Thursday, 24 March 2016

செவிலியர் பதிவு -அனைத்து அரசு செவிலியர்களும் (ரெகுலர், தொகுப்பூதியம், MRB)
 0.0001% ERROR COMMUNICATION GAP

ஏற்கனவே பதிந்து இருந்தாலும் மீண்டும் பதிவிடவும்.

ஒரு பதிந்த பின்பு பணி நிரந்தரம் பெற்று வேறு இடத்திற்கு சென்றாலும் மீண்டும் புதியதாக பதிவிடவும்.

PROBATION PERIOD DECLARATION - SR BOOK சமந்தமான பணிகளை மேற்கொள்ள இது உதவும்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு செவிலியர்களின் விவரங்களை இணையதளம் மூலம் தொகுக்கும் பணியை ஆரம்பித்து உள்ளோம்.
 


பணி நிரந்தரம்சமந்தமான பணிகளிலும், பணி மாறுதல், ரெகுலர் போன்ற விசயங்களால் செவிலியர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டதோடு, இது சமந்தமான பணிகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தவும், மேலும் புதிதாக MRB செவிலியர்களும் வந்துள்ள காரணத்தால் ஏற்கனவே சேகரித்த தகவலை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.


 

தங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற சகோதரசகோதரிகளின் விவரங்களை அவர்கள் விரும்பினால் நீங்களே பதிவு செய்து விடவும்.இதன் மூலம் செவிலியதுறை சமந்தமான அனைத்து நிகழ்வுகளையும், பிரச்சனைகள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் சரி செய்வதும் சுலபமாக்கபடும்.
மேலும் கவுன்சலிங் மற்றும் அரசானை, மற்றும் பல்வேறு துறை சமந்தமான தகவல்களை எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.
அதே போல் மருத்துவகல்லுரி மருத்துவமனையில் சகோதரசகோதரிகள் தங்களுக்கு நிலையத்தில் உள்ள இணையம் பயன்படுத்தாத சீனியர் செவிலியர்களின் பெயர்களை தொலைபேசி எண்களை மட்டும் பதிந்து விடவும்.

அதே போல் MRB செவிலியர்களும் அதாவது MRB தேர்வு எழுதி அரசு பணியில் தற்பொழுது உள்ள செவிலியர்களும் தங்களை பற்றிய விவரங்களை இங்கே பதிவிடுவும்.மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.

கீழ்க்கண்ட படிவத்தில் ஏதேனும் குறைகள் அல்லது தங்களுடைய ஆலோசனைகள் கருத்துகள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட Email முகவரிக்கோ அல்லது அலைபேசி எண்ணிற்கோ தெரிவிக்கவும்.

tnnurses@gmail.com

cell: 9789 3435 91

                                                                         நன்றி 
                                                                     ரவி சீத்தாராமன்


Thursday, 10 March 2016

செவிலியதுறைக்கு ஏன் தனி துறை வேணும்வேணும்னு ஏன் தலையில அடிச்சிகிறோம்னு தெரியுதா இப்பமாச்சும்அதுக்குதான் அடிச்சிகிறோம்.

நெறைய சகோதரிகள் ரொம்ப பாவம் 
உண்மையிலேயே நொந்து போய்ட்டாங்க, 

நொந்து போய்ட்டாங்கனு சொல்ரத விட நொந்து போக வைக்குறாங்க அப்படினா ரொம்ப பொருத்தமா இருக்கும்.

புள்ளைகுட்டிய தூக்கிட்டு ரோடுரோடுடா அலையிரவங்ககளுக்கு  தான் அந்த வலி தெரியும்.

எப்படி நிக்க வைக்குறாங்க தெரியுமா காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும்

நிக்க வச்சு நல்லது நடந்தா பரவா இல்லை
 

இதுல சமந்தம் இல்லாத துறையை சேர்ந்தவர்களுக்கு எல்லாம் எழவு எடுக்க வேண்டியிருக்கு.

இன்னும் ஆர்டர் வரல, போன மாச ஆடரே

அப்படியே ஒன்னு வந்தாலும்

இன்னொன்னு வரல

வந்தா பண்ண ஜாயின் பண்ண விடல

போனா திட்டுறாங்க, 

அங்கபோ இங்க போனு சொல்றாங்க

இடம் இல்லைன்னு சொல்றாங்க, 

VACANT இல்ல, அடுத்த வாரம் வா

மெயில் வரணும், தாபல் வரணும்  ஒருத்தர்

மெயில் தபால்லாம் அனுப்ப முடியாது இன்னொருத்தர்.

