Wednesday, 23 September 2015

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

1.அரசு  மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

2.அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.

3.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 6 செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.

4.அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.

5. அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று
(16-09-2015 நேரம்  8-5 pm), DMS வளாகத்தில் நடைபெற்றது.

உண்ணாவிரதத்தில்

வரவேற்பு: 
திருமதி. C. மாரிச்செல்வி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம், சென்னை.

தலைமை:
திருமதி B. கலைச்செல்வி, 
மாநில இணைச்செயலாளர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.

துவக்கவுரை:
Dr.G.R. இரவீந்திரநாத்,
மாநில பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

கோரிக்கை விளக்க உரை:
திரு. B. பசுபதி நந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம், சிவகங்கை.

வாழ்த்துரை:
திருமதி. R. தமிழ்ச்செல்வி,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

திரு.ச.இ.கண்ணன்,
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

திரு. மோகன்,
மாநில பொருளாளர், பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கம்,

திரு. இரவி,
மாநில துணை தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,

உண்ணாவிரதத்தை முடித்து வைப்பவர்.
திரு. குணசேகரன்,
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.

நன்றியுரை: ம. உமாபதி, மாநில நிர்வாக குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.