Sunday, 3 September 2017

சங்கமித்த சங்கம்

 
 
 
 
 
 
 
 தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் 108 வது மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தஞ்சை மாநகரில் நேற்று (01/09/17) இனிதே நடைபெற்று முடிந்தது.. மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திரளான செவிலியர்கள் இக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
இக்கூட்டத்தில் நமது சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர், அமரர் திருமதி. பாப்புராஜன் அம்மையார் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கம் சார்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.. அவை முறையே,
> சங்கத்திற்கென்று தனி வலைதளம், வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்படும்.
> சங்க உறுப்பினர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை மற்றும் குரூப் பாலிசி.
> சங்கத்தின் சார்பில் பருவ இதழ் மற்றும் செவிலியர்களுக்கென்று தனி வருடாந்திர நாட்காட்டி.
மேலும் அரசிடம் முறையிட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அவை முறையே,
1) Online Counseling.
2) ஐந்து கட்ட பதவி உயர்வு.. அப்பதவி உயர்வு பணிமூப்பின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
3) மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான சீருடைப் படிகள் (மாத சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும்) மற்றும் இதர படிகள்.
4) செவிலியர் மீதான குற்றச்சாட்டு விசாரணைக் குழுவில் செவிலியக் கண்காணிப்பாளர் அல்லது நிலைய மூத்த செவிலியர் இடம் பெற ஆணை வழங்கிட வேண்டும். செவிலியர்களுக்கென்று தனி இயக்குநரகம்.
5) மத்திய அரசு செவிலியர்களுக்கு பதவியின் பெயர் (Staff Nurse to Nursing Officer) மாற்றம் செய்யப்பட்டதைப் போன்று தமிழக அரசு செவிலியர்களுக்கும் பதவியின் பெயர் மாற்றம் செய்து ஆணை வழங்கிட வேண்டும்.
6) அரசுப் பணியில் 9 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு அவர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை Service ல் இணைத்து, அவர்களின் பதவி உயர்வுக்கு வழிவகை செய்திடல் வேண்டும்.
7) சீருடை மாற்றத்திற்கு ஆவண செய்திடல் வேண்டும்.
8) தொகுப்பூதியத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மீதமுள்ள 500 செவிலியர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் INC விதிப்படி புதிய செவிலியர்கள், செவிலியக் கண்காணிப்பாளர்கள் நிலை 1 & 2 பணியிடங்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10) செவிலியர் பட்டயப் படிப்பினை முறையான இணைப்புக் கல்வி அளித்து பட்டப் படிப்பாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
11) செவிலியர் மற்றும் செவிலியர் சாரா பணிகளுக்கு( ECG எடுத்தல், OP TICKET போடுதல், ALL REPORTS ENTRY Etc.,) சிறப்பு அரசு ஆணை வழங்கிட வேண்டும். செவிலியர்களின் மன அழுத்தத்தை குறைத்திட வழிவகை செய்திடல் வேண்டும்..
12) சங்கத் தனிநிலை விதியில்(BY LAW) காலத்திற்கேற்ற மாற்றத்தினை கொண்டு வர குழு அமைத்தல்.
13) தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.20,000 /- மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கைகேற்ப ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
14) ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்து, ஏழாவது ஊதியக் குழுவில் மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
15) தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய காலத்தை பணிக்காலத்துடன் இணைக்க வேண்டும்.
16) அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாவலர்களை நியமித்து செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடல் வேண்டும்.
17) அரசு செவிலியப் பயிற்சிப் பள்ளியில் மீண்டும் ஆண் செவிலிய பட்டயப் பயிற்சியை தொடங்கிட வேண்டும். பயிற்சி மாணவர்களின் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
18) சென்னை எழும்பூரில் உள்ள லாலி சீமாட்டி செவிலியர்களுக்கான காலியிடத்தில் குடியிருப்பு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும், சங்க கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிடவும் ஆவண செய்திட வேண்டும்.
19) TAMIL NADU NURSES COUNCIL ற்கு ஜனநாயக முறைப்படி தேர்ல் நடத்தி, அதன் நடவடிக்கையை பலப்படுத்திட ஆவண செய்திடல் வேண்டும்.
20) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர் குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
21) DGNM முடித்த 134 ஆண் செவிலியர்களுக்கு MRB ல் தேர்வு எழுத அனுமதி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தில் பல செவிலியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். கூட்டமானது மாலையில் இனிதே நிறைவு பெற்றது..

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.