Sunday, 21 February 2016

#MISSION_STARTED_TOWARDS_2900_ACCOMPLISHED_1500_HISTORICAL_ACHIEVEMENT


 

நன்றி:




மாண்புமிகு அம்மா:




தமிழகத்தின் நாடி துடிப்பாகவும்

ஏழைஎளிய மக்களின் இதயதுடிப்பாகவும் இருக்கும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு

தமிழக சுகாதார துறையில் 1500 புதிய நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாக்கி தந்தமைக்காக

தமிழகத்தில் உள்ள அனைத்து செவிலியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.




மரியாதையைகுரிய அதிகாரிகள்:

பல பிரச்சனைகளுக்கு மத்தியில்

நமது பிரச்சனைகளை

பொறுமையின் சிகரமாய் இருந்து கேட்டு

அன்பின் சின்னமாய் இருந்து அரவணைத்து

ஆதரவுகரம் கொடுத்த சுகாதாரதுறை அமைச்சர் அவர்களுக்கும்

சுகாதார துறை உயர்அதிகாரிகளுக்கும்

எங்கள் நெஞ்சார்ந்த நன்றி




மானம்காத்த செவிலியர்கள்

இந்த போராட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் வாழ்வோசாவோ வெற்றியோ தோல்வியோ களம்கண்டாக வேண்டும் என்ற வீர உணர்வோடு பெருந்திரளாக கலந்து கொண்டு நமது முன்னோர்களுக்கும் முன்னோடியாக இருந்து அரசும் அதிகாரிகளும் மக்களும் பாராட்டும் வகையில் குழந்தைகுட்டிகளோடு குடும்பத்தோடு திரண்டு வந்த உரிமைகளை உணர்வோடு கேட்ட அனைத்து செவிலிய சகோதரிகளுக்கும்சகோதரர்களுக்கும் நன்றி




உழைப்பிற்கு மாவட்டநிர்வாகிகள்

இத்தனை பேரை தமிழகமும் முழுவதும் இருந்து திரட்டி கொண்டு வந்த நமது மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்களது உழைப்பிற்கும் ஒரு சல்யூட்




மூத்த செவிலியர்கள்:

நமது போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் இருந்து ஒருமணி நேரம் நமக்காக மன்னிக்கவும் தங்கள் பிள்ளைகளுக்காக போராட்டம் நடத்திய

அரசு நிரந்தர செவிலிய அம்மாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி




போராட்டமும்-விளக்கமும்:




உண்ணாவிரதம்:

கடந்த 18 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 2900 மேற்பட்ட தொகுப்பூதியசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர்.




சட்டமன்ற கூட்டதொடர்:

110 விதி-1500 புதிய பணி இடங்கள்:




அதன் பின்னர் கடந்த 19/02/2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் 1500 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய படுவர் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் 110 விதியின் கீழ் அறிவிக்கபட்டது.




அதன் பின்னர் நிர்வாகிகள் சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர்.




அந்த பேச்சு வார்த்தையின் போது இன்னும் ஒரு ஓரிரு நாட்களில் அரசு ஆணையும் இந்த மாத இறுதிக்குள் 1500 பணி இடங்களுக்கான கலந்தாய்வு தேதியும் வெளியிடபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.




இதன் மூலம் 2008 பேட்சை சேர்ந்த 308 கும் மேற்பட்ட செவிலியர்களுக்கும் 2009 பேட்சை சேர்ந்த 1200 தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வரும்.




இந்த 1500 புதிய பணி இடங்கள் எங்கு எந்தஎந்த இடங்களில்(PHCs, GHs, MEDICAL COLLEGES) உருவாக்கபடுகிறது என்பதற்கான தெளிவான விளக்கம் இன்னும் ஓரிரு தினங்களில் அளிக்கப்படும்.




