Tuesday, 29 November 2016

கருத்து பரிமாற்ற செயலியில் பகிரப்பட்ட கருத்துகள்(Whatsapp)







செவிலிய சமூகத்தின் முன்னேற்றதிற்காக பணி நிரந்தரதிற்காக பல்வேறு சிரமங்களுகிடையே பாடுபட்டு கொண்டு இருக்கும் அனைத்து தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு அனைத்து செவிலியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி

கீழ்க்கண்டவை நமக்கு கருத்துபரிமாற்ற செயலியில் வந்தவை.

****** (எண்ணிக்கை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது).*****
           

********(தேதியும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது)******

அன்பார்ந்த செவிலிய சகோதரிகளே!!!!
இன்று நமது சங்கத்தின் மூலம் தெரிவிப்பது என்னவெனில் , நமது சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் சங்க செயலரின் பெறுமுயற்சியுடன் மேற்கொள்ளபட்ட Creation posts for Gr l-13,Grll -260ஆகியவை நமக்கு நமது அரசின் GO NO272/25.11.16 படி பெறப்பட்டதுஎன்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.(Go-வின் விளக்கவுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

இதன் படி New creation -13+vaccines ஏறத்தாழ-70ம் ,G-ll New creation-260+Retirement+promotion vaccines ஏறத்தாழ 400 பேருக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் மேலும் New creation staff nurse -Regular post ஏறத்தாழ 750 க்கு Go-டிசம்பர் இறுதிக்குள் அரசிடமிருந்து கிடைக்கப்பெறுவோம்.

Promotion vacancies+New creation சேர்த்து ஏறத்தாழ 1300பேர் தொகுப்பூதியத்திலிருந்து நிரந்தர பணிக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் நமது சங்கத்தேர்தல் நாள் டிசம்பர் மாத இறுதிக்குள் தெரிவிக்க Election commissioner -ரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, உறுப்பினர் பட்டியல் வராத காரணத்தால் தான் காலதாமதம் ஏற்பட்டது.பட்டியல் முழுமையாக கிடைத்த பின் விரைவில் தேதி அறிப்பதாக உறுதி கூறினார்.

சென்னை,தலைமை
செயலகத்தில் மாண்புமிகு.சுகாதார
துறை அமைச்சா் மற்றும் மருத்துவ இயக்குனா் பெருமக்களுடன் சந்திப்பு:
💐💐💐💐💐💐💐💐💐💐

நேற்று(28/11/2016)

தலைமை செயலகம்,சென்னையில் திருமதி.K.வளா்மதி அவா்களின் தலைமையில் திருமதி.காளியம்மாள் மற்றும் குழுவினா் அனைவரும் மாண்புமிகு.சுகாதாரதுறை அமைச்சா் அவா்களையும் இயக்குனா்,(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்)அவா்களையும் சந்தித்தனா்.

அமைச்சா் அவா்களின் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:
-----------------------------------------
♦தஞ்சாவூா் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள செவிலிய காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதாக உறுதியளித்தாா்.

♦செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ல் மொத்தம் 260 நபா்களுக்கான கலந்தாய்வு ஆணை
இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியிடுவதாக தொிவித்தாா்.

♦செவிலியா் கண்காணிப்பாளா் நிலை - I கலந்தாய்வுக்கான விளக்கம் கேட்டபோது அமைச்சாின் தனிச்செயலரை அழைத்து விளக்கம் கேட்டாா். அதற்கான முயற்சி நடந்து வருவதாகவும் ஆனால் சற்று கால தாமதம் ஆகும் எனவும் தொிவித்தாா்.

♦மொத்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I மற்றும் நிலை - II கான கலந்தாய்வு விரைவில் நடத்தி அந்த காலிப்பணியிடங்களில் மீதமுள்ள ஒப்பந்த செவிலியா்களை பணி நியமனம் செய்ய நமது குழுவினரால் வேண்டுகோள் வைத்ததில்,அமைச்சா் அவா்கள் உடன் ஆவண செய்வதாக உறுதியளித்தாா்.

