தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Sunday, 24 December 2017
Wednesday, 13 December 2017
GRADE II மாறுதல், பணி உயர்வு, கலந்தாய்வு ,மற்றும் CB TO REGULAR கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.
செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான இடமாறுதல் கலந்தாய்வு
சென்னை DMS அலுவலக வளாகத்தில் வருகிற 16/12/2017( சனிக்கிழமை நடைபெறும்.
சென்னை DMS அலுவலக வளாகத்தில் வருகிற 16/12/2017( சனிக்கிழமை நடைபெறும்.
அதைத்தொடா்ந்து வருகிற 18/12/2017( திங்கள்கிழமை) செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ற்கான பதவி உயா்வு கலந்தாய்வும் மேற்கண்ட இடத்தில் நடைபெறும்.
அதற்கடுத்தகட்ட நிகழ்வாக செவிலிய கண்காணிப்பாளா் நிலை-II ன் மூலம் உருவாகும் காலிப்பணியிடங்களில் மீதமுள்ள ஒப்பந்த செவிலியா்கள் (CB to Regular) நிரந்தரப்படுத்தும் கலந்தாய்வு நடைபெறும்.
செவிலிய கண்காணிப்பாளா் நிலை-I ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தமிழக செவிலிய சமூகத்திற்க்கு தொிவித்துக்கொள்கிறோம்.
# நன்றி #
இப்படிக்கு,
K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,
மாநில பொதுச்செயலாளா்,
K.சக்திவேல்,
மாநில தலைவா்,
மாநில தலைவா்,
S.காளியம்மாள்,
மாநில பொருளாளா்,
மாநில பொருளாளா்,
மற்றும்
அனைத்து மாநில நிா்வாகிகள்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.
Thursday, 16 November 2017
CB TO REGULAR COUNSELLING
DATE OF COUNSELLING - 17/11/2017
TIME OF COUNSELLING - 11.30 AM
PLACE OF COUNSELLING- DMS CHENNAI
Number of members will get REGULAR- 187+31= 218
Friday, 10 November 2017
Tuesday, 31 October 2017
MRB செவிலியர் நியமனம்-புதிய பெயர் பட்டியல்வெளியீடு
MRB_செவிலியர்_நியமனம்
MRB தேர்வு எழுதி கடந்த டிசம்பர் மாதம் தங்கள் சான்றிதல் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு MRB யில் பெயர் பணி நியமனம் செய்வதற்கு முந்திய பெயர் பட்டியல் வெளியிடபட்டு உள்ளது.
இதன் மூலம் சான்றிதல் சரிபார்ப்பு நடைபெற்ற 338 செவிலியர்களுக்கு பணி நியமனம் விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
கீழகண்ட லிங்க் மூலமாக பெயர் பட்டியலை தரவிறக்கம் செய்யலாம்.
http://www.mrb.tn.gov.in/results/recruitment_2015/Nurse_Provisional_Additional_Selection_List_30102017.pdf
www.tnfwebsite.com
www.cbnurse.com
கண்ணீர் அஞ்சலி
நமது மாவட்டத்தில் சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி செவிலியர் திருமதி .ரேவதி காய்ச்சல் நோயால் சிரமப்பட்டு நேற்று இன்ஞெக்சன் ஓபியில் பணி செய்து அச்சமயம் செவிலியரும் மிகவும் நோயுற்று அங்கேயே நம் மருத்துவர்களும் சிகிச்சை அளித்துள்ளனர்.
சிகிச்சை பலனளிக்காமல் போகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி உள்ளனர். மதுரைக்கு செல்லும் வழியிலேயே நம் செவிலியர் இறந்து விட்டார் என்பதை மிகவும் கண்ணீர் கலங்கிய கண்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் சின்னாளப் பட்டி பிஹெச்சி அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மாநில சங்க நிர்வாகிகள் ,
மற்றும்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ் நாடு அரசு நர்சுகள் சங்கம்.
Thursday, 12 October 2017
DIPLOMA NURSING APPLICATIONS
சேவை செய்ய செவிலியம் பயில விருப்பம் உள்ளவர்கள் வரவேற்கபடுகிறார்கள்.
