Wednesday, 13 January 2016

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது

வழக்கம் போல செவிலியர்கள் அனைவர்க்கும்

ஏமாற்றம் தான் வேற என்ன அனைத்து

தொகுப்பூதிய செவிலியர்களும் ரெகுலர்னா

சொல்லிரா போறாங்க

அப்படிகிப்படி அறிவிச்சுட்டாங்கனா கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரைக்கும் செவிலியர்கள் அனைவரும் நடந்தே வந்து தமிழக அரசிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.


நிதி துறையில கேட்டா


மிக்சி இருகுங்குறாங்க

கிரைன்டர் இருகுங்குறாங்க

லேப்டாப் இருகுங்குறாங்க

கலர் டிவி இருக்கு

ஆடு இருக்கு

மாடு இருக்கு

கோழி இருக்கு

இந்த அப்பாவி அடிமைகளான தொகுப்பூதிய

செவிலியர்களை ரெகுலர் செய்யமட்டும் காசு

இல்லைங்க
 
 
 
 
ஒவ்வொரு ஆண்டு தொடங்கியதும் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் நடப்பது மரபாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
 
கவர்னர் உரையில் ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நலத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.
 
இந்த ஆண்டு மழை வெள்ள நிவாரண நிதி வினியோகம் நடந்து வருவதால் சட்டசபை கூட்ட தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வருகிற 20–ந்தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)–ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2016–ம் ஆண்டு ஜனவரி திங்கள் 20–ம் நாள், புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்கள்.
இந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)–ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 2016–ம் ஆண்டு ஜனவரி திங்கள் 20–ம் நாள், புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது.
 
மேலும் கவர்னர் உரையில் கடந்த 4½ ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் துறை வாரியாக பட்டியலிடப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.
கவர்னர் உரை மீதான விவாதம் சட்டசபையில் சில தினங்களில் முடியும். மிக குறுகிய கால கூட்டத் தொடராக இந்த கூட்ட தொடர் நடத்தி முடிக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் 20–ந்தேதி நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
 
அதன் பிறகு சுமார் 10 நாள் இடைவெளிவிட்டு, சட்டசபை மீண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. மே மாதம் புதிய அரசு பொறுப்பு ஏற்றதும் பட்ஜெட் தாக்கலாகும்.
 
அதற்கு முன்னதாக நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி மாதம் 15–ந்தேதிக்குள் இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.
 
இடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கி விட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உ

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.