Wednesday, 30 December 2015

புதிதாக புதியதாக ஆரம்பிக்கலாமா


நமது செவிலியர்கள் அனைவருமே நன்கு அறிவர் கடந்த காலத்தில் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய சங்கத்தின் மூலம் தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரதிற்காகவும் மற்ற செவிலியர்களின் பிரச்னைக்காகவும் நண்பர்கள் அனைவரும் இணைந்து பணிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம்.

தற்பொழுது அதில் சில கருத்து வேறுபாடுகளால் சில குழப்பங்கள்.
தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் மற்றும் மற்ற பிரச்சனைகளை கையாளுவதில் தொய்வு நிலவி வருகிறது.
மேலும் இத்தனை நாள் நம்பி இருந்த செவிலியர்களை நடுவழியில் விட்டு செல்வதில் நாட்டமில்லை.

மேலும் பணிகளை நாம் திறம்பட மேற்கொள்ள நிரந்தர செவிலியர்களின் ஆதரவும் தேவைபடுகிறது.

மேலும் இனி வரும் நிரந்தர செவிலியர்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

அதே போல் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.காலம் கடந்து கொண்டு இருக்கிறது.

இதனை தனித்து தனிமனிதனாக செய்வது சிரமம் என்ற நிலையில் ஒரு சங்கம் என்ற அமைப்பு மூலம் அனைவரின் ஆதரவோடும் ஒற்றுமையோடும் தான் செய்ய முடியும்.

மேலும் தனிமனித விருப்புவெறுப்புகளுக்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை பூரணதள்ளுவதில் உடன்பாடு இல்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் நாங்கள் புதிய சங்கத்தின் மூலம் மணலை திரித்து மலையக்குவோம், வானத்தை வளைப்போம் என்றோ, நான் நேர்மையின் சிகரம், அப்பழுக்கற்றவன் என்றோ எல்லாம் சொல்ல வில்லை.

ஆனால் முடிந்த வரை செவிலிய சமூகத்திற்கான சீரான பயணத்திற்கு சரியான பாதையை அமைக்க விரும்புகிறோம்.

மேலும் இதனை பதிவிட காரணம் அனைத்து செவிலியர்களும் கேட்கும் ஒரே கேள்வி இப்படி திடிரென ஒதுங்கி கொண்டால் இத்தனை நாள் நம்பி வந்த நாங்கள் ...................

மேலும் மற்றவர்களோடு வெறும் வெத்து விவாதம் நடத்தி கொண்டுஇருக்க மனமில்லை.

மேற்கண்ட காரணங்ககளால் ஒரு முடிவு எடுக்க பட்டு உள்ளது.
புதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கவும் அதன் மூலம் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யபட்டு உள்ளது.

உங்கள் கருத்தை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை. உங்கள் கருத்துகளும் மாற்றுகருத்துகளும் வரவேற்கபடுகிறது.

முடிவு உங்கள் கையில் உங்கள் கருத்து

ஆரம்பிக்கலாமா வேண்டாமா

COMMENT

ரவி சீத்தாராமன்.

உங்கள் கருத்தை FACEBOOK மூலம் பதிவிடுங்கள்.

https://www.facebook.com/ravicameo

or
 
https://www.facebook.com/nurses.galata

 

Monday, 28 December 2015

தேர்தலும் - பணி நிரந்தரமும்தற்போதைய 14–வது தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதம் 23–ந்தேதியுடன் முடிவடைகிறது

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பிப்ரவரி 28–ந்தேதி தேர்தல் தேதியும், தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதே போல் இந்த முறையும்
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.ஒரு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் போது தொகுப்புதியத்தில் பணி புரிந்த செவிலியர்கள் அடுத்த தேர்தலுக்குள் பணி நிரந்தரம் வந்து விடும் என்று நம்பி இருந்தனர்.


ஆனால் இவர்கள் எண்ணம் இன்னும் ஈடேறாமல் கனவாகவே உள்ளது.


மூடப்படும் கதவுகளை உடைய கோயில்களில் கூட ஐந்து ஆண்டுகள் தொகுபூதியத்தில் பணி புரிந்த நபர்கள் கூட பணி நிரந்தரம் செய்யபட்டனர்


ஆனால் மூடாத கதவுகளை கொண்ட மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது.


