Wednesday, 29 June 2016

தொகுப்பூதியம் X ஹெட் நர்ஸ் கவுன்சிலிங்







 தமிழகமும் முழுவதும் இருந்து 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்குரிய செவிலியர் கண்காணிப்பாளர் நிலை இரண்டு(HEAD NURSE) ஆக பதவி உயர்வு பெறுவதற்கான பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

அதன் பொருட்டு சுமார் 400 செவிலியர்களுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டு உள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள செவிலியர் கண்காணிப்பாளர் நிலை இரண்டு(HEAD NURSE) காலி பணி இடங்களின் எண்ணிக்கை DMS அலுவலகத்தால் கோரப்பட்டு உள்ளது.
இதனை அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
கவனிக்கவேண்டியது தரவரிசை பட்டியலில்
உள்ள மொத்த எண்ணிக்கை 400. மேலும் இது அடுத்த ஆண்டுக்கும் சேர்த்து வெளியிடபட்ட பட்டியல்.
இதில் முதல் கட்டமாக எத்தனை பேருக்கு வரும் என்பது இன்னும் சரியாக தெளிவாக தெரிய வில்லை.
காலிபணி இடங்களின் எண்ணிக்கை நமது JD அலுவலகங்களால் DMS அலுவலகத்திற்கு தெரிவிக்கபட்ட பின்னரே சரியான எண்ணிக்கை தெரியவரும்.
குறைந்த பட்சம் ஒரு 200 தாண்ட வாய்ப்பு உள்ளது.
அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக கண்டிப்பாக மீதம் உள்ள செவிலியர்களும் ஹெட் நர்ஸ்சாக பதவி உயர்வு பெறுவர்.
சரி இப்போது நமது விசயத்திற்கு வருவோம்.
மேலே சொன்ன ஹெட் நர்ஸ் பப்ரோமோசன் கவுன்சிலிங்கில் எத்தனை செவிலியர்கள் ஹெட் நர்ஸ் ஆக பதவி உயர்வு பெறுகின்றனரோ அதனை பொருத்து அந்த எண்ணிகையை பொருத்து அதே எண்ணிகையில் தொகுப்பூதிய செவிலியர்கள்  செவிலியர்கள் முதல்கட்டமாக பணி நிரந்தரம் பெறுவர்.

அதன் பின்னர் அடுத்த கட்டமாக எத்தனை பேர் பதவி உயர்வு பேருகின்றனரோ அத்தனை பேர் அடுத்த கட்டமாக ரெகுலர் பெறுவர்.

மருத்துவகல்லுரி மருத்துவமனைகள்:
புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ள கரூர் மற்றும் புதுகோட்டை மருத்துவகல்லூரிகள் விரைவில் தொடங்கபடும் பட்சத்தில் அதில் குறைந்த பட்சம் மொத்தமாக முதல்கட்டமாக ஒரு 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்பு உள்ளது.

1500 GO என்ன ஆச்சு?

அந்த GO வின் சாராம்சம் இதுதான்.

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு,

1500 பணியிடங்களை கீழ்கண்ட வகையில் உருவாக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
a) புரமோசன் மூலம் வரும் பணியிடம்.

விளக்கம்: இப்போது மேலே சொன்ன முறை

b) பணி ஓய்வு மூலம் வரும் பணியிடம்.

விளக்கம்: ஆண்டாண்டு காலமாக நாம் ரெகுலர் பெறுவது இந்த முறையில் தான்.

c) 2:1 Ratio மூலம் வரும் பணியிடம்.

விளக்கம்: இது நமது அரசு மற்றும் அதிகாரிகளின் கனிவான கவனத்தால்  கண்ணோட்டதால் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டம் முதல் முயற்சி
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணி இடம் உருவாகிக்கிட

இதன் மூலம் 118 மேற்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நகரபுற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்த பணி இடம் ஏற்படுத்த பட்டு ஏற்கனவே நிரந்ப்பபட்டு விட்டது.
d) ஒப்பந்த பணியிடத்தை நிரந்தர பணியாக மாற்றுவதன் மூலம்.
விளக்கம்: இது பல ஆண்டுகளாக அரசின் கவனத்தில் உள்ளது.  ஆனால் இன்னும் அமல்படுத்த பட வில்லை.
இந்த நான்காவது வரியில் உள்ள வார்த்தைகள் வலுபெற்றால் மட்டுமே  இந்த 1500 GO உயிர்பெரும்.
அநேக தொகுப்பூதிய செவிலியர்கள் பயனடைவர்.
கண்ணனுக்கு தெரிந்தது 200 இல் இருந்து 400 குள் வர வாய்ப்புள்ளது இன்னும் ஓரிரு மாதங்களில்.
இதனை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்ளவில்லை மனவலியோடு தான் தெரிவித்து கொள்கிறேன்.
சரியான தகவல்கள் முறையாக முடிந்த வரை கொண்டு சேர்க்க வேண்டும் நோக்கத்தில் தான்.
இது எனது தனிப்பட்ட அனுமானம் அதிகாரபூர்வ தகவல் அல்ல.
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
Whatsapp pls if important call
 
 
 

 

1 comment:

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.