுள்ளது .

11 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளுக்கு 600க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்களாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 3 February 2021

950 COVID TO MRB

2015 ஆண்டுத் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் பெறாமல் இருந்து கொரோனா சமயத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 950 செவிலியர்களுக்கு தற்பொழுது MRB செவிலியர்கள் ஆக  மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுதுள்ள நிரந்தர எம்ஆர்பி பணியிடங்களில் தொகுப்பூதிய செவிலியர்களாக நியமிக்கப்பட்டு பணி நியமனம் ஆணைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

www.tnfwebsite.com
9789 3435 91

Monday, 18 January 2021

GRADE 1 PROMOTION

 *••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:*_

*••••••••••••••••••••••••••••••••••••••••••••*

_*தமிழ்நாடு அரசு  செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.*_


_கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த பல மாதங்களாக போக்குவரத்து சிரமங்கள், சென்னை அலுவலகம் சென்று வர இயலாமை என பல்வேறு சிக்கல் காரணமாகவும் கடந்த ஒரு வருட கால தாமதத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் தொடா் முயற்சியின் பலனாக *செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I*  பதவி உயா்வு கலந்தாய்வு வருகிற *21.01.2021* அன்று *மதியம் 12* மணியளவில்  சென்னை *DMS*  அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை செவிலிய சமூகத்திற்கு தொிவித்துக்கொள்கிறோம்._


_ஆதலால் இதனுடன் இணைத்து அனுப்பியிருக்கும் DMS கடிதத்தில் உள்ள *37 நபா்களும்* தவறாமல் கலந்துகொண்டு பயன்பெற வாழ்த்துகிறோம். செவிலிய கண்காணிப்பாளா் நிலை- II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வும் இதே சூழலால் தாமதமாகிவருகிறது. ஆனால் இம்மாத இறுதிக்குள் செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது என்பதையும் தொிவித்துக்கொள்கிறோம்._


                     _*நன்றி*_


_*இப்படிக்கு,*_


_*அனைத்து மாநில நிா்வாகிகள்,*_


_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_


_*தேதி: 18/01/2021*_