Wednesday, 28 December 2016

Finally



வருகிற 03:01:2017 ல் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 இடமாற்றம் கலந்தாழ்வு நடைப்பெறும் .

மேலூம் 04-01-2017 அன்று செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 க்கான பதவி உயர்வு கலந்தாழ்வு DMS. ல் 6 வது மாடியில் 272 பேருக்கு நடைப்பெறும்.

அதனை  தொடர்ந்து நமது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு  பணி நிரந்தர கலந்தாய்வு வர இருக்கிறது.

இதற்காக உழைத்த அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி

Saturday, 17 December 2016

GRADE II - CB TO REGULAR ?




GRADE II கவுன்சிலிங் வைப்பதற்கு சில பேருடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் வந்து சேரவில்லை என்று தகவல்.

அது அடுத்த வாரதிற்குள் வருவதற்கான ஏற்பாடுகள் நடத்து வருவதாக தகவல்.

அதன் பிறகு GRADE II கவுன்சிலிங் நடத்தபடும் என தகவல்.
இது நடந்த உடனே CB TO REGULAR கவுன்சிலிங் நடக்கவாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.
செவிலியர்களின் வாழ்வே சோதனை?
எந்த நேரத்துல இந்த துறையை கண்டுபிடிச்சாங்கனு தெரியல?


பிள்ளைகள் பாவம் எப்போ வரும் ?
எத்தனை பேருக்கு வரும்?
2010 பேட்ச் எப்போ முடியும் ?


ஒரே விசயம் உறுதி கண்டிப்பா ரெகுலர் அதிகமான எண்ணிகையில் வர இருக்கிறது
ஆனால் இந்த காலதாமதம் என்ற கத்தி கழுத்தை அறுத்துகொண்டு இருப்பது தான் வேதனையையும் வாதனையும் தருகிறது.
நமக்கு ரெகுலர் வர்றதுக்கு முயற்சிகள் நடக்குறப்போ

நம்ம ட்ரெய்ன்ல போனா
நம்ம யோகம் பிளைட்ல போகுது
யார குத்தம் சொல்ல


சுனாமி வருது

சின்ன தேர்தல் வருது
பெரிய தேர்தல் வருது

டெங்கு வருது
தானே புயல் வருது
வர்தா புயல் வருது

வரம் கொடுத்த தெய்வம் அம்மாவே இறந்துடாங்க

என்ன ராசி டா நமக்கும் நம்ம துறைக்கும் ? சாமி

Tuesday, 6 December 2016

 
தமிழகம் இருண்டது
சகாப்தம் சரிந்தது

தமிழகத்தையும் தமிழக மக்களையும்
நிரந்தரமாக கண்ணீரில் மிதக்கவிட்டு
இன்று அம்மா மறைந்தார் .

பெண் என்ற வார்த்தையே அம்மாவால்
பெருமைப்பட்டது

எல்லா சூழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும்
கடந்து நின்றார் வென்றார்.

அம்மா
பேசிய கடைசி வார்த்தை
விட்ட கடைசி மூச்சு

எங்களால்
எங்கள் மருத்துவதுறையால்
உங்களை காக்க முடியவில்லையே என்று எண்ணும்போது
கண்ணீர் வருகிறது தாயே

மன்னியுங்கள் எங்களை
முடிவெடுத்த அவனோடு முடியவில்லை எங்களால்



வரலாறே உங்களை வணங்கும்

Sunday, 4 December 2016

மதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிரந்தர செவிலிய பணி இடங்கள் கனவா நனவா?

 
நமது நண்பரும் சமூகஆர்வலர்ருமான திரு. ஆனந்தராஜ் மற்றும் வழக்கறினர்கள் திரு. அழகுமணி, மலைகண்ணன் போன்ற வழக்கரினர்கள் மருத்துவதுறை சமந்தமான முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
 
தமிழகம் முழுவதும் நாம் கேள்விபட்ட கருவேலம் மரங்கள் பிரச்னை முதல் குழந்தைகள் திருட்டில் மருத்துவமனைகளில் கேமெரா பொருத்துதல், ஸ்கேன் சென்டர் பிரச்சனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாகுறை, உடல் உறுப்பு மாற்று, புற்றுநோய்கான சிகிச்சை மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்று தருதல் போன்ற பல்வேறு தளங்களில் இவரின் பங்கு அளப்பரியது.
 