தேர்தல் தேதி அறிவித்து விட்டால் வழக்கம் போல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது இனி என்ன செய்வது என்று கையை விரிப்பார்கள்.

 

Monday, 21 December 2015

தொகுபூதியத்தில் பணி இட மாறுதல் பெற்ற 2008 பேட்ச் செவிலியர்கள் கவனத்திற்கு

ஏற்கனவே பணி புரிந்த இடத்தில் இருந்து சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பி இருந்து புது இடத்திற்கு பணி இட மாறுதல் பெற்று சென்று இருந்தால் அங்கிருந்து தயவு செய்து புதிதாக சர்வீஸ் பர்டிகுலர் பெற்று தயாராக வைத்து கொள்ளவும்.

ஏனெனில் கலந்தாய்வுவுக்கு முன்னர் பின்னர்  பணி நியமன ஆணைகளில் இது பல குழப்பங்களை ஏற்படுத்தும்.

ஒரே நாளில் அனைவரும் தபால் மூலம் மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

தேதி மற்றும் மெயில் ID ஓரிரு நாளில் தெரிவிக்கபடும்.


அதே போல் 2008 பேட்ச் எல்லாருமே இந்த சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். ஏனெனில் இதற்காக அடுத்த கவுன்சிலிங் வரும் பட்சத்தில் குழப்பம் இல்லாமல் இருக்கும்.

முடிந்தால் நான்கு காப்பிகள் கையொப்பம் பெற்று வைத்து கொள்ளவும்.

பெரிதாக ஒன்றும் குழப்பி கொள்ள வேண்டாம்.

ரவி சீத்தாராமன்


SERVICE PARTICULARS   MO அல்லது BMO அல்லது OS யாராவது ஒருவரிடம் கையெழுத்து பெற்று வந்தால் போதும்.

மெடிக்கல் லீவ் இல் இருந்தால் SERVICE PARTICULARS   தர இயலாது என்று MO  இல் கூறினால் SERVICE PARTICULARS FORM ல்  மருத்துவ விடுப்பில் இந்த செவிலியர் உள்ளார் என்று கூறி MENTION செய்து SERVICE PARTICULARS தர சொல்லுங்கள்.


 
 SERVICE PARTICULARS
 

1
Name of the Individual
 
          KIRTHIKA.S                              
2
Date of Birth
 
      24/09/1986                       
 
3
The office proceedings No.in which
 
appointed along with SI.No
 
 
17352/N1/2/2009 Dated 2009
 
104
4
Date of Joining in the First Posting
 
             27.06.2009      
 
5
Place if Joining
 
GPHC Melakkal, Madurai HUD
6
If transferred, present place of posting
 
 
7
Date of joining in the Present Station
 
                       
                          27/06/2009
 
8
Whether he/she is continuously working for two years
 
YES
9
If not, the period of absence on duty in number of days
 
NIL
 
10
The date of completion of two years(excluding leave)
 
27.06.2011
11
Whether the conduct and performance are good
 
VERY GOOD
 

Thursday, 17 December 2015

2009 2010 BATCH பணி நிரந்தரத்திற்கான இறுதி முயற்சிதெரிவிக்கிறோம்
வெற்றி பெற்றால் 
GRADE II கவுன்சலிங் இந்த மாத இறுதியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த மாதிரி எல்லாம் ஸ்டேடஸ் போடவே உண்மையை சொல்ல வேண்டுமானால் வெக்கமாகவும் வேதனையாகவும்  உள்ளது. பல மாதமாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள், நாமும் சொல்லி கொண்டு இருக்கிறோம்.
 
 
இத்தனை தொடர்ந்து பணி நிரந்தர கலந்தாய்வு இருக்க வாய்ப்பு உள்ளது.
 
2008 பேட்ச் செவிலியர்கள் எதற்கும் சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து தயாராக வைத்து கொள்ளவும்.
ரவி சீத்தாராமன்

Tuesday, 1 December 2015

புதிய DMS?????????

 
மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்கள் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.