Sunday, 7 February 2016

அடுத்த ரெகுலர் கவுன்சலிங்-எப்போ-எத்தனை பேருக்கு-போராட்டம் உண்டா

 
நேற்று வெற்றிகரமாக எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி 2008 பேட்ச்சை சேர்ந்த 319 செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடந்து முடிந்தது.
 
நினைத்த இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்த போதிலும் நினைத்த வாழ்கை கிடைத்தது என்ற திருப்தியில் ஆனந்த கண்ணீர் வந்ததே தவிர அவல கண்ணீர் வரவில்லை.
 
அடுத்த கவுன்சலிங் தேதி மற்றும் எத்தனை பேருக்கு:
என்ற விவரம் அடுத்த கவுன்சலிங் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வர வாய்ப்புள்ளது. தற்பொழுது 200 மேற்பட்ட நபர்களுக்களுக்கான காலி பணி இடங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2008 பேட்சில் மீதம் உள்ள 200 மேற்பட்ட நபர்களுக்கும் அதாவது 409 பேருக்கும் பணி நிரந்தர கலந்தாய்வு வைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

 
அது சமந்தமான காலி பணி இடங்களை கண்டறியவும், காலி பணி இடங்களை உருவாக்கவும் அதிகாரிகள் தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளபட்டு வருகிறது. அடுத்த வாரம் இது சமந்தமான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.
 
2009 & 2010 பேட்ச்
அதேபோல் 2009 & 2010 பேட்ச் படித்து முடித்து 2011 பணியில் இணைந்து ஐந்து வருடம் தொகுப்பூதிய காலம் முடித்த அனைத்து செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய கோரும் கோப்பு உயர் அதிகாரிகள் மத்தியில் தீவிர பரிசிலனையில் உள்ளது. கண்டிப்பான முறையில் பணி நிரந்தரம் செய்வோம் என்று அதிகார பூர்வ இடத்தில இருந்து தகவல்.
 
அடுத்த வாரம் முதல் இரண்டு மூன்று நாட்களில் இது சமந்தமான தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.
 
போராட்டம் உண்டா:
இது சமந்தமான அறிவிப்பு சங்க நிர்வாகிகள் உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

 
மேலும் மேலே தெரிவிக்கபட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தனி ஒருவனுடைய  தனிப்பட்ட கருத்துகள். அதாவது ரவி சீத்தாராமன் என்ற தனி ஒருவனுடைய தனி பட்ட கருத்துக்கள்.
 
அனைத்து செவிலியர்களும் குழப்பமான பதட்டமான நிலையில் உள்ளதால் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
 
அதே போல் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல முடிவு ஏற்படும்வரை பணி நிரந்தரம் வரும் வரை தொகுப்பூதிய 
செவிலியர்களின் நலன் கருதி கடைசி நேரம் என்பதாலும் தேர்தல் நெருங்குகிறது என்ற காரணத்தாலும் இணைந்து செயலாற்றுவேன், செயலாற்றுவோம்.
 
ஆனால் கண்டிப்பான முறையில் அரசு நிரந்தர செவிலியர்கள், MRB செவிலியர்கள், (தொகுப்பூதிய செவிலியர்கள் என்ற இந்த வார்த்தையை சேர்க்க விருப்பவில்லை, அப்படியொரு இனமே இல்லை என்ற நிலை வரும்) கொண்டு ஒரு வலுவான சரியான புதிய பாதை விரைவில் கட்டமைக்கபடும்.
 
ரவி சீத்தாராமன்.
9789 3435 91
(Whatsapp please if important call)

1 comment:

  1. Please lets us know about next regular counseling...

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.