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பற்றாகுறைபற்றி கேள்விபட்டு அதனை சரி செய்ய தன்னால் இயன்றதை செய்வேன் என உறுதி அளித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை நடத்தி வருகிறார்.
 
கடந்த வாரம் நடைபெற்று முடிவுற்ற வழக்கில் மாண்புமிகு நீதி அரசர் மதுரை மருத்தவகல்லூரியில் உள்ள 800 அதிகமான செவிலியர் பற்றாக்குறை பற்றி கேள்விபட்டு அதற்கான விளக்கம் கேட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் திரு. ஆனந்தராஜ் அவர்கள்.

Tuesday, 29 November 2016

கருத்து பரிமாற்ற செயலியில் பகிரப்பட்ட கருத்துகள்(Whatsapp)







செவிலிய சமூகத்தின் முன்னேற்றதிற்காக பணி நிரந்தரதிற்காக பல்வேறு சிரமங்களுகிடையே பாடுபட்டு கொண்டு இருக்கும் அனைத்து தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு அனைத்து செவிலியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி

கீழ்க்கண்டவை நமக்கு கருத்துபரிமாற்ற செயலியில் வந்தவை.

****** (எண்ணிக்கை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது).*****
           

********(தேதியும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது)******

அன்பார்ந்த செவிலிய சகோதரிகளே!!!!
இன்று நமது சங்கத்தின் மூலம் தெரிவிப்பது என்னவெனில் , நமது சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் சங்க செயலரின் பெறுமுயற்சியுடன் மேற்கொள்ளபட்ட Creation posts for Gr l-13,Grll -260ஆகியவை நமக்கு நமது அரசின் GO NO272/25.11.16 படி பெறப்பட்டதுஎன்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.(Go-வின் விளக்கவுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

இதன் படி New creation -13+vaccines ஏறத்தாழ-70ம் ,G-ll New creation-260+Retirement+promotion vaccines ஏறத்தாழ 400 பேருக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் மேலும் New creation staff nurse -Regular post ஏறத்தாழ 750 க்கு Go-டிசம்பர் இறுதிக்குள் அரசிடமிருந்து கிடைக்கப்பெறுவோம்.

Promotion vacancies+New creation சேர்த்து ஏறத்தாழ 1300பேர் தொகுப்பூதியத்திலிருந்து நிரந்தர பணிக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் நமது சங்கத்தேர்தல் நாள் டிசம்பர் மாத இறுதிக்குள் தெரிவிக்க Election commissioner -ரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, உறுப்பினர் பட்டியல் வராத காரணத்தால் தான் காலதாமதம் ஏற்பட்டது.பட்டியல் முழுமையாக கிடைத்த பின் விரைவில் தேதி அறிப்பதாக உறுதி கூறினார்.

சென்னை,தலைமை
செயலகத்தில் மாண்புமிகு.சுகாதார
துறை அமைச்சா் மற்றும் மருத்துவ இயக்குனா் பெருமக்களுடன் சந்திப்பு:
💐💐💐💐💐💐💐💐💐💐

நேற்று(28/11/2016)

தலைமை செயலகம்,சென்னையில் திருமதி.K.வளா்மதி அவா்களின் தலைமையில் திருமதி.காளியம்மாள் மற்றும் குழுவினா் அனைவரும் மாண்புமிகு.சுகாதாரதுறை அமைச்சா் அவா்களையும் இயக்குனா்,(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்)அவா்களையும் சந்தித்தனா்.

அமைச்சா் அவா்களின் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:
-----------------------------------------
♦தஞ்சாவூா் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள செவிலிய காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதாக உறுதியளித்தாா்.

♦செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ல் மொத்தம் 260 நபா்களுக்கான கலந்தாய்வு ஆணை
இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியிடுவதாக தொிவித்தாா்.

