Wednesday, 3 February 2016

பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் செவிலியர்களுக்கு கவனத்திற்கு-மூன்று முக்கிய விசயம்



1. PROPOSAL NOT RECEIVED என்று போட்டு இருந்தால்

பதற வேண்டாம், தங்கள் மருத்துவ அலுவலரிடம் இதனை காண்பித்து ஒரு ப்ரோபோசல் பெற்று கொண்டு கவுன்சிலிங் அன்று கூட கொடுத்து கொள்ளலாம். இதனால் ஏதும் பிரச்னை இல்லை.

2. தயவு செய்து அங்கு வந்து சண்டைபோட்டு கொண்டு எனக்கு அந்த ஊர் கெடைக்க வில்லை இந்த ஊர் கெடைக்க வில்லை என்று சண்டை போட்டு கொண்டு தங்களது தகப்பானர் கணவரை வைத்து வீரத்தை காமித்து கொண்டு MEDIYA வை குபிடுங்கள் என்று அலப்பரையை கூட்டாமல் இருக்கவும். ஏனெனில் இன்னும் நல்ல விசயங்களுக்காக இன்னும் பல செவிலியர்கள் பணி நிரந்தரதிற்காக காத்து கொண்டு உள்ளனர்.

வாக்குறுதி:
பணி நிரந்தரம் அனைவரும் பெற்ற உடன் மதுரை தூத்துகூடி மருத்துவமனைகளில் குறைந்த பட்சம் 250 இருந்து 500 பணி இடங்கள் ஏற்படுத்த முயற்சி எடுக்கபடும். வெற்றி கிடைக்கும். இதன் மூலம் தென்மாவட்ட செவிலியர்கள் எந்த பிரச்னையும் இன்றி நமது ஊர் பக்கம் வந்து விடலாம்.

நமக்கு கிடைத்த அதிகாரிகள் அன்பானவர்கள் பண்பானவர்கள்.
அவர்கள் பொறுமையை சோதிக்கவேண்டாம்.

3. நெறைய சகோதரிகள் கடந்த ஆண்டு நடைபெற்ற தொகுப்பூதிய பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய இடங்களை தேர்தெடுத்து அங்கு பணி புரிந்து வருகின்றனர்.
தற்பொழுது வந்த நிரந்தர கலந்தாவிற்காக ஆணையில் பழைய ஊர் பெயரே குறிப்பிடபட்டு வந்துள்ளது. பணி ஆணைகள் வரும் பொழுது குழப்பம் வரும்.

எனவே இவர்கள் செய்ய வேண்டியது
இவர்கள் தங்களுடைய புதிய பணி நியமன ஆணையை XEROX வைத்து கொண்டு ஒரு சின்ன கடிதம் மட்டும் எழுதவும்.

அனுப்புனர்:
பெயர்(S.I. NO & RANK NUMBER)
பணிபுரியும் இடம்
மாவட்டம்

பெறுனர்
உயர்திரு இயக்குனர் அவர்கள்
மருத்துவம் மற்றும் சுகாதார நலபணிகள் இயக்குனரகம்
சென்னை

மதிப்பிற்குரிய ஐயா
கடந்த ஆண்டு நடைபெற்ற பணி மாறுதல் கலந்தாய்வில்XXXXX என்ற மாவட்டத்தில் உள்ள XXXXX என்ற PHC OR GH பணி புரிந்த நான் அந்த கலந்தாய்வில் XXXXX என்ற மாவட்டத்தில் உள்ள XXXXXXX என்ற PHC OR GH
பணிமாறுதல் பெற்றேன்.

தற்பொழுது பணி நிரந்தர கலந்தாய்விற்கு வந்துள்ள அழைப்பு கடிதத்தில் பழைய நிலையமே குறிப்பிடபட்டு வந்துள்ளது. அதனை தயைகூர்ந்து சரிசெய்து பணி நியமன அளிக்குமாறு தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன்.

ரெண்டு கட்டம் கட்டி பழைய நிலையம் புதிய நிலையம் என பிரித்து கொள்ளவும்.

பழைய நிலையம்                                                                        புதிய நிலையம்
XXXXXX
XXXXXX
XXXXXX XXXXXXX
XXXXXXX
XXXXXXX

இப்படிக்கு தங்கள் உண்மைஉள்ள

ரவி சீத்தாராமன்
(உங்க பேர போடுங்க)

4 comments:

  1. I saw a status(with held) in the list of 1200 to 1400. Please let us clarified about it.

    ReplyDelete
  2. When we expect balance members reqular counselling brother.... Reply plzzzzz

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. When we expect for counselling balance members... Replz plsssssssssssssss

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.