LAST DATE FOR SUBMISSION OF APPLICATION: 23.10.2017 UPTO 5.00 P.M.
Website: www.tnhealth.org / www.tnmedicalselection.org
விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
தகவல் தொகுப்பேடு தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.
Sunday, 8 October 2017
Sunday, 24 September 2017
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
அன்புடையீர்!
இன்று 21.09.17 காலை முதல் நமது மாண்புமிகு தமிழ்நாடு அரசு துணைமுதல்வர் ஐயா அவர்களுடன் சந்திக்கும் பொருட்டு நமது மாநில சங்க நிர்வாகிகள் காத்திருந்தோம்.
_இடையே சில மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாண்புமிகு துணை முதல்வர் ஐயா_ _அவர்களுக்கு மீட்டிங் இருந்ததால் நம்மை சந்திக்க காலதாமதம் ஏற்பட்டது.அதனால் இடையே மாண்புமிகு நமது துறைஅமைச்சரை சந்தித்து நமது கோரிக்கைகளை வழியுறித்தினோம் என்ற செய்தியை விரிவாக மாலையில் தங்கள் அனைவருக்கும் தெரியபடுத்தியிருந்தோம்.
காலதாமதம் ஏற்பட்டதால் நமது மாநில நிர்வாகிகளை மாண்புமிகு துணமுதல்வர் ஐயா வீட்டில் சந்திக்க நேரம் ஒதுக்கி அதிகாரிகள் மூலம் எங்களுக்கு தெரியபடுத்தப்பட்டது.
நாங்கள் மாண்புமிகு துணைமுதல்வர் ஐயா வீட்டிற்கு சென்றபோது,எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் கூட்டம் அலைமோதிய போதிலும், எங்களை அனைவரையும் அலுவலகத்தில் அழைத்து அமரவைத்து பேசும்போது மணி சரியாக 10 pm
நாம் குடுத்த கோரிக்கைகளை நிதானமாக வரி வரியாக படித்து எங்களிடமும் சில கேள்விகளை மாண்புமிகு துணை முதல்வர் ஐயா அவர்கள் வினவினார்.
எத்தனை வருடம் தாங்கள் படிக்கிறீர்கள்,3 1/2 வருடம் படித்தும் ஏன் டிப்ளோமா ஐ டிகிரியாக இன்னும் மாற்றவில்லை, ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒன்மேன் கமிசனில் உங்கள் சம்பள உயர்வு மற்றும் படிகளை ஏன் வாங்கவில்லை என்று வினவினார்.
நாங்கள் தக்க சான்றுகளுடன் எடுத்துக்கூறியவுடன் மிகவும் கவனமாகவும் பறிவுடனும் கேட்டறிந்தபின்னர்,நமது கோரிக்கைகளுக்கான பைனான்ஸ் அப்ருவலுக்கு தாம் ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் எங்கள் முன்னிலையில் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு_ _செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் ,நாளை தாங்கள் சென்னையில் இருப்பீர்களா என்று வினாவினார்,
நமது துறை அமைச்சர் இங்கு தான் இருப்பேன் என்றதும் நாளை காலை 11மணியளவில் நேரம் ஒதுக்குங்கள், நானும் வருகிறேன் செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசலாம் என கூறி ,எங்களிடமும் நாளை உங்கள் துறை அமைச்சர் முன்னிலையில் இன்னும் தெளிவாக பேசி உங்கள் குறைகளை கண்டிப்பாக நிவர்த்தி செய்கிறோம் என்று கனிவோடு கூறினார்கள் நமது மாண்புமிகு துணை முதல்வர் ஐயா அவர்கள் என மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
Sunday, 10 September 2017
MRB மூலம் பணி நியமனம் செய்யபட்ட எங்களுக்கு எப்போது பணி நிரந்தம்
MRB மூலம் தொகுப்பூதிய பணி நியமனம் பெற்ற பெரும்பாலான சகோதரிகள் தொகுப்பூதிய காலமான இரண்டு வருடம் முடிந்த உடன் பணி நிரந்தரம் செய்யபடுவோமா என ஐயம் கொள்கின்றனர்.