♦செவிலியா் கண்காணிப்பாளா் நிலை - I கலந்தாய்வுக்கான விளக்கம் கேட்டபோது அமைச்சாின் தனிச்செயலரை அழைத்து விளக்கம் கேட்டாா். அதற்கான முயற்சி நடந்து வருவதாகவும் ஆனால் சற்று கால தாமதம் ஆகும் எனவும் தொிவித்தாா்.

♦மொத்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I மற்றும் நிலை - II கான கலந்தாய்வு விரைவில் நடத்தி அந்த காலிப்பணியிடங்களில் மீதமுள்ள ஒப்பந்த செவிலியா்களை பணி நியமனம் செய்ய நமது குழுவினரால் வேண்டுகோள் வைத்ததில்,அமைச்சா் அவா்கள் உடன் ஆவண செய்வதாக உறுதியளித்தாா்.

♦எங்களது செவிலியா்களுக்கான கோாிக்கைகளை கவனத்துடன் கேட்டறிந்து, ஆவண செய்யவதாக உறுதியளித்த மாண்புமிகு.சுகாதார
துறை அமைச்சா் அண்ணன் அவா்களுக்கு தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக கோடானு கோடி நன்றிகளை தொிவித்துகொள்கிறோம்.

மருத்துவ இயக்குனா் அவா்களின் சந்திப்பின்
சிறப்பம்சங்கள்:
*********
♦விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுாியும் செவிலியருக்கு ஏற்பட்ட சிக்கலை தீா்க்கும் பொருட்டு, சகோதாியின் குறைகளை இயக்குனா் அவா்களிடம் விளக்கியதில், இயக்குனா் அவா்களும் நமது செவிலியாின் பிரச்சனைகளை DD யிடம் பேசி விரைவில் தீா்வு காண்பதாக உறுதியளித்தாா்.

♦தேனி மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில்,சில தொலைக்காட்சி நிறுவனங்களால் வேண்டுமென்றே சித்தாிக்கப்பட்ட செய்திகளால் எங்களது செவிலியா்களுக்கும், செவிலிய கண்காணிப்பாளா்களுக்கும் எந்த சிக்கலும் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்களது கோாிக்கைகளை ஏற்று Enquiry மட்டும் வைத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கும், துறை மூலம் கண்டனம் தொிவிப்பதாக உறுதியளித்தாா்.
மருத்துவ இயக்குனா் அவா்களுக்கும் தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.

Friday, 25 November 2016

மனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்

 
 
 
பல்வேறு செவிலியர்கள் கேட்டு கொண்டதால் நீண்ட நாள்கழித்து மீண்டும் இந்த தகவல்கள் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏதேனும் குழப்பம் என்றால் இனி வரும் காலங்களில் இது அப்டேட் செய்யபட மாட்டாது.

Sunday, 13 November 2016

புதிதாக 324 பணி இடங்கள் உருவாக்கம்

 
 
 
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்தவமனைகளில் GRADE II நிலையில் 300 மேற்பட்ட பணி இடங்கள் உருவாக்கபட்டு அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது.
இதன் மூலம் நிரந்தர செவிலியர்களும் பணி உயர்வும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமும் விரைவில் வர வாய்ப்புள்ளது

Tuesday, 8 November 2016

மகப்பேறு விடுப்பு காலம்- 9 மாதமாக உயர்வு

தமிழக சட்டசபையில் கடந்த 1.9.2016 அன்று, பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

மகப்பேறு விடுப்பு காலம்
அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்து செல்பவர்களும் அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2011–ம் ஆண்டில் நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க, 1980–ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.
தேர்தல் வாக்குறுதி
எங்களது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும்.  இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
இந்த நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா, நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
முழு சம்பளத்துடன்...
கடந்த 16.5.2011 தேதியிட்ட அரசாணையின்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டது.
இந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த காலகட்டத்தை பிரித்து எடுத்து கொள்ளும் வாய்ப்பு அந்த பெண் ஊழியரையே சாரும்.
9 மாதங்களாக உயர்வு
இந்த சூழ்நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1.9.2016 அன்று சட்டசபையில் பேரவை விதி 110–ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு கவனமுடன் ஆய்வு செய்து புதிய உத்தரவை அரசு பிறப்பிக்கிறது.
அதன்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 6 மாதங்களில் (180 நாட்கள்) இருந்து 9 மாதங்களாக (270 நாட்கள்) உயர்த்தப்படுகிறது.
உடனடி அமல்
இந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். 270 நாட்கள் தொடர்ச்சியாக அளிக்கப்படும் இந்த விடுமுறையை, என்றிலிருந்து எடுக்கவேண்டும் என்று முடிவு எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு அந்த பெண் ஊழியருக்கு வழங்கப்படுகிறது.
இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அவர்களும் 270 நாட்கள் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  இந்த புதிய அரசாணை உடனடியாக அமலுக்கு வருகிறது.
 

