Friday, 18 September 2015

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலசங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு


நாள்:20/09/2015
நேரம்: திருச்சி- கம்யுனிஸ்ட் கட்சி அலுவலக கட்டடத்தில்-திருச்சி அரசு மருத்துவ கல்லுரி எதிரே
நேரம்: மதியம் 1 முதல் 5 வரை

வரும் 20/09/2015 அன்று திருச்சியில் அரசு மருத்துவ கல்லுரி எதிரே உள்ள கம்யுனிஸ்ட் கட்சி அலுவலக கட்டடத்தில் தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலசங்கத்திற்கு
மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தெடுக்க பட உள்ளனர்.

தயவுசெய்து செவிலியர் நலன் சார்ந்த பணிகளை துடிப்புடன், புதுமையாக,செம்மையாக செய்ய கூடிய நபர்களை தேர்தெடுக்க உள்ளோம்.
விருப்பம் உள்ள செவிலியசகோதரசகோதரிகள் யார் வேண்டுமானாலும் இந்த தேர்தலில் கலந்து கொள்ளலாம்.
உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர்களே தலைமையிடத்திற்கு மாவட்ட நிர்வாகிகளாகவும் தேர்தெடுக்கபடுவர்.

மேலும் கூட்டத்திற்கு மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டால் மட்டுமே சரியான நபர்களை முறையாக தேர்தெடுக்க முடியும்.
அனைத்து செவிலியர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும். சிரமம் என்ற போதிலும் நம் அனைவரின் பிரச்சனைகளை சரி செய்ய வேறு வழியில்லை.
இந்த கூட்டத்தில் தேர்தெடுக்கபடும் சகோதரசகோதரிகள் மட்டுமே தொகுப்பூதிய செவிலியர் மற்றும் செவிலியர் நலன் சார்ந்த பணிகளை இனிவரும் காலங்களில் முன்னெடுத்து செல்வர்.
மீண்டும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டி, வேண்டி கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.