ஆணையை முழுவதுமாக ஆராய்ந்தால் விளக்கம் விளங்கும்.
தங்களுக்கு பணி நியமன ஆணையில் இரண்டு வருடம் தொகுப்பூதிய காலமே குறிப்பிடபட்டு உள்ளது என பெரும்பாலான பதிவுகள் தெரிவிகின்றன.
இதுவரை உள்ள நடைமுறை மற்றும் அரசு ஆணை தெரிவிப்பது என்னவென்றால் இரண்டு வருடம் கண்டிப்பான முறையில் தொகுப்பூதியம், அதன் பின்னர்
1. இருக்கின்ற நிரந்தர காலி இடங்கள்(நிரந்தர செவிலியர்கள் பணி ஓய்வு மூலம் ஏற்படுவது)
2. ஏற்படுகின்ற நிரந்தர காலி பணி இடங்கள்(செவிலியர்கள் பணி உயர்வு GRADE II பெறுவதன் மூலம்ஏற்படும் காலி பணி இடங்கள்),
3.உருவாக்க படுகின்ற நிரந்தர காலி பணி இடங்களை (புது மருத்துவகல்லுரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உருவாகத்தை பொருத்து ஏற்படுவது) அவர்கள் சீனியாரிட்டி முறையில் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யபடுவார்கள்.
முக்கிய குறிப்பு தமிழ்நாட்டின் மொத்த நிரந்தர செவிலியர் எண்ணிக்கை ஏறக்குறைய 15000 மேற்பட்டவர்கள்
தொகுப்பூதிய செவிலியர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 8000 மேற்பட்டவர்கள்
தராசு போல ஒருபக்கம் எண்ணிக்கை குறைந்தால் இன்னொரு பக்கம் எண்ணிக்கை ஏறும்.
ஒரு வேளை 2006 செய்யப்பட்டது போல் மொத்தமாக பணி நிரந்தரம் செய்யபட்டாள் தாங்கள் பணி புரியும் நிலையத்திலேயே பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது. நடந்தால்
ஆணையை முழுவதுமாக ஆராய்ந்தால் விளக்கம் விளங்கும்.
தங்களுக்கு பணி நியமன ஆணையில் இரண்டு வருடம் தொகுப்பூதிய காலமே குறிப்பிடபட்டு உள்ளது என பெரும்பாலான பதிவுகள் தெரிவிகின்றன.
இதுவரை உள்ள நடைமுறை மற்றும் அரசு ஆணை தெரிவிப்பது என்னவென்றால் இரண்டு வருடம் கண்டிப்பான முறையில் தொகுப்பூதியம், அதன் பின்னர்
1. இருக்கின்ற நிரந்தர காலி இடங்கள்(நிரந்தர செவிலியர்கள் பணி ஓய்வு மூலம் ஏற்படுவது)
2. ஏற்படுகின்ற நிரந்தர காலி பணி இடங்கள்(செவிலியர்கள் பணி உயர்வு GRADE II பெறுவதன் மூலம்ஏற்படும் காலி பணி இடங்கள்),
3.உருவாக்க படுகின்ற நிரந்தர காலி பணி இடங்களை (புது மருத்துவகல்லுரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உருவாகத்தை பொருத்து ஏற்படுவது) அவர்கள் சீனியாரிட்டி முறையில் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யபடுவார்கள்.
முக்கிய குறிப்பு தமிழ்நாட்டின் மொத்த நிரந்தர செவிலியர் எண்ணிக்கை ஏறக்குறைய 15000 மேற்பட்டவர்கள்
தொகுப்பூதிய செவிலியர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 8000 மேற்பட்டவர்கள்
தராசு போல ஒருபக்கம் எண்ணிக்கை குறைந்தால் இன்னொரு பக்கம் எண்ணிக்கை ஏறும்.