இங்க சொல்றது கொஞ்சம்

சொல்லாதது இந்த தரணியை மிஞ்சும்

எப்பா சாமி  வச்சு செய்றாங்க நம்மள

வேணும்னு செய்றாங்கனு சொல்ல முடியல 
ஆனா செஞ்சிட்டாங்க, செஞ்சிட்டு இருக்காங்க

எதிர்காலம் வரும் நம் கடமை வரும்.

பொறுமையே பெருமை

ரவி சீத்தாராமன்

Wednesday, 9 March 2016

UPHC GO தரவிறக்கம் செய்து கொள்ளவும். குழப்பமான இடங்களில் பயன்படுத்தி கொள்ளவும்.


சில இடங்களில் GO இல்லை எனவும் வேறு விதமான பிரச்சனைகள் இருப்பதால் இங்கு இதனை தரவேற்றம் செய்து உள்ளோம். உபயோகபடுத்தி கொள்ளவும்.புதிதாக உருவாக்கபட்டுள்ள 372 பணி இடங்களுக்கான GO ஊர் பெயர்களுடன்
UPHC 372 POSTS GO


இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.

ஒரு சில UPHC யில் மட்டும் இரண்டு பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டு உள்ளது. அங்கே NCD மற்றும் RCH என இருவர் நியமனம் உண்டு. அது சமந்தமான விளக்க கடிதம்.RCH-280+NCD-92 CLARIFICATION


இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.

Tuesday, 8 March 2016

குழப்படியான சூழல்


 

 

நமது சகோதரசகோதரிகள் குழப்படியான சூழலில்

 சிக்கி தவித்து வருகின்றனர்.

அதனை சரி செய்யவும் நமது சகோதரர்கள் அங்கே

 சிக்கி தவித்து வருகின்றனர்.
 

ஓரிரண்டு பிரச்சனைகள் என்றால் பரவாயில்லை,

 ஊருக்கே பிரச்னை

 
கூடிய சீக்கிரம் பொதுவான பிரச்சனைகள் சரி ஆகி

 விடும்.


சில வார்த்தைகளை இங்கே தெளிவாக கூறாமல்

 இருக்க காரணம் சில சட்டதிட்டங்கள்.
 

குழப்பி கொள்ள வேண்டாம்.
 

அனைத்தும் சரி செய்யபடும்.

 

ரவி சீத்தாராமன்.

 


இந்த இனிய நாளில் செவிலிய சகோதரிகள் அனைவர்க்கும் மகிளிர் தின நல்வாழ்த்துக்கள்.
 
மகிளிர் தினம் கொண்டாடபடுவதன் நோக்கம்
பெண்களின் முக்கியத்துவத்தை அவர்கள் அவர்கள் உணர வேண்டும். இந்த உலகமும் உணர வேண்டும் என்பதே.
 
பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே.
 
பெண்கள் அடிமை விலங்கை உடைத்தேரிந்து வெளியே வர வேண்டும் என்பதே.
 
பெண்கள் பணி புரியும் துறை என்பதாலோ என்னவோ செவிலிய துறையையும் சரி
செவிலியர்களையும் அடிமை நிலையிலேயே அனைவரும் வைத்து உள்ளனர்.
 
அதனை சரிசெய்து செவிலியத்தை செம்மையாக்கி செவிலியர்களாகிய நீங்கள் வாழ்வில் மேன்மைபெற்று வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும்.
 
என்றும் உங்களுடன்
அன்பு சகோதரர்கள்
ரவி சீத்தாராமன்

Monday, 7 March 2016

Feb 5& 15 கலந்தாய்வில் பங்கு பெற்றவர்களுக்கு DME order அனுப்பி விட்டார்கள்.  அதற்கு முன் உங்கள் jd மற்றும் dd office ல் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்த பின் செல்லவும்.  பெயா் இல்லாதவர்களுக்கு நாளை வந்து விடும்

Sunday, 6 March 2016

DME ORDER


கடந்த மாதம் நடைபெற்ற ரெகுலர் கவுன்சிலிங்கில் DME பக்கம் பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கான DME APPOINTMENT ORDER நேற்று மாலை DME அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டு உள்ளது.

