Wednesday, 14 October 2020

COVID NURSES

கோவிட் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு பணிகள் இணையாதவர்கள் பணியில் இணைய நாளை கடைசி தேதி.


எனவே கோவிட் மூலம் பணி செய்ய பட்டு பணிகள் இணையாமல் இருந்து இணைய விருப்பம் இருந்தால் நாளையே சென்று பணியில் இணைந்து விடவும்.

Saturday, 3 October 2020

பணி நீட்டிப்பு ஆணை


 இந்த அரசு கடிதமானது  ஆனது இதுவரை கடந்த ஆண்டுகளில்  மருத்துவத் துறையில். நியமிக்க பட்ட பணியாளர்களுக்கான பணி நீட்டிப்பு ஆணையாகும் .


இந்த நீட்டிப்பு ஆணை மூலமே  ஊதியம் வழங்க இயலும்.


 

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கான அரசு ஆணை அல்ல ஏற்கனவே உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணி நீட்டிப்பு ஆணை.


ரவி சீத்தாராமன்

www.tnfwebsite.com

Monday, 21 September 2020

Saturday, 19 September 2020

பொது பணி மாறுதல் கலந்தாய்வு- தடை

 கொரோனா மற்றும் பொருளாதார, நிர்வாக காரணங்களுக்காக கடந்த வாரம் அரசு துறையில் இருந்து வந்த கடிதத்தில் 2020 -2021 வருடத்திற்கான அனைத்து துறைகளிலும் வருடா வருடம் நடக்கும் பொது பணி மாறுதல்கலந்தாய்வுகளை இந்த வருடம் நடந்த வேண்டாம் எனவும் 


மேலும் MUTUAL மற்றும் INDIVIDUAL REQUEST TRANSFER ( தனிநபர் விண்ணப்பத்தின் அடிப்படையில் பணி மாறுதல்) மற்றும் நிர்வாக காரணங்களுக்காக துறை அதிகாரிகள் தேவையின் அடிப்படையில்  பணிமாறுதல் ஆணைகளை தனிநபருக்கு வழங்கலாம் எனவும் அதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Thursday, 10 September 2020

1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்பு





1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்பு

கொரோனாவை சிறப்பான வகையில் எதிர்கொள்ளும் வகையில் பல்வேறுுு சிறப்பு நடவடிக்கைகளை வரும் எடுத்து தமிழக அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு சிறப்பான சீரான சேவை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா மற்றும் நமது மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் , விருதுநகர், திருப்பூர், ராமநாதபுரம், மேலும் மற்ற இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவர்கள் தேவை கருத்தில்கொண்டு உடனடியாக எம்ஆர்பி மூலம் நிரப்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உள்ளனர்.

புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.

ரவி சீத்தாராமன்
9789 3435 91

Thursday, 3 September 2020

MRB TO REGULAR



ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட MRB செவிலியர்களுக்கு இன்றோ நாளையோ பணி நிரந்தர நியமன ஆணைகள் இமெயில் மூலமாக அனுப்பப்படும் வாய்ப்பு உள்ளது.

ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91

Tuesday, 25 August 2020

MRB TO REGULAR ஆணைகள்

 தொகுபூதியத்தில் பணி புரியும் செவிலியர்களுக்கு (தோரயமாக 300) மேற்பட்ட நபர்களுக்கு ஆணைகள் தயார் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. 





WWW.TNFWEBSITE.COM

RAVI SEETHARAMAN

9789 3435 91


Thursday, 13 August 2020

MRB TO REGULAR

வரும் வாரத்தில் MRB செவிலியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிகையில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட உள்ளது.


எந்த எண்ணிகை வரை ஆணைகள் அனுப்பபட உள்ளது போன்ற தகவல்கள் இன்றோ நாளையோ தெரிவிக்கபடும். 


தோரயமாக 300 TO 500 குள் வர வாய்பிருகிறது.


Tuesday, 4 August 2020

செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு..! தமிழகத்தில் மீண்டும் சோகம்..




ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியரின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களை வேதனையைடை செய்துள்ளது.