ஒரு வேளை 2006 செய்யப்பட்டது போல் மொத்தமாக பணி நிரந்தரம் செய்யபட்டாள் தாங்கள் பணி புரியும் நிலையத்திலேயே பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது. நடந்தால்
விரைவில் GR II நடந்தால் விரைவில் CB TO REGULAR நடக்கும்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
முக்கிய அறிவிப்பு
சேவை மிகுந்த நமது செவிலிய சொந்தங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் . நமது மாநில நிர்வாகிகள் சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் துறைசெயலாளரை இடைவிடாது சந்தித்து முயற்சி செய்ததன் விளைவாக 800 செவிலிய கண்காணிப்பாளர் நிலை- || பணியிடங்களுக்கு (panel list 6814 முதல் 7770 )வரை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக தங்களது particulars ஐ DMS அலுவலகத்திற்கு அனுப்பவும்.
இதனால் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் விரைவாக காலமுறை ஊதியம் பெறவும் தங்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கிடைக்கவும் சங்கம் சார்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
மேலும் Grade 1 panel வெளிவந்து இரண்டு மாத காலமாகியும் 40 நபர்களின் particulars மட்டுமே வந்துள்ளது. Particulars வராதவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக particulars DMS அலுவலகத்திற்கு அனுப்புமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.
நன்றி
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
💐💐💐💐💐
முக்கிய அறிவிப்பு
சேவை மிகுந்த நமது செவிலிய சொந்தங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் . நமது மாநில நிர்வாகிகள் சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் துறைசெயலாளரை இடைவிடாது சந்தித்து முயற்சி செய்ததன் விளைவாக 800 செவிலிய கண்காணிப்பாளர் நிலை- || பணியிடங்களுக்கு (panel list 6814 முதல் 7770 )வரை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக தங்களது particulars ஐ DMS அலுவலகத்திற்கு அனுப்பவும்.
இதனால் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் விரைவாக காலமுறை ஊதியம் பெறவும் தங்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கிடைக்கவும் சங்கம் சார்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
மேலும் Grade 1 panel வெளிவந்து இரண்டு மாத காலமாகியும் 40 நபர்களின் particulars மட்டுமே வந்துள்ளது. Particulars வராதவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக particulars DMS அலுவலகத்திற்கு அனுப்புமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.
நன்றி
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
💐💐💐💐💐
Sunday, 3 September 2017
சங்கமித்த சங்கம்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் 108 வது மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தஞ்சை மாநகரில் நேற்று (01/09/17) இனிதே நடைபெற்று முடிந்தது.. மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திரளான செவிலியர்கள் இக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
இக்கூட்டத்தில் நமது சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர், அமரர் திருமதி. பாப்புராஜன் அம்மையார் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கம் சார்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.. அவை முறையே,
> சங்கத்திற்கென்று தனி வலைதளம், வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்படும்.
> சங்க உறுப்பினர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை மற்றும் குரூப் பாலிசி.
> சங்கத்தின் சார்பில் பருவ இதழ் மற்றும் செவிலியர்களுக்கென்று தனி வருடாந்திர நாட்காட்டி.
மேலும் அரசிடம் முறையிட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அவை முறையே,
1) Online Counseling.
2) ஐந்து கட்ட பதவி உயர்வு.. அப்பதவி உயர்வு பணிமூப்பின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
3) மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான சீருடைப் படிகள் (மாத சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும்) மற்றும் இதர படிகள்.
4) செவிலியர் மீதான குற்றச்சாட்டு விசாரணைக் குழுவில் செவிலியக் கண்காணிப்பாளர் அல்லது நிலைய மூத்த செவிலியர் இடம் பெற ஆணை வழங்கிட வேண்டும். செவிலியர்களுக்கென்று தனி இயக்குநரகம்.
5) மத்திய அரசு செவிலியர்களுக்கு பதவியின் பெயர் (Staff Nurse to Nursing Officer) மாற்றம் செய்யப்பட்டதைப் போன்று தமிழக அரசு செவிலியர்களுக்கும் பதவியின் பெயர் மாற்றம் செய்து ஆணை வழங்கிட வேண்டும்.
6) அரசுப் பணியில் 9 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு அவர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை Service ல் இணைத்து, அவர்களின் பதவி உயர்வுக்கு வழிவகை செய்திடல் வேண்டும்.
7) சீருடை மாற்றத்திற்கு ஆவண செய்திடல் வேண்டும்.
