FIRST 1000 CUT OFF
SECOND CUT OFF
தமிழக அரசின் கொரானா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் தமிழக மக்களை காக்கும் பொருட்டு சுகாதார துறை அமைச்சரின் அதிதீவிர நடவடிக்கையின் ஒருபகுதியாக கொரானாவை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக ஆயிரம் செவிலியர்களை நியமிக்க ஆணை வெளியிடப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகள் மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் ஆணையின் பேரில் இந்த ஆயிரம் செவிலியர்களுக்கும் காலி பணி இடங்களை பொறுத்து அவர்கள் சொந்த மாவட்டங்களிலேயே முடிந்தவரை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுடைய பணி நியமன ஆணைகள் அந்தந்த செவிலியர்களுடைய சொந்த மாவட்டங்களில் உள்ள JOINT DIRECTOR OF HEALTH SERVICE அல்லது DEPUTY DIRECTOR OF HEALTH SERVICE அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும்.. சொந்த மாவட்டத்தில் காலி பணி இடங்கள் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள காலி பணி இடங்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டு இருக்கும் .
இந்த பணி நியமன ஆணைகளுடன் பணி நியமனம் பெற்ற செவிலியர்களின் தொலைபேசி எண்களும் இணைத்து அனுப்பப்பட்டிருக்கும். அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு தொலைபேசி வாயிலாக பணியில் இணைய வருமாறு அழைப்பு விடுக்க படும்.
தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த இமெயில் முகவரிக்கு ஆணை வரவில்லை என்று குழப்பம் அடைய வேண்டாம் . கண்டிப்பான முறையில் ஓரிரு நாட்களில் தொலைபேசி வாயிலாக அழைப்பு வரும்.
முடிந்தால் தங்களுடைய சொந்த மாவட்டத்திலுள்ள துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களுக்கு ஆணை வந்துள்ளதா என்று கேட்டு உறுதி செய்து பணியில் இணையவும். அப்படி அங்கே வரவில்லை என கூறும் பட்சத்தில் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்கவும் . பதற்றமடைய வேண்டாம் .
மேலும் எந்த CUT OFF எண் வரை இந்த 1000 செவிலியர்கள் நியமிக்க பட்டார்கள் என்ற விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.
CATEGORY MARKS OUT OF 1000 NURSES POST FIRST PHASE. GT -63.00 -01.09.1998
BC -63.00 -06.07.1998
MBC & DNC -63.00 -28.05.1978
BCM -57.00 -24.09.1990
SC -62.50 -07.02.1976
SCA -59.00 -22.06.1994
ST –53.00 -11.11.1995
புதிதாக செவிலியர் நியமனம்-1323
இதையும் தாண்டி மேலும் 1323 செவிலியர்கள் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
SECOND BATCH POSTING CUT OFF -1323 STAFF NURSES
GT - 61.50 - 01.09.1998
BC - 61.50 - 06.07.1998
MBC&DNC- 61.00 -28.05.1978
BCM -54.00 -24.09.1990
SC -61.00 -07.02.1976
SCA -57.00 -22.06.1994
ST -51.50 -11.11.1995
இரண்டாம் கட்ட செவிலியர் பணி நியமனத்திற்கான (நியமிக்கப்பட்டால்) அதற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் இங்கு தரப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணி நியமன ஆணைகள் செவிலியர்களுக்கு அனுப்ப பட்டால் தகவல் தெரிவிக்கப்படும் .
மேலும் இது முற்றிலும் தற்காலிக பணி நியமனம் என்ற சில தகவல்கள் பரப்பப்படுகின்றன . இது போன்ற அசாதாரண சூழலில் இவ்வாறான பரப்புரைகள் வருத்தமளிக்க கூடிய ஒன்றாகும் .
தமிழக அரசும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களும் இதுவரை தமிழக அரசால் முறையாக MRB மூலம் நியமிக்க பட்ட எந்த ஒரு செவிலியரையும் பாதிக்க பட விட்டதில்லை .
ஏகம் முதல் கடந்த வருடம் வந்த வழக்குகள் வரை செவிலியர்களுக்கு தோளோடு தோள்நின்று அரசு ஆதரவு கரம் நீட்டி காப்பாற்றியே வந்துள்ளது.
பிரச்சனைகள் இருக்கின்றன ஆனால் அதை பேச இது நேரமில்லை கண்டிப்பாக நல்லதே நடக்கும் .
அனைவருக்கும் தகவல் கொண்டு சேர்ப்பது சிரமாக இருக்கின்ற காரணத்தால் TELEGRAM என்ற அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் PLAY STORE இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து
தங்கள் மொபைல் எண்ணை கொண்டு LOGIN செய்து பின்பு இந்த லிங்கை கிளிக் (https://t.me/tnfwebsite) செய்து இந்த குரூப்பில் இணைத்து கொள்ளவும். இது வரும் காலத்தில் வரும் செவிலியர் சம்மந்தமான தகவல்கள் தங்களை வந்தடைய எளிதாக இருக்கும்.
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
TNFWEBSITE
https://t.me/tnfwebsite
ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91
8838 6848 83