சென்னை மருத்துவர் முதல் செவிலியர்கள் வரைக்கும் ஏற்பட்டு வரும் இந்த செயல் கொரோனா களபணியாளர்களை அவமதிக்க செய்து வருவதாக உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை ( நேற்று ) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி திங்கட்கிழமை காலை ( இன்று ) செவிலியரின் உடல் அடக்கம் செய்ய கல்லறை தோட்டத்துக்கு எடுத்து வரப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் சுகாதார பணியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.


பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் தொடர்ந்து உடலை அடக்கம் செய்ய விடாமல் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவின் பிடியால் சிக்காமல் மக்கள் வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில், சமூக பணியை ஏற்று, தொற்றுடன் போராடி வரும் செவிலியர்கள், மருத்துவர்கள் இறக்க நேரிடும் சூழலில் அவர்களது தியாகத்தை பொருட்படுத்தாமல் உடல்களை அடக்கம் செய்யாமல் தடுக்கும் பொதுமக்களின் செயல்கள் வேதனை அளித்துவருவதாக சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர்.

Saturday, 13 June 2020

950 -2015 MRB WAITING LIST POSTINGS

 2015-ல் தேர்வு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 950 க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு தற்பொழுது பணி நியமன ஆணை அனுப்பப்பட்டுள்ளது

Monday, 8 June 2020

மீண்டும் 1166 செவிலியர்கள் நியமனம்-

கொரோனாவுவை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மீண்டும் 1166 செவிலியர்கள் ஆறு மாத காண்ட்ராக்ட் அடிப்படையில் MRB மூலம் நியமிக்க பட இருக்கிறார்கள். அதிற்கான கட் ஆப் மதிப்பெண்கள் இங்கு வெளியிடபட்டு உள்ளது.


Saturday, 6 June 2020

இஎஸ்ஐ மாற்றுப்பணி ஆணைகள் ரத்து

இனிமேல் இயக்குனரக உத்தரவு இல்லாமல் எந்த பணியாளருக்கும் மாற்று பணி DIVERSION ORDER  போடக்கூடாது என இஎஸ்ஐ இயக்குனர்  உத்தரவு.

அனைத்து மாற்று பணி ஆணைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக உத்தரவு.

இனிமேல் மாற்றுப்பணி ஆணை வழங்க வேண்டிய சூழ்நிலை வந்தால்  அதிகபட்சம் 15 நாட்களுக்கு மற்றும் அதுவும் இயக்குனரகத்தின் உத்தரவு பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.

Tuesday, 12 May 2020

ஆறு வருடம் முன்னர் எழுதிய செவிலியர் தின கட்டுரை-செவிலியர் தின வாழ்த்துக்கள்







உரிமைகள் மறுக்கபடும் இந்த உலக செவிலியர் தினத்தில் எங்களது நியாமான கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க உதவிய தமிழ் தி ஹிந்து நாளிதழுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக - 12-5-2014






Saturday, 9 May 2020

2570 ஆணைகள் அழைப்புகள்

2570 செவிலியர்களுடைய பணி நியமன ஆணைகள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட இணை இயக்குனர்(JD OFFICE) அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 பெரும்பாலும் அவர்களுடைய சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தொலைபேசி அழைப்புகள் வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகுள் வந்துவிடும்.

இது ஆறு மாத காலம் தற்காலிக பணி நியமனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து  திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்கவும்.

கட்-ஆப் மதிப்பெண்களில் பொருத்தவரை ஏற்கனவே இருந்த மதிபெண்களை விட இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. (தோராயமாக)

WWW.TNFWEBSITE.COM

Friday, 8 May 2020

மேலும் 2570 செவிலியர்கள் ஆறுமாத ஒப்பந்த அடிப்படையில்


தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு பணியின் மற்றுமொரு அங்கமாக மேலும் 2570 செவிலியர்களுக்கு 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 14 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்டுள்ள ஆணைகளோடு  அலைபேசி  எண்களும் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது .

எனவே பணி நியமனம் பெற்ற செவிலியர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து JD OFFICE  இருந்து வரும்.

