Sunday, 31 January 2016

பணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவு?



தமிழக சுகாதார துறையில் பணி புரியும் 3500 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி கடந்த 29 ஆம் தேதி காலை முதல் DMS வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
நடைபெற்றது.


போராட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செவிலியர்கள் திரளான அளவில் இது வரை இல்லாத வகையில் கலந்து கொண்டனர்.


காலையில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் செவிலியர்கள் கைகுழந்ததைகளுடன் கண்ணிருடன் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று வைராக்கியதோடு அமர்ந்து இருந்தனர்.






மாலை மங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக செவிலியர்கள வரிசையாக உண்ணாவிரதத்தின் காரணமாக மயங்க தொடங்கினர்.




நமது அன்பு துறை நண்பர்களான 108 ஊழியர்களின் உதவியால் தொடர்ந்து நமது செவிலிய சகோதிரிகளை கண்ணீரோடு நமது சகோதரர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்த செவிலிய கரங்களுக்கு
அன்பு கரம் ஆதரவு கரம் நீட்ட யாரும் இல்லையே என்ற நிலையை எண்ணி நொந்து கொண்டு கண்ணீரோடு சகோதரிகளுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கைகளில் ஊசியை ஏற்றி குளுகோஸ் ஏற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடன் சென்றனர்.

15 மேற்பட்ட நமது சகோதரசகொதரிகள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர்.

பேச்சுவார்த்தை:

செய்திகள் உளவுதுறை மூலமாக உடனடியாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் சென்ற வண்ணம் இருந்ததை கண் முன்னே காண முடிந்தது.

நமது துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை அழைப்பு வந்தது.

அதன் பின்னர் குணசேகரன் MLA அவர்களின் தலைமையில் ஒரு குழு சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலருடன் பேச்சு வார்த்தை நடத்த சென்றது.

பேச்சு வார்த்தைக்கு சென்ற வந்த பின்னர் பேச்சு வார்த்தையில் பல்வேறு நியாமான விஷயங்களை சுட்டி காட்டி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் பேச்சு வார்த்தையில் ஒரு வாரம் கால அவகாசம் கேட்கபட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு சென்று வந்த நமது MLA அவர்கள் நடந்தை செவிலியர்களிடம் தெரிவித்து முடிவு உங்கள் கையில் என்று தெரிவித்தார்.

ஆனால் நமது செவிலியர்கள் சரியான தெளிவான முடிவு இல்லாமல் இந்த இடத்தை யார் சொன்னாலும் நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.



இதன் காரணமாக மறு நாள் உண்ணாவிரதம் தொடர்ந்தது மேலும் அனைத்து மாவட்டகளில் மீதம் பணியில் உள்ள செவிளியர்களையும் வர சொல்லி நமது செவிலியர்கள் அழைப்பு விடுக்க தொடங்கினர்.
அதன் பின்னர் மதியம் DMS மற்றும் DPH, MMC டீன் அவர்களின் முன்னிலையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்த அழைப்பு விடுக்கபட்டு பேச்சு வார்த்தை நடத்த பட்டது.

அந்த பேச்சு வார்த்தைக்கு சென்று இருந்தோம். நமது செவிலிய சகோதரிகள் அதிகாரிகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் அளவுக்கு அவர்களது பிரச்சனைகளை அவ்வளவு கண்ணீரோடு தெரிவித்தனர். அதை வார்த்தைகள் இங்கு விவரிக்க இயலாது,

விவரித்தால் அது வார்த்தைகள் அல்ல வலிகள் தான். அதனை தாண்டி பல்வேறு நுணுக்கான விஷயங்களை வழக்கம் போல் எடுத்து வைத்தோம். பலகட்ட விஷயங்களை கலந்துரையாடிய பிறகு சொல்ல பட்ட கருத்துகள் இதோ

அனைத்திற்கும் பொறுமையாக நமது துறை உயர் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

ஆனால் அதன் முக்கிய பகுதி சாராம்சம் இறுதியாக 2008 பேட்ச் 809 செவிலியர்களுக்கான காலி பணி உடனே தேடி எடுக்கபட்டு அனைவரும் பணி நிரந்தரம் செய்ய படுவர் இன்னும் ஓரிரு வாரத்தில். இது வாக்குறுதி அல்ல உறுதி என்று DPH குழந்தைசாமி சார் அவர்கள் தெரிவித்தார்கள்.

அதே போல் 2009, 2010 உள்ள 2600 மேற்பட்ட் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய துறை அதிகாரிகளும் நாங்களும் நிதி துறையோடு பேசி கொண்ட வருகிறோம் வரும் வாரத்தில் அதாவது அடுத்த வாரத்தில் ஒரு நல்ல முடிவு அறிவிகக்படும் என்று தெரிவித்தனர். அதனையுய்ம் மீண்டும் அலசி அலசி நீங்கள் கேட்க நினைப்பதை நாங்கள் கேட்டோம். ஒரு சில நிர்வாக காரணக்களுக்காக இதனை ஏற்று கொண்டு வரும் பத்தாம் தேதிக்குள் நல்ல செய்தி வழங்குகள் என்று கேட்டு கொள்ளபட்டது.


இல்லையெனில் வரும் பிப்ரவரி மாதம் 11 முதல் மீண்டும் எங்கள் பயணத்தை நாங்கள் தொடருவோம் என்று தெரிவித்தனர்
அதனை ஏற்று கொண்ட அதிகாரிகள் கைகளால் பழசாறு கொடுத்து உண்ணாவிரம் முடித்து வைக்கபட்டது.

அடுத்து வாழ்க்கைக்கான பயணமா இல்லை மீண்டும் வாழ்கையை தேடி பயணமா என்று கேள்விக்கு விடை விரைவில்

வேண்டுகோள் மற்றும் முக்கிய குறிப்பு:
அரசு மற்றும் மாண்புமிகு அமைச்சர், மற்றும் மரியாதையைகுரிய செயலர் அவர்களுக்கும் அவபெயரையோ எரிச்சலையோ ஏற்படுத்தும் எண்ணம் செவிலிய துறையில் உள்ள தொகுப்பூதிய செவிலிய துறைக்கு சுத்தமாக
இல்லை.


சம்பளம் சத்தியமா வேண்டாம் ஒரு வருடத்திற்கு
பணி நிரந்தரம் என்ற அங்கிகாரம் மட்டும் கூட போதும்.

தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையில் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது என்று மனதளவில் மனசாட்சி அளவில் ஏற்று கொண்ட ஒரு விஷயத்தை எங்களுக்கு நிதி மூலம் நீதி வழங்க வேண்டிய நிதி துறையில் உள்ள மரியாதையைகுரிய அதிகாரிகள் மறுப்பது எந்த வகையில் நியாயம் ?

மன்னிப்பு வேண்டுகிறோம்

எங்கள் கோரிக்கை தவறு என்று

நீங்கள் மன வேதனை அடைந்து இருந்தால்

மனதுருகி கேட்கிறோம் பணி நிரந்தரம் செய்யுங்கள்

மீண்டும் மன்னிப்பு கேட்காமல் இருக்க

ரவி சீத்தாராமன்

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.