Thursday, 14 January 2016

உண்ணாவிரதம்-ஜனவரி 29 -REGULAR - ஜனவரி 2016 OR 2017 டிசம்பர், THE CHOICE IS YOURS 

 

கடந்த வாரம் செவிலியர்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ள புதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டு இருந்தோம். அனைத்து செவிலியர்களும் சரி என்றே கருத்து தெரிவித்த போதிலும் இப்போது சரியான தருணம் இல்லை தெரிவித்து இருந்தனர் ஏனெனில் நம்மிடம் இருப்பது இன்னும் ஒரே ஒரு மாதம். எனவே ஆரம்பிப்பதில் மாற்று கருத்து இல்லை கண்டிப்பாக ஆரம்பிக்கபடும்.

 

ஆனால் 3000 பேருக்கான பணி நிரந்தரம் என்ற நியாமான கோரிகையை வென்றெடுக்க இது தான் கடைசி வாய்ப்பு கடைசி முயற்சி.

 

மூன்று பேருடன் கருத்து முரண்பாடு என்பதற்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை புறந்தள்ளுவதில் மனமில்லை.

 

ஏனெனில் கடந்த 2012 முதல் இந்த பணி நிரந்தரதிற்காக தான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து செவிலியர்களும் இதனை நம்பி தான் அனைத்து முயற்சிகளிலும் பங்கு கொண்டனர்.

 

எனவே இந்த இறுதி முயற்சியில் அனைவரின் கைகளையும் கோர்த்து ஒன்றாக இணைந்து இந்த மாதம் 29 தேதி அறிவிக்கபட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு உண்மையான வெற்றியோடு திரும்ப வேண்டும்.

 

இதற்கு அனைத்து செவிலிய சகோதரிகளும் ஒத்துழைப்பு நல்கி நமது நியாமான கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

 

நியாமான கோரிக்கை என்று மனதளவில் அதிகாரிகள் அமைச்சர்கள் வரை ஏற்று கொள்கின்றனர். இந்த நிதி துறைக்கு என்ன தான் பிரச்னை என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு செவிலியர்களை தனிப்பட்ட முறையில் பிடிக்காத என்று தெரிய வில்லை. போட்டு சவாடிகிரங்க.

ஐயா நீங்க பார்த்த கூட்டம் வேற நீங்க பாக்காத செவிலியர் கூட்டம் ஒன்னு இருக்கு மலைகளிலும் காட்டுகுள்ளேயும் 24 மணி நேரமும் PHC ல வீட்டுட விட்டு குழந்தைகளை விட்டு ஏழு வருடமாக

கடந்த ஏழு வருடமாக

 

செவிலியராக

 

தொகுப்பூதிய செவிலியராக

 

சேவையை பணியாக

 

வேதனையை துணையாக

 

கொண்டு

 

பணி நிரந்தரம் என்ற வரத்தை கேட்டு

 
ஏழு வருடமாக இருக்கும் எங்கள் செவிலியர்கள் இருக்கும் தவம்


அல்லது எங்கள் துறையின் சாபம் இல்லை இல்லை எங்களது வாழ்வின் தரித்திரம்

உங்களது பார்வைக்கு கருணை பார்வைக்கு எட்டுவது எப்போது ?
 

கோயிலில் ஐந்து வருடமாக பணி புரியும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய ஏற்று கொண்ட நிதி துறைக்கு சேவை துறையில் பணி புரியும் செவிலியர்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?

 

இல்லை இல்லை கடந்த நாலு வருடமாக ஒட்டி விட்டோம் இன்னும் ஒரு மாதம் தான் இதனையும் ஓட்டி விட்டால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்து விட்டது என்று கூற உங்கள் மனத்தில் எண்ணம் இருக்கலாம், ஆனால் அதனை கேட்க எங்கள் மனதில் சக்தி இல்லை.

 
இந்த உண்ணாவிரத போராட்டத்திலாவது கடந்த ஏழு ஆண்டுகளாக 3500 ரூபாய் சம்பளத்தில் பணியை ஆரம்பித்து தமிழக அரசிற்கும் நற்பெயர் பெற்று தரும் வகையில் தமிழக மக்களுக்கும் இரவுபகல் பாராமல் பணி புரிந்த நமது சகோதரிகளின் கண்ணீரை நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 


நாங்கள் அரசியல் கட்சி அல்ல ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எதிர்கட்சி அல்ல ஏளனம் செய்வதற்கு, நாங்கள் அரசை மட்டுமே நம்பி உள்ள மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய அரசு ஊழியர்கள்.

 


எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல எதிர்பார்ப்பு மட்டுமே

 

 
ரவி சீத்தாராமன்
9789 3435 91
(Whatsapp pls if important call)

2 comments:

  1. im nellai nayagam from 2009 batch... currently working at ooty gh. im the only only male nurse rather than other c.p.'s are from mrb nearlly 26 members all are b.Sc. since october 2015 i didnt get my sallary till now!! and also i didnt get arrear g.o. No.322 april 2013 also... lo of time i wrote a requestion letter through n/s to j.d.
    yet i didnt get still nowand also i didint get my pongal bonus from 2014-2015 & 2015 -2016.
    kindly help me brother/ sister!!!!!

    ReplyDelete
  2. குடும்பத்தில் ஒருவர் உண்ணாவிரதத்தில் கலந்து காெள்ளாமா.

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.