பணி நியமனம் பெற்ற செவிலியர்கள் உடனடியாக பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணி நியமனம் 6 மாத காலத்திற்கு மட்டும் என்று அந்த ஆணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



எந்த CUT OFF மதிப்பெண் இந்த ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரிந்தவுடன் தெரிவிக்கப்படும்.

WWW.TNFWEBSITE.COM

Friday, 24 April 2020

சென்னை செல்லும் செவிலியர்கள் கவனத்திற்கு

வணக்கம்

பல்வேறு செவிலியர்கள் தங்களுக்கு சென்னை டிஎம்எஸ் தேனாம்பேட்டை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும் தங்கள் பணி நியமன ஆணையை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்கள்.

அப்படி அழைப்பு பெறப்பட்ட செவிலியர்கள் செல்லும் வழியில் தடங்கல்களை தவிர்க்க பணி நியமன ஆணைகள் கையில் இல்லாத சூழ்நிலையில் நாம் செவிலியர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான அடையாள அட்டைகள் மற்றும் நமது சர்டிபிகேட்டுகளை போன்றவற்றை ஒரிஜினல் கையோடு எடுத்துச் செல்லவும்.

காவல்துறையினர் தங்களின் நிறுத்திக் கேள்வி கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை அளிக்கவும்.

இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் சென்னை அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்  பணியமர்த்த வாய்ப்பிருப்பதால் செல்லும்போது தங்களுடன் தேவையான உடைகளை எடுத்துச் செல்லவும்.

அழைப்பு வராத செவிலியர்கள் மன உளைச்சல்  அடையத் தேவையில்லை கண்டிப்பான முறையில் ஓரிரு நாட்களில் தங்கள் தொலைபேசிக்கு கண்டிப்பான முறையில் அழைப்பு வரும்.




காவல்துறையினர் கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொறுமையாக தகுந்த விளக்கம் அளிக்கவும்.

ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789343591

Monday, 20 April 2020

புதிய செவிலிய நியமன ஆணைகள் 1323


மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் 
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் கொரோனா  தடுப்பு மற்றும் ஒழிப்பு  நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக மேலும் 1323   செவிலியர்களுக்கு  பணி நியமன ஆணைகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு *( JOINT DIRECTOR OF HEALTH SERVICE )*  அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்த பணி நியமன ஆணைகளுடன் பணி நியமனம் பெற்ற செவிலியர்களின் தொலைபேசி எண்களும் இணைத்து அனுப்பப்பட்டிருக்கும். 



தமிழகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் செவிலியர்களின் சேவை மற்றும் தேவை அதிகமாக உள்ளதோ  அந்த இடங்கள் கண்டறியப்பட்டு செவிலியர்கள் அங்கே நியமிக்கப்படுகின்றனர்.

ஆகவே செவிலியர்கள் தங்களுக்கு எந்தந்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகங்களில்  இருந்து  அழைப்பு வருகிறதோ அங்கு சென்று பணியில் இணையவும்.

தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த இமெயில் முகவரிக்கு நியமன ஆணை வரவில்லை என்று குழப்பம் அடைய வேண்டாம் . 

கண்டிப்பான முறையில் ஓரிரு நாட்களில் தொலைபேசி வாயிலாக அழைப்பு வரும்.


SECOND BATCH POSTING CUT OFF -1323 STAFF NURSES
GT - 61.50 - 01.09.1998
BC - 61.50 - 06.07.1998
MBC&DNC- 61.00 -28.05.1978
BCM -54.00 -24.09.1990
SC -61.00 -07.02.1976
SCA -57.00 -22.06.1994
ST -51.50 -11.11.1995



ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91

8838 6848 83

Monday, 30 March 2020

பணி நியமன ஆணைகள் - புதிய நியமனங்கள் - CUT OFF மதிப்பெண்




FIRST 1000 CUT OFF


 SECOND CUT OFF




தமிழக அரசின் கொரானா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் தமிழக மக்களை காக்கும் பொருட்டு சுகாதார துறை அமைச்சரின் அதிதீவிர நடவடிக்கையின் ஒருபகுதியாக கொரானாவை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக ஆயிரம் செவிலியர்களை நியமிக்க ஆணை வெளியிடப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகள் மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் ஆணையின் பேரில் இந்த ஆயிரம் செவிலியர்களுக்கும் காலி பணி இடங்களை பொறுத்து அவர்கள் சொந்த மாவட்டங்களிலேயே முடிந்தவரை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுடைய பணி நியமன ஆணைகள் அந்தந்த செவிலியர்களுடைய சொந்த மாவட்டங்களில் உள்ள JOINT DIRECTOR OF HEALTH SERVICE அல்லது DEPUTY DIRECTOR OF HEALTH SERVICE அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும்.. சொந்த மாவட்டத்தில் காலி பணி இடங்கள் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள காலி பணி இடங்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டு இருக்கும் .

இந்த பணி நியமன ஆணைகளுடன் பணி நியமனம் பெற்ற செவிலியர்களின் தொலைபேசி எண்களும் இணைத்து அனுப்பப்பட்டிருக்கும். அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு தொலைபேசி வாயிலாக பணியில் இணைய வருமாறு அழைப்பு விடுக்க படும்.

தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த இமெயில் முகவரிக்கு ஆணை வரவில்லை என்று குழப்பம் அடைய வேண்டாம் . கண்டிப்பான முறையில் ஓரிரு நாட்களில் தொலைபேசி வாயிலாக அழைப்பு வரும்.

முடிந்தால் தங்களுடைய சொந்த மாவட்டத்திலுள்ள துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களுக்கு ஆணை வந்துள்ளதா என்று கேட்டு உறுதி செய்து பணியில் இணையவும். அப்படி அங்கே வரவில்லை என கூறும் பட்சத்தில் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்கவும் . பதற்றமடைய வேண்டாம் .

மேலும் எந்த CUT OFF எண் வரை இந்த 1000 செவிலியர்கள் நியமிக்க பட்டார்கள் என்ற விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.


CATEGORY MARKS OUT OF 1000 NURSES POST FIRST PHASE. GT                    -63.00 -01.09.1998
BC                    -63.00 -06.07.1998
MBC & DNC  -63.00 -28.05.1978
BCM               -57.00 -24.09.1990
SC                   -62.50 -07.02.1976
SCA                -59.00 -22.06.1994
ST                    –53.00 -11.11.1995


புதிதாக செவிலியர் நியமனம்-1323

இதையும் தாண்டி மேலும் 1323 செவிலியர்கள் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SECOND BATCH POSTING CUT OFF -1323 STAFF NURSES
GT - 61.50 - 01.09.1998
BC - 61.50 - 06.07.1998
MBC&DNC- 61.00 -28.05.1978
BCM -54.00 -24.09.1990
SC -61.00 -07.02.1976
SCA -57.00 -22.06.1994
ST -51.50 -11.11.1995

இரண்டாம் கட்ட செவிலியர் பணி நியமனத்திற்கான (நியமிக்கப்பட்டால்) அதற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் இங்கு தரப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணி நியமன ஆணைகள் செவிலியர்களுக்கு அனுப்ப பட்டால் தகவல் தெரிவிக்கப்படும் .

மேலும் இது முற்றிலும் தற்காலிக பணி நியமனம் என்ற சில தகவல்கள் பரப்பப்படுகின்றன . இது போன்ற அசாதாரண சூழலில் இவ்வாறான பரப்புரைகள் வருத்தமளிக்க கூடிய ஒன்றாகும் .

தமிழக அரசும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களும் இதுவரை தமிழக அரசால் முறையாக MRB மூலம் நியமிக்க பட்ட எந்த ஒரு செவிலியரையும் பாதிக்க பட விட்டதில்லை .

ஏகம் முதல் கடந்த வருடம் வந்த வழக்குகள் வரை செவிலியர்களுக்கு தோளோடு தோள்நின்று அரசு ஆதரவு கரம் நீட்டி காப்பாற்றியே வந்துள்ளது.
பிரச்சனைகள் இருக்கின்றன ஆனால் அதை பேச இது நேரமில்லை கண்டிப்பாக நல்லதே நடக்கும் .