Tuesday, 18 October 2016

மீண்டும் கலந்தாய்வு

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ஒத்திவைக்க தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரகலந்தாய்வு வரும் 21/10/2016 அன்று நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்டது உள்ளது.
 
 
 

Friday, 14 October 2016

கலந்தாய்வு-அரசு பள்ளியில் செவிலியம் படிக்க

 
DIPLOMA IN NURSING
 
அரசு கல்லூரிகளில் செவிலியம் படிக்க
விண்ணப்பங்கள் பரிசிலிக்கபட்டு
வரும் 18/10/2016 முதல் 20/10/2016 வரை
Govt. Multi-Super Specialty Hospital, Omandurar Estate இல் வைத்து கீழ்கண்ட ரேங்க்கில் உள்ளவர்வர்களுக்கு முதல் கட்டமாக கலந்தாய்வு நடைபெறஉள்ளது.


 
 

Friday, 7 October 2016

பணி நிரந்தரம்.......2009 பேட்ச்-PROPOSAL CALLED...

பணி நிரந்தரம்.......2009 பேட்ச்-PROPOSAL CALLED....

பணி நிரந்தரம் செய்வதற்காக கீழ்கண்ட REFERENCE நம்பர்களில் உள்ள தேதிகளில் உள்ள அனைவரின் சர்விஸ் பர்டிகுலர்ஸ்சையும்

உடனடியாக அதாவது 19/10/2016 முன் DMS அலுவலகத்திற்கு அனுப்புமாறு DMS அலுவலகத்தில் இருந்து அனைத்து இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பபட்டு உள்ளது.

ரவி சீத்தாராமன்
9789 34358 91



 


 

பணி நிரந்தரம்.......2009 பேட்ச்-PROPOSAL CALLED...

பணி நிரந்தரம்.......2009 பேட்ச்-PROPOSAL CALLED....

பணி நிரந்தரம் செய்வதற்காக கீழ்கண்ட REFERENCE நம்பர்களில் உள்ள தேதிகளில் உள்ள அனைவரின் சர்விஸ் பர்டிகுலர்ஸ்சையும்

உடனடியாக அதாவது 19/10/2016 முன் DMS அலுவலகத்திற்கு அனுப்புமாறு DMS அலுவலகத்தில் இருந்து அனைத்து இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பபட்டு உள்ளது.

ரவி சீத்தாராமன்
9789 34358 91
 


 

Friday, 23 September 2016

NAME LIST-CB TO REGULAR-26/09/2016

வாழ்த்துக்கள்
வரும் 26/09/2016 அன்று பணி நிரந்தர கலந்தாய்வு
 
477 முதல் 770 வரை


 
 
முக்கிய குறிப்பு: கீழே உள்ள பட்டியலில் சர்வீஸ் பர்டிகுலர்ஸ் NOT RECEIVED என்று குறிப்பிடபட்ட சகோதரசகோதரிகள் மட்டும் தயவுசெய்து கண்டிப்பான முறையில் கவுன்சிலிங் செல்லும் போது  சர்வீஸ் பர்டிகுலர்ஸ் கையில் கொண்டு செல்லவும்.

இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
 
 

Thursday, 22 September 2016

26/09/2016 தொகுப்பூதியம் இருந்து நிரந்தர கலந்தாய்வு உறுதி-அதிகாரபூர்வ தகவல்


ஆனால் எத்தனை பேருக்கு பணி நிரந்தர கலந்தாய்வு என்பது நாளை தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

நாளை GRADE II கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதில் ஏற்படும் காலி பணி இடங்களை பொருத்து எத்தனை பணி இடங்கள் என்ற இறுதி பட்டியல் வர வாய்ப்பு இருக்கிறது. இது நமது அனுமானம். அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்த உடன் பதிவேற்றம் செய்யப்படும்.

