Monday, 15 February 2016

செவிலிய சகோதரசகோதரிகளுக்கு கவனத்திற்கு:

 
நமது www.tnfwebsite.com மற்றும் www.cbnurse.com இணையதளத்தில் உள்ள செவிலியர் பதிவு பக்கத்தில் VIP DETAILS பக்கத்தில் தங்களுக்கு தெரிந்த அனைத்து முக்கியமான நபர்களின் பெயர்களையும் அவர்களது துறை மற்றும் தொலைபேசி எண்களோடு பதிந்து விடவும்.
 
ஏனெனில் கடந்த நாட்களில் தொடர்பு கொண்ட நபர்களை பார்க்கும் போது இவர்களின் தொடர்பு அப்போதே கிடைத்து இருந்தால் இந்த பணியை இப்படி சிறப்பாக செய்து இருக்கலாமே என்று வருந்த நேரிடுகிறது.
 
வெளிநாட்டில் இருந்து தொடர்பு கொண்ட நமது சகோதரின் கணவர் ஒருவர் தனது தந்தை ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் காவல்துறையில் SP அந்தஸ்தில் பணி புரிவதாக குறிப்பிட்டார்.
 
இதை ஏன் தெரிவிக்கிறேன் என்றால் இது ஒரு நான்கு மாதம் முன்பு தெரிந்து இருந்தால் இன்று ஒரு செவிலியர் நிரந்தர பணி கிடைகாமல் இன்னும் அலைந்து கொண்டு இருக்கிறார். இவரின் தொடர்பு இருந்து இருந்தால் அப்போதே இந்த பிரச்சனையை சரி செய்து இருக்கலாம்.
 
அதே போல் உளவு துறையில் மேல் மட்ட அளவில் உள்ள மனநிலைகளை தெளிவாக தகவல் தருகிறார்.
 
பத்திரிகைகளின் பங்கும் அதில் பணிபுரியும் செவிலிய துறையின் நண்பர்களின் பங்கும் மகத்தானது.
 
அதே போல் விமான நிலையத்தில், வங்கி துறையில்  என பல விஷயங்கள் உள்ளது.
 
எனவே தயைகூர்ந்து அந்த விஷயங்களை பதிவிட்டு விடவும். அதே போல் செவிலியர்களும் தங்களது தகவல்களை தெளிவாக பதிவிட்டு விடவும்.
 
பைத்தியகாரதனமாக:
 
இப்போது என்ன பிரச்னை நடந்து கொண்ட இருக்கிறது, நாம் அதை பற்றி தகவல் இருக்கிறதா என பார்த்தல் எதோ ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது, தெரிகிறது.
 
ஆனால் சில நேரங்களில் சில விசயங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் இருப்பதே நல்லது என நெனைக்கிறேன்.
ஏனெனில் நமது சிந்தனை, நாம் ஒரு விசயத்தை பார்க்கும் கோணம் அனைத்து தருணங்களிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது, 
 
எனவே நமது கருத்தால் நல்லது நடக்கும், அது வெற்றியை தேடி தரும் என்றால் சந்தோஷம். ஆனால் அந்த கருத்தால் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் விசயத்திற்கு அனைவரும் ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் POSITIVE THINGS விட NEGATIVE THINGS மட்டுமே அதிகம் என்ற காரணத்தால் சில கருத்துகளை பதிவிடவில்லை.
 
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்
ரவி சீத்தாராமன்
9789 3435 91
(Whatsapp pls if important call"

2 comments:

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.