ஆணைகள் தனிதனியாக அந்த அந்த DD, மற்றும் JD அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு உள்ளது.

மேலும் இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கவுன்சிலிங்கில் DME பக்கம் பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் ஆணை அனுப்பபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

ரவி சீத்தாராமன்

Saturday, 5 March 2016

What is next?I know what updation our sisters are expecting  from us.

Surely will intimate sisters.

I would like to give clear cut information to our sisters.

But know your tensions, worriers and feelings, doubts

But pls wait would like to give clear cut informations

Ravi Seetharaman

DME order DMS orderDME order will coming soon, DME selected people please wait. 

If you already relieved from present station 
without getting DME order then don't worry about that Ask selected station office people if they accepted then join there or else wait for DME order. No need to worry.
 

Coming week most probably all orders will come.

DMS delayed orders will shortly reach all who are not get so far don't worry.

Ravi Seetharaman  

Thursday, 3 March 2016

2009 Batch Rank no 1 to 150 மட்டும்...


2009 Batch Rank no
151 to 200 நபர்கள் ..
Please wait don't come tomorrow.

இப்பொழுது Official இருந்து வந்த தகவலின் படி
Rank no 1 to 150 மட்டும் கலந்து கொண்டால் போதுமானது என்ற தகவல் வந்துள்ளது...

2009 BATCH FIRST 200 REGULAR TOMORROW:
இந்த எண்ணிகையில் சிறிது குறைந்தால் தயவு 

செய்து சண்டைக்கு வந்து விட வேண்டாம்.

2009 பேட்சில் உள்ள முதல் 200 நபர்களுக்கு நாளை 
கலந்தாய்வு

2009 படித்து முடித்து 2011 இல் பணியில் இணைத்த 

முதல் 200 செவிலியர்களுக்கு நாளை கலந்தாய்வு 

நடைபெற உள்ளது

எனவே நமது 2009 பேட்சை சேர்ந்த முதல் 200 

சகோதரிகளும் கலந்தாய்வில் கலந்து கொள்ள 

சென்னை DMS வந்து விடவும்.

2008 BATCH WILL BE COMPLETED TOMORROW: 
2008 பேட்ச்  மீதமுள்ள அனைத்து
 
செவிலியர்களுக்கு நாளை பணி
 
நிரந்தர கலந்தாய்வு
 
 
 
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
 

Wednesday, 2 March 2016

RED ALERT-2008 பேட்ச்-S.NO 1501 முதல் 1600 வரை


நாளை மாலை மூன்று மணி அளவில் தான் கவுன்சலிங் DMS வளாகத்தில்.
 

பதட்டபடாமல் கிளம்பவும்,.
 
நாளை முதல் 100 நபர்களுக்கு கலந்தாய்வு
இதன் பின்னர் என்ன என்பது பின்னர் தெரிவிக்க படும்.
 
முக்கிய உயர் அதிகாரிகளிடம் இது சமந்தமாக உறுதிபடுத்தபட்டு விட்டது.
 
மெயில் வரவில்லை மெடிக்கல் ஆபிசர் விடவில்லை என எல்லாம் கதை பேசி கொண்டு இருக்க வேண்டாம்.
 
தகவலை கூறி விட்டு கிளம்பி விடுங்கள்.
தயவு செய்து நாளை சென்று அந்த இடம் கெடைக்க வில்லை இந்த இடம் கெடைக்க வில்லை என
ஏதும் சண்டை போட்டு கொண்டு இருக்க வேண்டாம்.
 
நீங்கள் சண்டை போட்டால் பின்னால் உள்ள செவிலியர்களுக்கு சாவுதான்.
 
போற சத்தமும் வர்ற சத்தமும் வெளிய கேக்க கூடாது.
 
ஏனென்றால் நமக்காக நமது அதிகாரிகள் மெனக்கெட்டது அதிகம்.
 
ரவி சீத்தாராமன்
9789 3435 91

Tuesday, 1 March 2016

👍👍👍👍👍👍👍

Good confident words coming from one good important person.

So don't worry guys 

I hope good will happen soon.

As per sources there is no relation between election and our posting.

So please wait guys.

Hopefully good will happen.

Ravi Seetharaman