 

Tuesday, 20 September 2016

26/09/2016 பணி நிரந்தர கலந்தாய்வு.........................

 
 
 
வரும் 26/09/2016 அன்று தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
பெயர் பட்டியல் வந்த உடன் அப்டேட் செய்யபடும்.
 
கீழ்க்கண்ட அஞ்சலில்  உள்ள REF NO உள்ளவர்கள் தங்களது சர்வீஸ் பர்டிகுலர்சை உடனடியாக அலுவலகம் மூலம் அனுப்பி வைக்குமாறு கீழ்கண்ட அஞ்சலில் தெரிவிக்கபட்ட உள்ளது.
 
 
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் இன்னும் கொஞ்ச பேருக்கு வரலையாம்.
 
 

 
 
 
 
 
 
 
 
 


Friday, 16 September 2016

அடுத்த வாரம்.................................................

கிரேடு II மற்றும் தொகுப்பூதியம் டு ரெகுலர் அடுத்த வாரம் நடைபெற இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் அனைவரும் தெரிவிக்கிறார்கள்.
 
 
 
அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் அப்டேட் செய்யப்படும்.

Saturday, 10 September 2016

மேம்பாடு


நமது இணைய தளத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சில மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதனால் சில முக்கிய தகவல்களை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இன்னும் ஓரிரு வாரத்தில் தளம் சமந்தமான மேம்பாடு பணிகள் முடிந்து வழக்கம் போல இயங்கும்.
 

Saturday, 30 July 2016

டிரான்ஸபெர் கவுன்சிலிங் ஒரு வருடம் பணி நிறைவு பெறாமல் கலந்து கொள்ள போகலாமா?






அதாவது இதற்கு முன்னர் நடைபெற்ற பணி மாறுதல் கலந்தாய்வுகளில் கண்டிப்பாக தற்பொழுது பணி புரியும் இடத்தில் ஒரு வருடம் கண்டிப்பான முறையில் பணி புரிந்து இருக்க வேண்டும் மேலும் அதற்கான சர்விஸ் பர்டிகுலர்சை கொண்டு வந்தால் மட்டுமே பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் மேலும் இது கட்டாயம் என மின்னஞ்சல் அதிகார பூர்வமாக வரும்.

தற்பொழுது அந்த மாதிரியான மாதிரியான மின்னஞ்சல் எதுவும் இதுவரை வரவில்லை.



ஒரு வேளை கடைசி நேரத்தில் கூட வரலாம் வந்தால் அப்டேட் செய்யப்படும்.


அதனால் கலந்துகொள்ளலாம வேண்டாமா என்ற தவிப்பில் அனைவரும் இருக்கின்றனர்.

கடைசி வரை தகவல் எதுவும் வரவில்லை எனில் வாய்ப்பை தவற விட வேண்டாமே என்பது நமது எண்ணம்.

ஒரு வேளை இது சம்மந்தமாக தகவல் வந்தாலும் உடனே தெரிவிக்க படும்.

தற்பொழுது பணி புரியும் இடத்தில் சர்விஸ் பர்டிகுலர்ஸ் வாங்கி கொள்ளவும்.

சில இடங்களில் தராத சூழல் இருக்கும் அவர்கள் ஜாயினிங் ஆர்டர் எடுத்துவகொள்ளவும்.

ஆனால் இது சரியான அங்கீகரிக்கப்பட்ட முறையல்ல

இவை அதிகாரபூர்வ கருத்துக்கள் அல்ல அனுபவ கருத்துக்கள் தான்


வாழ்த்துக்கள்

ரவி சீத்தாராமன்
9789 3435 91

ஆணைகள் மற்றும் பெயர் பட்டியல்

 
சில இடங்களில் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணி நிரந்தர கலந்தாய்வு சமந்தமாக ஆணை ஏதும் வரவில்லை என தெரிவிக்கின்றனர் என நமது சகோதரிகள் தெரிவித்தனர்.
 
அதற்கான ஆணைகள் இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.
 
ரெகுலர் சமந்தமான அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்தவுடன் இங்கு தரவேற்றம் செய்யப்படும். வரும் வாரம் திங்கள் அல்லது செவ்வாய் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
 
 
 
 
ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் சமந்தமான ஆணை
 
 
 
 
 
 
CB TO REGULAR அரசு ஆணை
 


Thursday, 28 July 2016

மகிழ்ச்சி








வரும் வாரம் செவ்வாய் கிழமை (2/8/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு  DMS வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.



அதனை தொடர்ந்து வரும் வாரம் வியாழக்கிழமை (4/8/2016) அன்று  தொகுப்பூதியத்தில் பணி ஆற்றி வரும் 2009 பேட்சை சேர்ந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்க பட வில்லை.

கிடைத்த தகவலின் அடிப்படையில் 458  ரேங்க்  வரை அதாவது 307 செவிலியர்களுக்கு என்று தெரிவிக்க பட்டு உள்ளது.

  இருப்பினும் அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்த உடன் வெளியிடப்படும்.


ரவி சீத்தாராமன்
9789 3435 91





மகிழ்ச்சி








வரும் வாரம் செவ்வாய் கிழமை (2/8/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு  DMS வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.



அதனை தொடர்ந்து வரும் வாரம் வியாழக்கிழமை (4/8/2016) அன்று  தொகுப்பூதியத்தில் பணி ஆற்றி வரும் 2009 பேட்சை சேர்ந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்க பட வில்லை.

கிடைத்த தகவலின் அடிப்படையில் 458  ரேங்க்  வரை அதாவது 307 செவிலியர்களுக்கு என்று தெரிவிக்க பட்டு உள்ளது.

  இருப்பினும் அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்த உடன் வெளியிடப்படும்.


ரவி சீத்தாராமன்
9789 3435 91





குழப்பம் வேண்டாம்


தயவு செய்து சகோதரிகள் எதையும் குழப்பி கொள்ள வேண்டாம்.

அனைவருக்கும் சரியாக முறையாக வரும்.


ஒரு தகவலை நாம் அப்டேட் செய்தால் நமது சகோதரிகள் மிகவும் குழப்பி கொள்கின்றனர் குழம்புகின்றனர் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

ஒரு பிரச்னையும் இல்லை.

எல்லாம் சரியாக உள்ளது. நல்லபடியாக நடக்கும்.

அதிகாரபூர்வ தகவல் வந்த உடன் மற்றவை தெரிவிக்கபடும்.

யாரும் மிஸ் ஆகமாட்டிங்க
மிஸ் ஆகவும் விடமாட்டாங்க

ப்ளிஸ்
ரவி சீத்தாராமன்
9789 3435 91

Sunday, 24 July 2016

பி.எஸ்சி நர்சிங் விண்ணப்பம்



சென்னை: 'பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25ல் துவங்குகிறது.
 
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:

மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஜூலை, 24ல் வெளியாகும். ஜூலை, 25 முதல் ஆக., 4 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆக., 5க்குள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 20 July 2016

MRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்



http://www.mrb.tn.gov.in/notifications.html

நாம் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது போல தற்பொழுது MRB மூலம் முதல் கட்டமாக 400 செவிலியர்கள் தேர்தெடுக்கபட உள்ளனர்.

இ்தனை முன்னிட்டு அந்த 400 செவிலியர்களின் பெயர் பட்டியல் அதாவது 8001 முதல் 8400 வரை அதிகாரபூர்வமாக MRB இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது.
 
அந்த பட்டியில் நமது இணைய தளத்திலும் செவிலியர்கள் பார்வைகாக தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.

www.tnfwebsite.com

www.cbnurse.com
 

பெயர்களை காண  scroll செய்து பார்க்கவும்

ஏற்கனவே சர்டிபிகேட் verification முடித்தவர்கள் குழம்ப தேவை இல்லை.




MRB NAME LIST
தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபட்ட பிறகே தற்பொழுது கலந்து கொள்ள இருக்கும் 400 செவிலியர்களுக்கு வழங்கபடும்.

