Friday, 29 November 2019

செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை

2300 மேற்பட்ட செவிலியர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை

வரும் இரண்டாம் தேதி அன்று மாண்புமிகு  தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள் மற்றும் மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் திரு விஜய் பாஸ்கர் ஐயா அவர்களால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களுக்கு நேரடி பணி நியமன ஆணை சென்னையில் வைத்து வழங்கப்பட உள்ளது.

பணி நியமன ஆணை பெற தகுதியான நபர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து தமிழக அரசின் கடுமையான முயற்சியால் இந்த இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு  நேரடி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

ரவி சீத்தாராமன்
9789 3435 91

Tuesday, 19 November 2019

2345 பேர் நியமனம்-செவிலியர்களை நியமிக்க நீதிமன்றம் ஆணை

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் MRB தேர்வில் தேர்வு பெற்றதாகவும் எனவே எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் குறைவான
மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் 65 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் எனவும் எனவே தேர்வு வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் எனவே பணி நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி  செய்யப்படுவதாகவும் மாண்புமிகு நீதியரசர்கள் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Saturday, 16 November 2019

பணி நியமன ஆணைகள்1458 முதல் MRB TO REGULAR




பணி நிரந்தரத்தை நோக்கி காத்திருக்கும் எம்ஆர்பி செவிலியர்களுக்கு நேற்று முதல் நேரடி பணி நியமன ஆணைகள் அனுப்பப்படுவதாக தகவல்.

எம்ஆர்பி செவிலியர்கள் தங்களுக்கான பணி நியமன ஆணைகள் வரப் பெற்றுள்ளதா என்பதை தங்களுக்குரிய இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.


  எந்த எண்ணிக்கை வரை பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது மேலும் எந்த எண் வரை அனுப்பப்படும் போன்ற தகவல்கள் ஓரிருநாளில் அப்டேட் செய்யப்படும்.

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால்  தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளது.

 இதன் மூலம் வரும் மாதங்களில் 500 முதல் 1000 வரை கூடுதலான செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.


ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91

Wednesday, 13 November 2019

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை






தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதற்கட்டமாக தலா ரூபாய் 100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு. மேலும் ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் என ஆறு மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.


மத்திய அரசு சார்பில் தலா ரூபாய் 195 கோடியும், மாநில அரசு சார்பில் தலா ரூபாய் 130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 



Sunday, 10 November 2019

MRB TO REGULAR- MRB NEW POSTING

MRB யில் அடுத்து பணி நிரந்தரதிற்காக காத்திருக்கும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்ப பட இருப்பதாக தகவல். அடுத்து உள்ள 1458 MRB NO முதல் 2000 குள் அனுப்ப பட வாய்ப்பு இருக்கிறது.  நமக்கு கிடைத்த அதிகாரபூர்வ மற்ற தகவல் 1939 வரை என்பது.

அதே போல் MRB தேர்வு எழுதி காத்திருக்கும் 2345 செவிலியர்களும் ஓரிரு வாரத்தில் பணி நியமன ஆணைகளை பெறுவார்கள் என தகவல்.


ரவி சீத்தாராமன்
9789 3435 91

பழையதே தொடரும்

நமது  ANDROID APP கிற்காக கொண்டு வந்த இனியதள பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் எளிதாக இல்லை என பலர் கூறியதன் காரணமாக முன்னர் இருந்த மாதிரியே இனியதளம் மாற்ற பட்டு உள்ளது/