அனைவருக்கும் தகவல் கொண்டு சேர்ப்பது சிரமாக இருக்கின்ற காரணத்தால் TELEGRAM என்ற அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் PLAY STORE இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து
தங்கள் மொபைல் எண்ணை கொண்டு LOGIN செய்து பின்பு இந்த லிங்கை கிளிக் (https://t.me/tnfwebsite) செய்து இந்த குரூப்பில் இணைத்து கொள்ளவும். இது வரும் காலத்தில் வரும் செவிலியர் சம்மந்தமான தகவல்கள் தங்களை வந்தடைய எளிதாக இருக்கும்.
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
TNFWEBSITE
https://t.me/tnfwebsite
ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91
8838 6848 83


Sunday, 29 March 2020

செவிலியர்களுக்கு ஆணைகள் அனுப்ப பட்டு விட்டன . மூன்று நாட்களுக்குள் பணியில் இணைய ஆணை

கொரோனா  பாதிப்பு  காரணமாக  1000 செவிலியர்களுக்கு  பணி  நியமன  ஆணைகள்  தயார்  செய்யப்பட்டு  அனுப்ப பட்டு  கொண்டு  இருக்கிறது . அனைத்து  துணை (JD)  மற்றும்  இணை  (DD) இயக்குனர்  அலுவலங்களுக்கு  ஆணைகள்  அனுப்ப பட்டு  விட்டன .

துணை மட்டும் இணை இயக்குனர் அலுவலகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு வர வாய்ப்பிருக்கிறது.

எனவே தேர்வு செய்யப்பட்ட சொல்லி அனைவரும் பணியில் இணைய தயாராக இருக்கவும்.

பெரும்பாலும் 63 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அதிக வாய்ப்புள்ளது

நாம் தேர்வு செய்யப்பட்டு விட்டோமா  என்பதில் குழப்பம் இருந்தால் தங்கள் எக்ஸாமினேஷன் நம்பர் மற்றும் பெயரை தெரிவித்தால் முடிந்தவரை சரியான தகவலைக் கேட்டு கூறுகிறோம்.

பணியில் இணைய செல்லும் போது கீழ்க்கண்ட சர்டிபிகேட்டுகளை கையோடு எடுத்துச் செல்லவும்.அதன் உண்மைத்தன்மை அங்கேயே பரிசோதிக்கப்பட்டு பணியில் இணைய அனுமதிக்கப்படுவார்.
(பணியில் இணைய செல்லும்போது இந்த சர்டிபிகேட்களில் ஜெராக்ஸ் களை அட்டஸ்ட்  வாங்கி கொண்டு செல்லவும்) 
(2019 EXAM WRITTEN CANDIDATES)

ரவி  சீத்தாராமன்  
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91
  

Saturday, 28 March 2020

தமிழக சுகாதாரத் துறையில் அதிரடி பணி நியமனங்கள் கொரோனாவை ஒழிக்க

தமிழக சுகாதாரத்துறையில் சீரான சிறப்பான கொரானா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக மாண்புமிகு   தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் போர்க்கால அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள் எம்ஆர்பி மூலம் நிரப்ப ஆணையிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் கொரோனாவை பார்த்து திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக
சுகாதாரத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக கொரோனாவிர்கு  எதிரான போரில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போதுள்ள 144 தடை உத்தரவு மற்றும் போக்குவரத்து காரணிகளால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும் அவர்கள் ஈமெயில் முகவரிக்கு ஆணை ஓரிரு நாட்களில் அனுப்பப்பட உள்ளது.

கடந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட 2345 செவிலியர்கள் தொடர்ச்சியாக அடுத்த மதிப்பெண்களில் உள்ளவர்கள் இதில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நமக்குத் தெரிந்தவரை அனைத்து வகையினருக்கும் 63 மதிப்பெண்கள் இருந்தால் தேர்வு செய்யப்பட அனேக வாய்ப்புள்ளது.


ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91

Wednesday, 25 March 2020

புதிதாக 1000 செவிலியர்கள் நியமனம்

மாண்புமிகு  சுகாதாரத்துறை  அமைச்சர்  அவர்கள்  ஆணையின்  பேரில்  தமிழகம்  முழுவதும்  புதிதாக  1000 செவிலியர்கள்  MRB மூலம்  நியமிக்க  பட  இருக்கிறார்கள் .







 இதற்கான  பணிகள்  துரிதகதியில்  நடந்து  வருகிறது . மேலும்  இந்த  செவிலியர்கள்  இறுதியாக  நியமிக்க பட்ட  செவிலியர்களுக்கு  (2300 பேர்)    கீழ் தொடர்ச்சியான  மதிப்பெண்  பெற்ற  செவிலியர்கள்  இட  ஒதுக்கீடு  அடிப்படையில்  1000 செவிலியியர்கள்  பட்டியல்  தயார்  செய்யப்பட்டு  உள்ளது . அநேகமாக தற்பொழுது  உள்ள  அசாதாரண  சூழ்நிலை  காரணமாக  நேரடியாக  பணி  நியமன  ஆணைகள்  அனுப்ப பட்டு  பின்பு  CERTIFICATE VERIFICATION  போன்ற  அரசு  பணி  நியமன  நடைமுறைகள்  பின்னர் பின்பற்ற  பட  வாய்ப்புள்ளது .


மேலும்  மற்ற  விவரங்கள்  மற்றும்  பணி  நியமனம்  பெற  உள்ள  செவிலியர்கள் போன்ற  தகவல்கள்  ஓரிரு  நாட்களில்  தெரிவிக்க படும் .


ரவி  சீத்தாராமன்
9789 3435 91 

Friday, 13 March 2020

MRB செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு

விரைவில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் 300க்கும் மேற்பட்ட எம்ஆர்பிசெவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, 7 February 2020

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்

நமது செவிலியர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக கீழ்க்கண்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாக தவறான பொய்யான தகவல்கள்  பரப்பப்படுகிறது.

ஆனால் உண்மையில் இவ்வாறான பணிகள் இடங்கள் எதுவும்உருவாக்கப்படவில்லை.



Vacancies available in that following places.

(Only for regular staff nurses)

Maninagaram 
ESI dispensary
Madurai city

Palanganatham 
ESI dispensary
Madurai city
 
 Pls forward to your Frnds circle

           🌹Thank you🌹




Vacancies available in that following places.

(Only for regular staff nurses)

Kovai medical college

Pudhukottai medical college

Thirupur head quarters hospital

Aranthangi GH
Puthukottai district

Rajapalayam GH
Virudhunagar district

Sivakasi GH
Virudhunagar district

Sivakangai medical college

Madurai rajaji government hospital.

Palani GH
Dindugal district.

Thengasi GH
Thengasi district

Aathur GH
Dindugal district

Erode head quarters hospital
Erode district

Paramakudi GH
Ramnathapuram district.

Kovilpatti GH
Virudhunagar district.

Pattukottai GH
Tanjore district

Melur GH
Madurai district

Dindugal head quarters hospital

Virudhunagar head quarters hospital

Uselampatti GH
Madurai district

Theni medical college

(pls forward to your Frnds circle)

          🙏thank you🙏

Wednesday, 15 January 2020

Friday, 3 January 2020

800 மேற்பட்ட MRB செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு







மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் ஒரே நேரத்தில் முதல் முறையாக தமிழகத்தில் புதிதாக திறக்கபடவுள்ள  ஆறு மருத்துவ கல்லூரிகளாலும்  மற்றும் ஏற்கனவே உள்ள காலி பணி இடங்கள் என அனைத்தையும் சேர்த்து விரைவில் தோரயமாக ஓரிரு மாதங்களில் 800 மேற்பட்ட MRB செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

இதை பற்றிய அதிகார பூர்வ தகவல் வந்தவுடன் தெரிவிக்கபடும்.

ரவி சீத்தாராமன்
WWW.TNFWEBSITE.COM
9789 3435 91