நமது செவிலியர்கள் அனைவருமே நன்கு அறிவர் கடந்த காலத்தில் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய சங்கத்தின் மூலம் தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரதிற்காகவும் மற்ற செவிலியர்களின் பிரச்னைக்காகவும் நண்பர்கள் அனைவரும் இணைந்து பணிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம்.
தற்பொழுது அதில் சில கருத்து வேறுபாடுகளால் சில குழப்பங்கள்.
தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் மற்றும் மற்ற பிரச்சனைகளை கையாளுவதில் தொய்வு நிலவி வருகிறது.
மேலும் இத்தனை நாள் நம்பி இருந்த செவிலியர்களை நடுவழியில் விட்டு செல்வதில் நாட்டமில்லை.
மேலும் பணிகளை நாம் திறம்பட மேற்கொள்ள நிரந்தர செவிலியர்களின் ஆதரவும் தேவைபடுகிறது.
மேலும் இனி வரும் நிரந்தர செவிலியர்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
அதே போல் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.காலம் கடந்து கொண்டு இருக்கிறது.
இதனை தனித்து தனிமனிதனாக செய்வது சிரமம் என்ற நிலையில் ஒரு சங்கம் என்ற அமைப்பு மூலம் அனைவரின் ஆதரவோடும் ஒற்றுமையோடும் தான் செய்ய முடியும்.
மேலும் தனிமனித விருப்புவெறுப்புகளுக்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை பூரணதள்ளுவதில் உடன்பாடு இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் நாங்கள் புதிய சங்கத்தின் மூலம் மணலை திரித்து மலையக்குவோம், வானத்தை வளைப்போம் என்றோ, நான் நேர்மையின் சிகரம், அப்பழுக்கற்றவன் என்றோ எல்லாம் சொல்ல வில்லை.
ஆனால் முடிந்த வரை செவிலிய சமூகத்திற்கான சீரான பயணத்திற்கு சரியான பாதையை அமைக்க விரும்புகிறோம்.
மேலும் இதனை பதிவிட காரணம் அனைத்து செவிலியர்களும் கேட்கும் ஒரே கேள்வி இப்படி திடிரென ஒதுங்கி கொண்டால் இத்தனை நாள் நம்பி வந்த நாங்கள் ...................
மேலும் மற்றவர்களோடு வெறும் வெத்து விவாதம் நடத்தி கொண்டுஇருக்க மனமில்லை.
மேற்கண்ட காரணங்ககளால் ஒரு முடிவு எடுக்க பட்டு உள்ளது.
புதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கவும் அதன் மூலம் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யபட்டு உள்ளது.
உங்கள் கருத்தை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை. உங்கள் கருத்துகளும் மாற்றுகருத்துகளும் வரவேற்கபடுகிறது.
முடிவு உங்கள் கையில் உங்கள் கருத்து
ஆரம்பிக்கலாமா வேண்டாமா
COMMENT
ரவி சீத்தாராமன்.
உங்கள் கருத்தை FACEBOOK மூலம் பதிவிடுங்கள்.
https://www.facebook.com/ravicameo
or
https://www.facebook.com/nurses.galata
polapu illaiya
ReplyDeleteவேண்டாம். தற்போதைய சங்கத்தையே சற்று மாற்றி அமைக்க வேண்டும். அரசியல்வாதி போல் செயல்படுபவர்களை தூக்கி ஏறிய வேண்டும். ஊரு ரெண்டு பட்ட கூத்தாடி க்கு கொண்டாட்டம் என்பாற்கள்.
ReplyDeleteJoin with us. We need u....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete