Saturday, 8 December 2018

செவிலியர்களுக்கு புதிய சீருடை

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நர்சுகள் சங்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு ஆகும்.









கடந்த 15 வருடங்களாக அரசாணைகளில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் பெயரே வெளிவராத நிலையில் தற்போது தலைப்பிலேயே தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கோரிக்கை என வர வைத்து இருப்பது மிகச்சிறப்பான சீரிய முயற்சியாகும்.

செவிலியர்களின் பணியில் பழமையை புகுத்தி, அடிமைத்தனத்தை நிலைக்க வைத்திருப்பதில் இந்த சீருடைக்கும் ஒரு பங்கு உண்டு.

செவிலிய பயிற்சியை இந்தியாவிற்கே வழங்கி முன்னோடியாக இருந்த தமிழகம் செவிலியர் சீருடை கூட மாற்றாமல் இருந்தது நமது பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொண்டிருந்தது.

ஆனால் தற்போதைய செவிலியர் சங்கத்தின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் விளைவாக இந்த சீருடை மாற்ற அரசாணை வந்துள்ளது என்பதை யாராலும் இங்கு மறுக்க இயலாது.

குறிப்பாக அதிகாரிகள் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்துகொண்டிருந்தபோது, நமது சங்கம் சீருடைகளை ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கு தைத்து, அணிவித்து, அதிகாரிகளின் முன்நிறுத்தி, இதுதான் நாங்கள் கேட்கும் சீருடை என காட்டியது தலைமைப்பண்பின் செயல்பாடுகளின் மிக சிறப்பான முடிவு ஆகும்.

இங்கே சீருடையை மட்டும் காணும் நாம் அதற்காக எடுத்த சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும், வெள்ளைத்தாளில் எழுதி கொடுப்பதற்கே சிரமப்படும் நாம் இத்தகைய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

நமது ஷிப்ட் பணிக்கான அரசாணை பெற்றபோது  செய்ய தவறிய ஒரு பணியை இப்போது நாம்  கண்டிப்பாக செய்ய வேண்டி இருக்கிறது  அது இந்த சீருடை மாற்றத்திற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆரம்பத்திலிருந்து,  முறையாக, காலவரிசைப்படி, புத்தகமாக எழுதி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெற்றது என்பதை இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகால தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும். அதே நேரத்தில் சில செயல்கள் விமர்சனத்திற்கு உரியதாகவும் இருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.

மேலும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் எதிர்கால நோக்கங்களில்  அனைத்து செவிலியர்களும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 1) ஒப்பந்த முறையை ஒழிப்பது 2) செவிலிய பணி அல்லாத பணிகளை வரையறுப்பது மற்றும் 3) ஆறாவது ஊதியக் குழுவில் கோட்டைவிட்ட செவிலியர்களின் ஊதியத்தை மீண்டும் பெறுவது ஆகும்.

இந்த குறைபாடுகளை சரி செய்ய இதுபோலவே முயற்சி எடுத்து செவிலியர் சங்க வரலாற்றில் பொற்காலமாக இக்குழுவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செவிலியர்களின் விருப்பமாகும்.

ம. உமாபதி.

Sunday, 18 November 2018

புதிய ரெகுலர் பணி இடங்கள்

தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்…
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் சீாிய முயற்சியால்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சாிடம் தொடா்ந்து கேட்டுக்கொண்டதின் பலனாக,தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் உள்ள செவிலிய பற்றாக்குறையை நீக்கி புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கித்தர வேண்டினோம்.

மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும் நமது கோாிக்கைகளை கருணை கூா்ந்து  பாிசீலித்து தற்போது மூன்று மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் புதிய செவிலிய பணியிடங்களை உருவாக்கி அரசாணையும் வெளியிட ஆவண செய்துள்ளாா்.

மேற்கண்ட அரசாணையின்படி,புதிய காலிப்பணியிடங்களும்,அதன் விவரங்களும்...

♦  திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனை:

I) செவிலியா்கள்: 161

II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4

III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I:   1

♦ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை:

I) செவிலியா்கள்: 161

II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 3

III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I:   1

♦ தஞ்சாவூா் மருத்துவகல்லூாி மருத்துவமனை,

I) செவிலியா்கள்: 161

II) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II: 4

III) செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I:   1

மொத்தம்:

செவிலியா்கள்: 483

செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II: 11

செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-I: 3

இந்த அரசணையின்படி புதியதாக உருவாக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.

Thursday, 1 November 2018

புதிய பணி இடங்கள்

••••••••••••••••••••••••••••••••••••••••••••
                    தகவல்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.

இன்று (30/10/2018) பிற்பகல்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு சென்னை DMS அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், 69 நபா்கள் செவிலிய கண்காணிப்பாளா் தரம் -I ஆக பதவி உயா்வு பெற்றாா்கள்.

குறிப்பாக திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனையில் பணிபுாியும் சகோதாி.A.லீலா என்பவா் நாளை ஓய்வு பெறும் நிலையில் அவருக்கும் இன்று பதவி உயா்வடைந்து நாளை மாலை பணி நிறைவு பெறுகிறாா்.இதன்மூலம் ஒரு பதவி உயா்வுக்கான அனைத்து சலுகைகளும்  அவருக்கு கிடைக்கும் என்பதில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I பதவி உயா்வுக்கான கோப்பு கடந்த மூன்று மாதங்களாக இழுபறியில் இருந்த நிலையில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் கடந்த ஒரு வாரமாக பிரயத்தனப்பட்டு முயன்றதின் பலனாக  இக்கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தொிவித்துக்கொள்கிறோம்.

இந்நிலையை அடைய பேருதவி செய்த மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,சுகாதர முதன்மைச்செயலாளா்  அவா்களுக்கும்,துறை உயா் அலுவலா்களுக்கும், மற்றும் துறை நிா்வாக அலுவலா்களுக்கும் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனப்பூா்வ நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.

விரைவில், கூடுதலாக செவிலியா்கள் ,1500 செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II, மற்றும் 600  செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ஆகியோா்களுக்கான புதிய காலிப்பபணியிடங்களை உருவாக்கி தர (New Post Creation) அரசிடம் இன்றுமுதலே முயற்சியை தொடங்கியுள்ளோம்.

இதன்மூலம்,இனிவரும் காலங்களில் நமது செவிலியா்கள் ஏறக்குறைய 23 வருடங்களிலேயே செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II என்ற பதவி உயா்வை அடைவா் என உறுதிபட சொல்லலாம்.

என்றென்றும் செவிலியா் நலனில் அக்கறையுடன் உங்கள் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
                      நன்றி

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Tuesday, 25 September 2018

MRB TO REGULAR

MRB மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் செவிலியர்களில் மேலும் 228 செவிலியர்களுக்கு நாளை DMS வளாகத்தில் பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பணி நிரந்தரம் பெற உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துக்கள்.


பணி நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் செவிலியர்களின் பெயர் பட்டியல்



Thursday, 13 September 2018

950 MRB CERTIFICATE VERIFICATION

MRB செவிலியர்களுகு கடந்த வருடம் ஒத்திவைக்கபட்டு இருந்த சான்றிதல் சரிபார்ப்பு மீண்டும் வரும் 17 முதல் 25 நடைபெற உள்ளது.


இதன் பின்னர் தகுதி வாய்ந்த செவிலியர்களுக்கு சுகாதார துறையில் செவிலியராக பணிவழங்கப்படும் என தகவல்கள் தெரிவிகின்றன.

கீழ்க்கண்ட செவிலியர்கள் சான்றிதல் சரிபார்ப்புக்கு அழைக்கபட்டு உள்ளனர்.


Saturday, 18 August 2018

Tuesday, 24 July 2018

அரசு செவிலியர் பட்டயப் படிப்பு


தமிழகத்தில் செவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 3,500 விண்ணப்பங்கள் மாணவர்களால் பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ்
கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2) ஆயிரம் இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், காஞ்சிபுரம், கடலூர்,
ராமநாதபுரம், திண்டுக்கல், ஊட்டி திருப்பூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 8
இடங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
 
இது தவிர www.tnhelath.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலும்,
விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 300 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின
 
மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களைச் சமர்ப்பித்து
விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
 
முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 3,500 விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஜூலை 30 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 30-ஆம் தேதி
கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர) வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் 

 

Monday, 2 July 2018

Sunday, 24 June 2018

தயார் நிலையில் புதிய செவிலிய இடங்கள்






தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காலிப்பணியிடங்களில் புதிதாக 4 ஆயிரம் ஸ்டாப் நர்சு பணியிடங்களை இன்னும் 2 மாதத்தில் நிரப்ப இருக்கிறோம். அடுத்து 1,500 எம்.பி.பி.எஸ். டாக்டர்களை நியமிக்க இருக்கிறோம். அத்துடன் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

ரூ.1,685 கோடி நிதியில் சர்வதேச தரத்தில் 17 ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த இருக்கிறோம். மேலும் உலக வங்கி நிதி உதவி திட்டத்தில் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.2,685 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 89,903 நோயாளிகளுக்கு ரூ.168 கோடி மருத்துவ சேவைக்காக செலவிடப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 44 சி.டி.ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ., 11 கேத்லாப், 15 கோபால்ட், 9 மீனாக்யர், 900 சிமென்ஸ் செல்கவுன்ட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகம் கேட்பதை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில்,“திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியமாக ரூ.18 கோடி மதிப்பில் ‘லீனாக் ஆக்சிலேட்டர்’, சி.டி.ஸ்டுபிலேட்டர் மற்றும் பிரேக்ய தெரபி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை 3-ம் புற்றுநோயை கண்டறிவதோடு மட்டுமல்லாது அவற்றை குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவிகள். இதனை ஏர்போர்ட் அதாரிட்டி வழங்கி இருக்கிறது. இதுதவிர மற்ற உபகரணங்கள், கட்டிடம் என அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.24 கோடி திருச்சி அரசு மருத்துவமனைக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Saturday, 9 June 2018

4000 புதிய செவிலியர்கள்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தேவைக்காக புதியதாக 4 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நரசிம்மன், தமிழக மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

800 பணி இடங்கள்-தோற்றுவிக்க அல்ல தொடர அனுமதி




 

இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவத்துறையில் வந்த ஒரு அரசு ஆணையில் கடந்த 2012 முதல் இதுவரை பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு அரசு ஆணைகளின் கீழ் தோற்றுவிக்கபட்ட பல்வேறு பணி இடங்களுக்கு நிர்வாக ரீதியா தொடர அனுமதி அளித்து நிதி ஒதுக்கிடு தொடர்பாக ஒரு சுற்றிக்கை வெளியிடபட்டது.

அதில் குறிப்பிடப்பட்ட அரசு ஆணைகளின் கீழ் ஏற்கனவே மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், மற்றும் இதர பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கபட்டு தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு வரும் நிதி ஆண்டிற்கு நிதி ஒதுக்கிடு செய்து வெளியிடபட்ட ஆணையை தவறாக புதிய பணிடங்கள் உருவாக்கபட்டு உள்ளதாக தகவல்கள் பரப்பபடுகிறது.


எனவே இதனை குழப்பி கொள்ள வேண்டாம்.

Tuesday, 22 May 2018

MRB TO REGULAR


விரைவில் 200 மேற்பட்ட MRB செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.

Tuesday, 15 May 2018








சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது தளத்தில் அப்டேட் செய்ய இயலாமல் இருந்தது..


தற்பொழுது அது சரிசெய்ய பட்டு விட்டது.


இனி வழக்கம் போல் தகவல்கள் தரவேற்றம் செய்யப்படும்

Sunday, 29 April 2018

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கேரள அரசு! - வேலைநிறுத்தத்தைக் கைவிட்ட செவிலியர்கள்



கேரளாவில், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்கள்.அனைவருக்கும் குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவந்தது. இதை வலியுறுத்தி, கேரளா முழுவதும் உள்ள செவிலியர்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இதனால், மருத்துவ சேவைகள் முழுமையாக முடங்கின. 
அதையடுத்து, மாநில அரசும் தொழிலாளர் நலத்துறையும் செவிலியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டதால், போராட்டம் முடிவுக்குவந்தது. மார்ச் 31-ம் தேதிக்குள் அவர்கள் விரும்பியபடி ஊதியம் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், நர்ஸ்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேரள மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
அதனால் அதிருப்தி அடைந்த செவிலியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். ஒருங்கிணைந்த நர்ஸ்கள்.கூட்டமைப்பு என்கிற அமைப்பின் சார்பாக, 24-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் நர்ஸ்கள் பேரணியாகப் புறப்பட்டு 8 நாள்களுக்குப் பின்னர் திருவனந்தபுரம் சென்று, சட்ட மன்றத்தின் முன்பாகப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். 

இந்தப் போராட்டத்தால், மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன், செவிலியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தினார். அதில் பங்கேற்ற நர்ஸ்கள், பிரதிநிதிகள், ’தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 20,000 ரூபாயை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்கிற ஒற்றை கோரிக்கையை முன்வைத்ததுடன், அதில் உறுதியாக இருந்தார்கள்

அதைத் தொடர்ந்து, நர்ஸ்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமாக 20,000 ரூபாய் என்பதை அரசு அறிவிக்கையாக வெளியிட்டது. நர்ஸ்களுக்கு மட்டும் அல்லாமல், மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றிய துணை நர்ஸ்களுக்கும் இந்தச் சம்பளம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

Wednesday, 11 April 2018

3261 TO 9442 MRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு



நாளை முதல் வரும் 20 ஆம் தேதி முடிய
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க:

கண்டிப்பாக ஒரு வருடம் தற்பொழுது பணி புரியும் இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும்.

தங்கள் பணி ஆணையை தங்கள் நிலையத்தில் அட்டெஸ்ட் பெற்று கொண்டு வரவேண்டும்.

சர்விஸ் பர்டிகுலர்ஸ் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொண்டுவரவேண்டும்.

www.tnfwebsite.com





Thursday, 29 March 2018

MRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு


முதல் 3260 MRB ரேங்க் வரை உள்ளவர்கள் மட்டும்

தேதி: 02.04.18 முதல் 07.04.18 வரை
 
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க:
 
கண்டிப்பாக ஒரு வருடம் தற்பொழுது பணி புரியும் இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும்.
 
தங்கள் பணி ஆணையை தங்கள் நிலையத்தில் அட்டெஸ்ட் பெற்று கொண்டு வரவேண்டும்.
 
சர்விஸ் பர்டிகுலர்ஸ் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொண்டுவரவேண்டும்.

Ravi Seetharaman
Cell: 9789 3435 91




www.tnfwebsite.com

Tuesday, 27 March 2018

MRB TO REGULAR-150 + 26 MEMBERS

MRB மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு முதல் கட்டமாக நாளை DMS வளாகத்தில் பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.




 
 
 

Saturday, 3 March 2018

MRB REGULAR

MRB மூலம் நியமிக்க பட்ட செவிலியர்களின்  MRB S.NO 1388 வரை உள்ள செவிலியர்களின் சர்விஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்திசெய்து தங்கள் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று JD மற்றும் DD அலுவலகத்தில் சர்மர்பிக்கவும். இதனை மெயில் மூலமாகவும் 2/3/2018 முன்னர் அனுப்ப வேண்டியும் அதேபோல் HARD காப்பியை தபால் மூலமாக அனுப்பவும் DMS அலுவலகத்தால் கேட்டு கொள்ள பட்டு உள்ளது.

இவ்வாறான தகவல்கள் பெரும்பாலும் கோரபடுவது பணி நிரந்தரம் செய்வதற்காகவே கோரப்படும். எத்தனை பேருக்கு என்பது விரைவில் தெரியவரும்.
 
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் FORMAT
 
 
 
 

Sunday, 11 February 2018

மணிமாலா மரணம்



திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த நமது உறவான,கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்றுத் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

மருத்துவர் முறையாக பணிக்கு வராததற்கு செவிலியற்கு விளக்கம் கேட்டு குறிப்பானை(மெமோ) இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கபட்டு உள்ளது.

மேலும் உயர்மருத்துவ அலுவலர் அவர்கள் செவிலியரை முறையற்ற வார்த்தைகளால் மனம் புண்படும்படியாக பேசியுள்ளார்.
 
இதனால் மனம் மொடிந்த செவிலியர் தூக்கிட்டு தன் இன்னுயிரை மாய்த்து கொண்டார்.
தற்கொலை தவறு என்றாலும்
 
இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட காரணம்
 
மருத்துவர் பணிக்கு வருவதையும்/வராததையும் கண்காணிப்பது யாருடைய பணி ?
அவ்வாறு மருத்துவர் பணிக்கு வரவில்லை என்று செவிலியர் தனது உயர் அதிகாரிக்கு தெரிவித்தால் அதன் பின்னர் அந்த மருத்துவர் அந்த செவிலியர் எவ்வாறு இணக்கமாக பணி புரிய முடியும்?
 
செவிலியருக்கு கீழ் பணி நபர்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றாலும் மேல் பணி புரியும் மருத்துவர்கள் சரியாக பணியை செய்யாவிட்டாலும் செவிலியர்கள் தான் பாதிக்கபட வேண்டுமா?
 
மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் அரசுக்கும் எந்த பிரச்னையும் வராமல் செவிலியர்கள் ஒரு சுமைதாங்கி போல் இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சுமந்து வருகின்றனர். இதை அனைவரும் அறிவர்.
 
ஜாதி என்ற ஒன்றால் தான் அதிகாரம் வர்க்கம் அடிமை வர்க்கம் என்ற இரண்டு பிரிவு இருக்கிறது என்ற காரணத்தால் தான் கல்வி எல்லாரும் பெற வேண்டும் இதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்வு கொண்டு வரலாம் என்றால் தற்பொழுது கற்ற கல்வியால் இவர்கள் அதிகாரவர்க்கம் இவர்கள் அடிமை வர்க்கம் என்ற சூழல் வந்து விட்டது.

பொதுவாகவே பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் செவிலியர்களை அடிமைகளாகவே கருதுகிறார்கள் மக்களும் சரி மருத்துவர்களும் சரி.
 
மருத்துவர்கள் இல்லையென்றால் மக்கள் செவிலியர்களை மேல் கோபம் கொள்வார்கள், இதற்கு தீர்வு என்ன?
 
மருத்துவர் இல்லாமல் மருத்துவம் செய்யதால் சட்டப்படி குற்றம்.
அதை செய்யவில்லை என்றால் மக்கள் பார்வையில் அது குற்றம்.

 
மணிமாலா மரணம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
 
இதற்கு காரணமாணவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் இததான் மணிமாலா மரணத்திற்கான விலையா? தீர்வா?
 


மரித்தது மணிமாலா மட்டுமல்ல செவிலியமும் தான்

Sunday, 4 February 2018

பொய்யான போலியான MRB NURSES REQUIREMENT விளம்பரங்கள்

WHATSAPP மற்றும் பல்வேறு இணையதளங்களில் MRB மூலம் விரைவில் செவிலிய தேர்வு நடைபெற இருப்பது போல் தகவல்கல் பரிமாற படுகிறது.
 
அந்த விளம்பரத்தின் உண்மை என்னவெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடபட்ட அரசு விளம்பரத்தில் உள்ள
 
வருடத்தை மற்றும் மாற்றி
 
மற்ற அனைத்து தகவல்களையும் அப்படியே வெளியிட்டு உள்ளனர்.
 
சரியான தகவலை தெரிந்து கொள்ள எப்பொழுதும் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தையே காணவும்.

மெய்யான விளம்பரம்:
http://www.mrb.tn.gov.in/

பொய்யான போலியான விளம்பரம் :-
Staff Nurse Vacancy 2018 Tamil Nadu Government Nursing Vacancies Online Application
Staff Nurse Vacancy 2018

Staff Nurse Vacancy 2018 Tamil Nadu Medical Services Recruitment Board have issued Nursing Vacancies Notification to hire 7243 Nurse Jobs on contract basis. Under the discretion of Member Secretary on 19th April 2018 MRB Staff Nurse Recruitment 2018 Employment Notification has been issued, those who are in search for the latest TN Medical Jobs can check with the advertisement that has been published online at the official website of MRB mrb.tn.gov.in or mebexam.in. As there are huge number of Nursing Jobs in Tamil Nadu, who have completed their Nursing education and awaiting for staff nurse vacancy in TamilNadu 2018 can check with the detailed TN Nurse Recruitment notice before applying online. Once the MRB TN Staff Nurse Recruitment 2018 Result declared candidates will be given posting based on Counselling that will be held at various center arranged by the board.

Staff Nurse Recruitment 2018 TamilNadu

Since its inception in 2012 Medical Services Recruitment Board has been one of the active government agency that is issuing back to back notifications for the Latest TN Medical Jobs that are vacant in Government Hospitals and various govt agency related to Health and Welfare Department of TN. Recently, MRB have released advert for staff nurse vacancy in TamilNadu government hospitals that are vacant in huge number on contractual basis. The decision has come in the wake to implement better medical services to the general public in the state. Online Application will be started from 19th April 2018 so, candidates who are interested can apply online until 11th May 2018 at mrb.tn.gov.in or mrbexam.in.

TamilNadu Medical Recruitment Board Staff Nurse Vacancies
The selection process for Nurse Recruitment in Tamil Nadu will be through the written examination the board have scheduled exam date on 28th June 2018 at various exam centers. So, one has to refer exam pattern and exam syllabus that has been framed by the board. Individuals who are preparing for the Staff Nurse Vacancy 2018 in Government Hospitals can check with the previous question papers to identify Exam Syllabus, Exam Pattern as the question paper will be of the objective type one has to prepare for the exam with the available model papers and sample papers. Hall Ticket for Staff Nurse will be made available online at the official website at mrb.tn.gov.in or mebexam.in.
Organization: Tamil Nadu Medical Services Recruitment Board

Number of Vacancies:7243 Posts

Designation:Staff Nurse

Job Type:Contract

Pay Scale:INR. 7, 700/- Monthly basis and with an increase in INR. 500/- Yearly
AGE:Minimum Age limit for these vacancies is 18 Years and Maximum Age limit is 58 Years
Education Qualification:One must have completed their Nursing Degree or Diploma from recognized college or institute

Exam Pattern:
Duration 2:30 Hours Maximum Marks 100 (Minimum Qualification Marks 35 for Others and 30 for SC/ST)

Exam Centers:Chennai, Tiruchirapalli, Madurai, Tirunelveli, and Coimbatore
Selection Process:Applicants will have to appear in the written test, Initially 451 Staff Nurse Vacancies will be hired and upon requirement rest candidates will be hired. Counselling will be conducted prior to posting

Application Fees:INR. 600/- has to be paid towards application fees

How to Apply Online for Staff Nurse Vacancy 2018 Tamil Nadu:

Candidates can log on to the official website at tn.gov.inFind the link for MRB TN Recruitment 2018Fill up online applicationSubmit application form along with the supporting documents

Important Dates:
Online Registration starts from 19th April 2018
Online Registration ends on 11th May 2018
Written Examination date 28th June 2018

Here we are providing the details of latest govt jobs 2018, Employment News, Careers, Exam Date, Exam Center, Exam Result, Exam Merit List, Cut off Marks, Counselling Date, Exam Pattern, Syllabus, Previous Question Papers, Model Papers, Sample Papers, Hall Ticket, Call Letter, Admit Card, etc.., Get more updates from tnlocaljobs.in

Check TamilNadu Staff Nurse Recruitment 2018 Notification

Apply Online for staff nurse recruitment in TamilNadu 2018

Article Highlights
Staff Nurse Vacancy 2018Staff Nurse Recruitment 2018 TamilNaduTamilNadu Medical Recruitment
Board Staff Nurse Vacancies

Friday, 26 January 2018

"MRB NURSES - NEW POSTING- SOON"


AS PER SOURCES CERTIFICATE VERIFIED CANDIDATE WILL GET POSTING SOON

 
 
 
Ravi Seetharaman
9789 3435 91
 
 

Saturday, 13 January 2018

MRB NURSES-ஊதிய உயர்வு


கடந்த சில நாட்களாக பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி MRB செவிலியர்கள் நடத்திய போராட்டம் மற்றும் நீதி மன்ற வழக்குகின் காரணமாக கூடிய விரைவில் MRB செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.