தற்போதைய 14–வது தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதம் 23–ந்தேதியுடன் முடிவடைகிறது
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
கடந்த தேர்தலில் பிப்ரவரி 28–ந்தேதி தேர்தல் தேதியும், தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதே போல் இந்த முறையும்
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் போது தொகுப்புதியத்தில் பணி புரிந்த செவிலியர்கள் அடுத்த தேர்தலுக்குள் பணி நிரந்தரம் வந்து விடும் என்று நம்பி இருந்தனர்.
ஆனால் இவர்கள் எண்ணம் இன்னும் ஈடேறாமல் கனவாகவே உள்ளது.
மூடப்படும் கதவுகளை உடைய கோயில்களில் கூட ஐந்து ஆண்டுகள் தொகுபூதியத்தில் பணி புரிந்த நபர்கள் கூட பணி நிரந்தரம் செய்யபட்டனர்
ஆனால் மூடாத கதவுகளை கொண்ட மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது.
தேர்தல் தேதி அறிவித்து விட்டால் வழக்கம் போல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது இனி என்ன செய்வது என்று கையை விரிப்பார்கள்.
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.