8) தொகுப்பூதியத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மீதமுள்ள 500 செவிலியர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் INC விதிப்படி புதிய செவிலியர்கள், செவிலியக் கண்காணிப்பாளர்கள் நிலை 1 & 2 பணியிடங்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10) செவிலியர் பட்டயப் படிப்பினை முறையான இணைப்புக் கல்வி அளித்து பட்டப் படிப்பாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
11) செவிலியர் மற்றும் செவிலியர் சாரா பணிகளுக்கு( ECG எடுத்தல், OP TICKET போடுதல், ALL REPORTS ENTRY Etc.,) சிறப்பு அரசு ஆணை வழங்கிட வேண்டும். செவிலியர்களின் மன அழுத்தத்தை குறைத்திட வழிவகை செய்திடல் வேண்டும்..
12) சங்கத் தனிநிலை விதியில்(BY LAW) காலத்திற்கேற்ற மாற்றத்தினை கொண்டு வர குழு அமைத்தல்.
13) தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.20,000 /- மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கைகேற்ப ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
14) ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்து, ஏழாவது ஊதியக் குழுவில் மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
15) தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய காலத்தை பணிக்காலத்துடன் இணைக்க வேண்டும்.
16) அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாவலர்களை நியமித்து செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடல் வேண்டும்.
17) அரசு செவிலியப் பயிற்சிப் பள்ளியில் மீண்டும் ஆண் செவிலிய பட்டயப் பயிற்சியை தொடங்கிட வேண்டும். பயிற்சி மாணவர்களின் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
18) சென்னை எழும்பூரில் உள்ள லாலி சீமாட்டி செவிலியர்களுக்கான காலியிடத்தில் குடியிருப்பு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும், சங்க கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிடவும் ஆவண செய்திட வேண்டும்.
19) TAMIL NADU NURSES COUNCIL ற்கு ஜனநாயக முறைப்படி தேர்ல் நடத்தி, அதன் நடவடிக்கையை பலப்படுத்திட ஆவண செய்திடல் வேண்டும்.
20) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர் குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
21) DGNM முடித்த 134 ஆண் செவிலியர்களுக்கு MRB ல் தேர்வு எழுத அனுமதி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தில் பல செவிலியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். கூட்டமானது மாலையில் இனிதே நிறைவு பெற்றது..
Monday, 14 August 2017
ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு செவிலியர்களுக்கும் சாத்தியமே
“சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து சிந்திக்க வேண்டியவர்களை சிந்திக்க வைத்தால் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு செவிலியர்களுக்கும் சாத்தியமே”
MRB மூலம் தேர்வு செய்ய மருத்துவருக்கு அவர் தாற்காலி அடிப்படையில் நியமிக்கபட்டு உள்ளார் என்று கூறி அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்கபட்ட போது MRB மூலம் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கவேண்டும் என்றும் மேலும் சரியான வழியில் முறையான முறையில் தேர்வு செய்யபடும் பட்சத்தில் அவர்களுக்கு கண்டிப்பான முறையில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கபட்டு உள்ளது.
அதற்கான ஆணை இங்கே தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.
Friday, 28 July 2017
Monday, 17 July 2017
Thursday, 11 May 2017
Saturday, 6 May 2017
Tuesday, 18 April 2017
Thursday, 13 April 2017
பணிமாறுதல் கலந்தாய்வு-19/04/2017-20/04/2017
"கடந்த வருடம்
19/04/2016--------20/04/2016
முறையே நான்கு வருடம், ஒரு வருடம் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்."
FOUR YEAR COMPLETED SENIORS AS ON 19/04/2016
TRANSFER COUNSELING DATE:19/04/2017
TRANSFER COUNSELING DATE:19/04/2017
19/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:
கடந்த வருடம் 19/04/2016 அன்று நான்கு வருடம் நிரந்தர பணியில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.
TRANSFER COUNSELING DATE:20/04/2017
20/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:
கடந்த வருடம் 20/04/2016 அன்று குறைந்தது ஒரு வருடம் நிரந்தர பணியில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.
Thursday, 6 April 2017
Subscribe to:
Posts (Atom)