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செவிலிய காலி பணி இடங்களை நிரப்பியமைகாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழக சுகாதார துறைக்கும் செவிலியர்கள் சார்பாக

நன்றி
 
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)

MRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்



http://www.mrb.tn.gov.in/notifications.html

நாம் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது போல தற்பொழுது MRB மூலம் முதல் கட்டமாக 400 செவிலியர்கள் தேர்தெடுக்கபட உள்ளனர்.

இ்தனை முன்னிட்டு அந்த 400 செவிலியர்களின் பெயர் பட்டியல் அதாவது 8001 முதல் 8400 வரை அதிகாரபூர்வமாக MRB இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது.
 
அந்த பட்டியில் நமது இணைய தளத்திலும் செவிலியர்கள் பார்வைகாக தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.

www.tnfwebsite.com

www.cbnurse.com
 
ஏற்கனவே சர்டிபிகேட் verification முடித்தவர்கள் குழம்ப தேவை இல்லை.





தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபட்ட பிறகே தற்பொழுது கலந்து கொள்ள இருக்கும் 400 செவிலியர்களுக்கு வழங்கபடும்.

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செவிலிய காலி பணி இடங்களை நிரப்பியமைகாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழக சுகாதார துறைக்கும் செவிலியர்கள் சார்பாக

நன்றி
 
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)

Friday, 15 July 2016

கண்ணீர் அஞ்சலி


திரு.ராஜகோபால் ஆண் செவிலியர்
 
சகோதரர் திரு.முருகன்
 
 
திரு.ராஜகோபால் ஆண் செவிலியர் தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு இருந்தவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருவாருர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனது உடல் நல குறைவினால் இயற்கை எய்தினார் என்பதை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம்.
 
திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஆண் செவிலியர் திரு.முருகன் இன்று (15.07.2016) காலை 8:30 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானா் என்பதை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம்.

Wednesday, 29 June 2016

தொகுப்பூதியம் X ஹெட் நர்ஸ் கவுன்சிலிங்







 தமிழகமும் முழுவதும் இருந்து 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்குரிய செவிலியர் கண்காணிப்பாளர் நிலை இரண்டு(HEAD NURSE) ஆக பதவி உயர்வு பெறுவதற்கான பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

அதன் பொருட்டு சுமார் 400 செவிலியர்களுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டு உள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள செவிலியர் கண்காணிப்பாளர் நிலை இரண்டு(HEAD NURSE) காலி பணி இடங்களின் எண்ணிக்கை DMS அலுவலகத்தால் கோரப்பட்டு உள்ளது.
இதனை அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
கவனிக்கவேண்டியது தரவரிசை பட்டியலில்
உள்ள மொத்த எண்ணிக்கை 400. மேலும் இது அடுத்த ஆண்டுக்கும் சேர்த்து வெளியிடபட்ட பட்டியல்.
இதில் முதல் கட்டமாக எத்தனை பேருக்கு வரும் என்பது இன்னும் சரியாக தெளிவாக தெரிய வில்லை.
காலிபணி இடங்களின் எண்ணிக்கை நமது JD அலுவலகங்களால் DMS அலுவலகத்திற்கு தெரிவிக்கபட்ட பின்னரே சரியான எண்ணிக்கை தெரியவரும்.
குறைந்த பட்சம் ஒரு 200 தாண்ட வாய்ப்பு உள்ளது.
அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக கண்டிப்பாக மீதம் உள்ள செவிலியர்களும் ஹெட் நர்ஸ்சாக பதவி உயர்வு பெறுவர்.
சரி இப்போது நமது விசயத்திற்கு வருவோம்.
மேலே சொன்ன ஹெட் நர்ஸ் பப்ரோமோசன் கவுன்சிலிங்கில் எத்தனை செவிலியர்கள் ஹெட் நர்ஸ் ஆக பதவி உயர்வு பெறுகின்றனரோ அதனை பொருத்து அந்த எண்ணிகையை பொருத்து அதே எண்ணிகையில் தொகுப்பூதிய செவிலியர்கள்  செவிலியர்கள் முதல்கட்டமாக பணி நிரந்தரம் பெறுவர்.

