அன்பான செவிலிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் கூட்டம்
நாள்: 17-10-2015 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 12PM - 6PM
இடம்: ஹோட்டல் காலேஜ் ஹவுஸ்
(திருவள்ளுவர் ஹால் )
ரெயில்வே ஸ்டேஷன் எதிர்புறம்,
மதுரை.
நமது சங்கத்தின் பதிவு முழுமையாக முடிக்காத காரணத்தினாலும், சில மாவட்டப் பொறுப்பாளர்கள் ஒரு வார கால அவகாசம் கேட்ட காரணத்தினாலும், 10/10/2015 அன்று நடைபெற இருந்த சங்கத்தின் அமைப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு 17/10/2015 அன்று மதுரை இரயில் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டல் காலேஜ் ஹைவுஸ் திருவள்ளூர் ஹாலில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் சகோதர சகோதரிகள் அனைவரும் அந்த அந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடம் சங்கத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.
நமது சங்கத்தின் அடுத்தகட்ட தொடர் போராட்டங்களை நடத்தவதற்கு சங்கத்தின் அமைப்பு பலம் அவசியமானது."சட்டப்பூர்வமாக நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமானது". எனவே விரைந்து சங்கத்தின் உறுப்பினர் ஆகி நமது சங்கத்தின் பலத்தையும், கோரிக்கைகளின் ஞாயத்தையும், ஒற்றுமையுடன் நமது அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது.

திருமதி.வே.தேவிகா,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலயர் நலச்சங்கம்.
சென்னை.
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலயர் நலச்சங்கம்.
சென்னை.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.