Thursday, 25 February 2016

சந்தேகங்கள்-1500 தொகுப்பூதிய செவிலியர்கள் ரெகுலர் அரசு ஆணை


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணை படி விதி எண் 110 கீழ் தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலிியர்களில், 1500 செவிலியர்கள பணி மூப்பு அடிப்படையில் கால வரன்முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர படுவார்கள்” என சட்டசபையில் கடந்த 19 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் அறிவிக்கபட்டது.

அதன் படி அரசு ஆணை 69 வெளியிடபட்டு உள்ளது.
அரசு ஆணையில் 1500 பணி இடங்களை கீழ்கண்ட வழிமுறைகள் உடனடியாக உருவாக்க மருத்துவம் ஊரக நலபணிகள் இயக்குனர் அவர்களுக்கு அறிவுறுத்த பட்டு உள்ளது.


மேலும் உடனடியாக இதனை உருவாக்கி அதற்கு கவுன்சலிங் வைக்கவும் ஆணை இடப்பட்டு உள்ளது.

இந்த 1500 பணி இடங்களை கீழ் கண்ட முறைகள் மூலம் உருவாக்க வேண்டும் என அரசு ஆணையில் தெரிவிக்கபட்டு உள்ளது. இதன்படி இந்த பணி இடங்கள் கீழ் கண்ட முறைகள் மூலம் உருவாக்கபடும்

a) புரமோசன் மூலம் வரும் பணியிடம்.

b) பணி ஓய்வு மூலம் வரும் பணியிடம்.

c) 2:1 Ratio மூலம் வரும் பணியிடம்.

d) ஒப்பந்த பணியிடத்தை நிரந்தர பணியாக மாற்றுவதன் மூலம்.
மேற்கண்ட வழி மூலம் 1500 பணியிடம் உருவாக்கி கொள்ள அரசு
அனும்தித்து உள்ளது.

ஆனால் அரசு ஆணையில் மூன்றாம் பத்தியில் 809 செவிலியர்கள் ஆறு ஆண்டுகளாகவும், 2606 செவிலியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் தொகுபூதியத்தில் பணி புரிவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.

ஆனால் உண்மையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே 500 மேற்பட்ட 2008 பேட்ச் செவிலியசகோரிகள் பணி நிரந்தரம் பெற்று சென்று விட்டனர்.
இவர்கள் பணி நிரந்தரம் பெற்றது புதிதாக உருவாக்க பட்ட பணி இடங்களில் அல்ல.

ஏற்கனவே இருந்த காலி பணி இடங்களிலேயே இவர்கள் பணி நிரந்தரம் பெற்றனர். அதாவது GRADE II ப்ரோமோசன் மூலம் ஏற்பட்ட செவிலிய காலி பணி இடங்களிலேயே இவர்கள் பணி நிரந்தரம் பெற்றனர். எனவே அது இந்த அரசு ஆணைக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடருக்கு இரு வாரங்கள் முன்பே பணி நிரந்தரம் பெற்று விட்டனர்.

தற்பொழுது வெளியிடபட்ட அரசு ஆணைபடி புதிதாக 1500 பணி இடங்கள் உருவாக்கபட வேண்டும். அதில் 2008 பேட்சை சேர்ந்த 308 பேரும் 2009 பேட்சை சேர்ந்த ஏறக்குறைய 1200 பேரும் பணி நிரந்தரம் பெற வேண்டும்.

ஒருவேளை ஏற்கனவே பணி நிரந்தரம் செய்யபட்ட 500 பேரையும் இதில் சேர்த்து தான் என்று குழப்பம் வரும் பட்சத்தில் நிர்வாகிகள் சென்று இதனை சரி செய்ய வேண்டும். குழப்பம் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தால்.

மேலும் செவிலிய சகொதரிகள் எந்த எண்கள் வரை கவுன்சலிங் வரும் என்று குழப்பி கொள்ள வேண்டாம். ஏனெனில் எத்தனை பேர் பணிக்கு வர வில்லை, சில போலி சான்றிதல் பணி நீக்கம், மாற்று திறநாளிகள் பணி நிரந்தரம் சில எண்கள் முன்னே வர வாய்ப்புள்ளது. எவ்வளவு என்பது தற்பொழுது துல்லியமாக தெரிய வாய்ப்பு இல்லை.

அதே போல் கவுன்சலிங் எப்போது என்ற வினாவிற்கு விடை கிடைத்த உடன் உடனடியாக தெரிவிக்கபடும். அதிக நாட்கள் தள்ளி செல்ல வாய்புகள் இல்லை.

ரவி சீத்தாராமன்.
(9789 3435 91)
Whatsapp Pls If Important Call

1 comment:

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.