அதன் பின்னர் அடுத்த கட்டமாக எத்தனை பேர் பதவி உயர்வு பேருகின்றனரோ அத்தனை பேர் அடுத்த கட்டமாக ரெகுலர் பெறுவர்.

மருத்துவகல்லுரி மருத்துவமனைகள்:
புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ள கரூர் மற்றும் புதுகோட்டை மருத்துவகல்லூரிகள் விரைவில் தொடங்கபடும் பட்சத்தில் அதில் குறைந்த பட்சம் மொத்தமாக முதல்கட்டமாக ஒரு 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்பு உள்ளது.

1500 GO என்ன ஆச்சு?

அந்த GO வின் சாராம்சம் இதுதான்.

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு,

1500 பணியிடங்களை கீழ்கண்ட வகையில் உருவாக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
a) புரமோசன் மூலம் வரும் பணியிடம்.

விளக்கம்: இப்போது மேலே சொன்ன முறை

b) பணி ஓய்வு மூலம் வரும் பணியிடம்.

விளக்கம்: ஆண்டாண்டு காலமாக நாம் ரெகுலர் பெறுவது இந்த முறையில் தான்.

c) 2:1 Ratio மூலம் வரும் பணியிடம்.

விளக்கம்: இது நமது அரசு மற்றும் அதிகாரிகளின் கனிவான கவனத்தால்  கண்ணோட்டதால் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டம் முதல் முயற்சி
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணி இடம் உருவாகிக்கிட

இதன் மூலம் 118 மேற்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நகரபுற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்த பணி இடம் ஏற்படுத்த பட்டு ஏற்கனவே நிரந்ப்பபட்டு விட்டது.
d) ஒப்பந்த பணியிடத்தை நிரந்தர பணியாக மாற்றுவதன் மூலம்.
விளக்கம்: இது பல ஆண்டுகளாக அரசின் கவனத்தில் உள்ளது.  ஆனால் இன்னும் அமல்படுத்த பட வில்லை.
இந்த நான்காவது வரியில் உள்ள வார்த்தைகள் வலுபெற்றால் மட்டுமே  இந்த 1500 GO உயிர்பெரும்.
அநேக தொகுப்பூதிய செவிலியர்கள் பயனடைவர்.
கண்ணனுக்கு தெரிந்தது 200 இல் இருந்து 400 குள் வர வாய்ப்புள்ளது இன்னும் ஓரிரு மாதங்களில்.
இதனை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்ளவில்லை மனவலியோடு தான் தெரிவித்து கொள்கிறேன்.
சரியான தகவல்கள் முறையாக முடிந்த வரை கொண்டு சேர்க்க வேண்டும் நோக்கத்தில் தான்.
இது எனது தனிப்பட்ட அனுமானம் அதிகாரபூர்வ தகவல் அல்ல.
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)
Whatsapp pls if important call
 
 
 

 

Sunday, 19 June 2016

நிரந்தர செவிலியர்களுக்கு தற்காலிகமாக 8000 ஊதியம் வழங்க ஆணை


 
UPHC நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பணி நிரந்தரம் பெற்ற 372 செவிலியர்களுக்கு REGULAR PAY வழங்குவதற்கான நிதி துறை கோப்புகள் முக்கியமான இடங்களில் இருப்பதாலும் அதற்கான பணிகள் நடந்து வருவதாலும் தற்காலிகமாக் NUHM உள்ள நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூபாய் 8000 தை UPHC பணி நிரந்தரம் பெற்ற அனைத்து செவிலியர்களுக்கும் வழங்கவும் மீதம் உள்ள தொகையை விரைவில் தமிழக அரசின் நிதியில் இருந்து மொத்தமாக வழங்கவும் ஆணை வெளியிடபட்டு உள்ளது.

ஏனோ செவிலியர்களுக்கு மட்டும் கொஞ்சம் எல்லாம் வித்தியாசமாக நடைபெறுகிறது.

GRADE PAY 4450

AFTER GETTING REGULAR 8000 SALARY

இதுவும் கடந்து போகும்.

ALWAYS WE ARE SPECIAL BECAUSE WE ARE NURSE.

RAVI SEETHARAMAN