நமது குழப்பம்:

பணி நிரந்தரம் செய்யபட்ட செவிலியர்கள் போக 2009 & 2010 பேட்ச்( மீதம் உள்ள 1400 செவிலியர்களுக்கும் எப்போது பணி நிரந்தரம் வரும் என்ற குழப்பத்திற்கு தமிழகத்தில் புதிதாக திறக்கபடவுள்ள கரூர், புதுகோட்டை, கோயமுத்தூர் ESI போன்ற மருத்துவமனைகள் மூலம் 100 MBBS நிரப்பபடும் பட்சத்தில் 750 கும் மேற்பட்ட பணி இடங்கள் உருவாகும், அதே போல் மேலும் மீதம் உள்ள செவிலியர்களுக்கும் சில திட்டங்களில் பணி இடங்கள் உருவாக்கபட இருக்கிறது.




எப்பொழுது: பேச்சு வார்த்தையின் போது வரும் மே மாத இறுதிக்குள் என்று தெரிவித்ததாக தெரிவித்தார்கள்.




நமது அனுமானம் எப்படியும் இந்த வருட இறுதிக்குள்ளாவது மீதம் உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் பெற்று விட வேண்டும் என்பதே.




காரணம் தேர்தல் களம், ஆட்சி, அதன் பின்னர் ETCCCCC.




கோபம்:

2900 மேற்பட்டோருக்கு பணி நிரந்தரம் என்ற கோரிக்கையோடு போராட்டத்தை ஆரம்பித்து விட்டு இவர்களுக்கு பணி நிரந்தரம் என்ற உடன் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டார்கள்?




தவறான கருத்து:

இந்த பேச்சு வார்த்தையில் முழுக்கமுழுக்க கலந்து கொண்டது 2009 & 2010 பேட்ச் அதாவது 2011 இல் பணியில் இணைந்த சகோதரசகோதரிகள் தான். நாங்கள் போராட்ட களத்தில் இருந்தோமே தவிர பேச்சு வார்த்தையில் அல்ல.




மற்றொரு பார்வை:

முதன்முதலில் சங்கம் ஆரம்பித்த போது எங்களுக்கு பணி நிரந்தரம் வர போகிறது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டது அல்ல.




நமக்கு முன்னர் உள்ள தடைகர்கள் அதாவது நமக்கு முன்னர் உள்ள சீனியர் சகோதரிகள் பணி நிரந்தரம் பெற்றால் தான் நமக்கு பணி நிரந்தரம் வரும் என்ற நிலை இருப்பதால் உழைத்தே ஆக வேண்டிய சூழல்.




என்னதான் விளக்கம் அளித்தாலும் உண்மையில் உள்மனதிற்கு கஷ்டமாகத்தான் உள்ளது மீதம் உள்ள 1400 செவிலியர்கள் வேதனையோடு வாதனைகளோடும் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று என்னும் போது.

அனைவரும் ஒரே நேரத்தில் வந்து இருந்தால் அந்த மகிழ்சிக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது.




இனி வரும் காலங்களில் களத்தில் மீதம் உள்ள அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற உணர்வுகள் உள்ள அனைவரும் கண்டிப்பாக தோள்கொடுப்பர்.

தயவு செய்து குழப்பி கொள்ள வேண்டாம் வருமோவராதோ என்று.




தோள் கொடுக்க நாங்கள் துணைநிற்க நீங்கள் பிறகென்ன




வெற்றி வசப்படும் பணி நிரந்தரம் பெறப்படும்.




நமது வாக்குறுதி: 2016 இறுதிக்குள்:




கண்டிப்பான முறையில் 2016 இறுதிக்குள் மீதம் உள்ள அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளபட்டு முடிவுகள் எட்டப்படும்




சங்கம் ஆரம்பித்த 2012 முதல் இதுவரை நமது முயற்சியில் பங்கு கொண்டு முயற்சிகள் மேற்கொண்டு நமது அனைவரின் கனவும் நனவாக உழைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.




ரவி சீத்தாராமன்

9789 3435 91

(Whatsapp pls if important call)

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.