Saturday, 27 February 2016

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இ.எஸ்.ஐ. நர்சுகள் ஒரு நாள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டம்

 



குறைந்தபட்ச தொடக்க நிலை தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நர்சுகள் ஒரு நாள் தற்காலிக விடுப்பு எடுத்தனர்.
 
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நர்சுகள்

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள் குறைந்தபட்ச தொடக்க நிலை தர ஊதியத்தை ரூ.5,400 ஆக்கவேண்டும். இணை செவிலிய கண்காணிப்பாளர் மற்றும் துணை செவிலிய கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கவேண்டும்.

செவிலியர்களுக்கு செவிலிய படித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
 
தற்செயல் விடுப்பு போராட்டம்
 
இந்த கோரிக்கைகள் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் ஒரு நாள் தற்செயல்விடுப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில் சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டர்களை கொண்டு ஆஸ்பத்திரி (நேற்று வெள்ளிக் கிழமை) செயல்பட்டது.

இருப்பினும் நர்சுகள் இன்றி எந்த ஆஸ்பத்திரியும் சிறப்பாக செயல்பட முடியாது. நாங்கள் இல்லாததால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிகிச்சை பெற சிரமப்பட்டனர் என்றனர்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.