♦எங்களது செவிலியா்களுக்கான கோாிக்கைகளை கவனத்துடன் கேட்டறிந்து, ஆவண செய்யவதாக உறுதியளித்த மாண்புமிகு.சுகாதார
துறை அமைச்சா் அண்ணன் அவா்களுக்கு தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக கோடானு கோடி நன்றிகளை தொிவித்துகொள்கிறோம்.

மருத்துவ இயக்குனா் அவா்களின் சந்திப்பின்
சிறப்பம்சங்கள்:
*********
♦விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுாியும் செவிலியருக்கு ஏற்பட்ட சிக்கலை தீா்க்கும் பொருட்டு, சகோதாியின் குறைகளை இயக்குனா் அவா்களிடம் விளக்கியதில், இயக்குனா் அவா்களும் நமது செவிலியாின் பிரச்சனைகளை DD யிடம் பேசி விரைவில் தீா்வு காண்பதாக உறுதியளித்தாா்.

♦தேனி மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில்,சில தொலைக்காட்சி நிறுவனங்களால் வேண்டுமென்றே சித்தாிக்கப்பட்ட செய்திகளால் எங்களது செவிலியா்களுக்கும், செவிலிய கண்காணிப்பாளா்களுக்கும் எந்த சிக்கலும் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்களது கோாிக்கைகளை ஏற்று Enquiry மட்டும் வைத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கும், துறை மூலம் கண்டனம் தொிவிப்பதாக உறுதியளித்தாா்.
மருத்துவ இயக்குனா் அவா்களுக்கும் தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.

Friday, 25 November 2016

மனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்

 
 
 
பல்வேறு செவிலியர்கள் கேட்டு கொண்டதால் நீண்ட நாள்கழித்து மீண்டும் இந்த தகவல்கள் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏதேனும் குழப்பம் என்றால் இனி வரும் காலங்களில் இது அப்டேட் செய்யபட மாட்டாது.

Sunday, 13 November 2016

புதிதாக 324 பணி இடங்கள் உருவாக்கம்

 
 
 
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்தவமனைகளில் GRADE II நிலையில் 300 மேற்பட்ட பணி இடங்கள் உருவாக்கபட்டு அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது.
இதன் மூலம் நிரந்தர செவிலியர்களும் பணி உயர்வும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமும் விரைவில் வர வாய்ப்புள்ளது

Tuesday, 8 November 2016

மகப்பேறு விடுப்பு காலம்- 9 மாதமாக உயர்வு

தமிழக சட்டசபையில் கடந்த 1.9.2016 அன்று, பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

மகப்பேறு விடுப்பு காலம்
அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்து செல்பவர்களும் அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2011–ம் ஆண்டில் நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க, 1980–ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.
தேர்தல் வாக்குறுதி
எங்களது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும்.  இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
இந்த நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா, நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
முழு சம்பளத்துடன்...
கடந்த 16.5.2011 தேதியிட்ட அரசாணையின்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டது.
இந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த காலகட்டத்தை பிரித்து எடுத்து கொள்ளும் வாய்ப்பு அந்த பெண் ஊழியரையே சாரும்.
9 மாதங்களாக உயர்வு
இந்த சூழ்நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1.9.2016 அன்று சட்டசபையில் பேரவை விதி 110–ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு கவனமுடன் ஆய்வு செய்து புதிய உத்தரவை அரசு பிறப்பிக்கிறது.
அதன்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 6 மாதங்களில் (180 நாட்கள்) இருந்து 9 மாதங்களாக (270 நாட்கள்) உயர்த்தப்படுகிறது.
உடனடி அமல்
இந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். 270 நாட்கள் தொடர்ச்சியாக அளிக்கப்படும் இந்த விடுமுறையை, என்றிலிருந்து எடுக்கவேண்டும் என்று முடிவு எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு அந்த பெண் ஊழியருக்கு வழங்கப்படுகிறது.
இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அவர்களும் 270 நாட்கள் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  இந்த புதிய அரசாணை உடனடியாக அமலுக்கு வருகிறது.