Monday, 14 September 2015

கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் உண்டு உண்டு உண்டு



வரும் 16/09/2015 அன்று திட்டமிட்டபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத நடைபெறும்.

முடிந்த வரை அனைவரும் காலை 7 மணிக்கே வந்து விடவும்.
நேரம்:காலை 8 மணி முதல் 5 மணி வரை
 
ஒரு சிறு மாற்றம்
நடைபெறும் இடம்
DMS வளாகம்
தேனாம்பேட்டை
சென்னை


அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களின் 2015 குள் பணி நிரந்தரம் என்ற நனவை நனவாக்கும் முயற்சியில் முதல் படியான இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த நாம் முயற்சி மேற்கொண்டால்
 
நமது நனவை கனவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதோடு உண்ணாவிரதம் கிடையாது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி செவிலியர் மத்தியில் குழப்பம் விளைவித்து வருகின்றனர். இதனை யாரும் கருத்தில் கொள்ள வேண்டாம்.
 
முடிந்த வரை தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வரவும்.
மேலும் பேருந்து வசதி செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் மேலும் நிதி சமந்தமான சில பிரச்சனைகள் இருப்பதால் மாற்று ஏற்பாடாக அனைத்து மாவட்டங்களில் இருந்து கவனஈர்ப்பு உண்ணாவிரதத்திற்கு வரும் அனைத்து செவிலியர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அந்த அந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்புசெயல்பட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கபடும்.

இதன் மூலம் அனைவரும் இனைந்து ஒரே பேருந்திலோ அல்லது ஒரு வேன் போன்ற வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியோ ஒன்றாக இணைந்து கவனஈர்ப்பு உண்ணாவிரதத்திற்கு வந்து விட வேண்டி கேட்டு கொள்கிறோம்.
 
மேலும் வரும்பொழுது சீருடை எடுத்து வரவும். மாற்றம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யபடும்.

மேற்கொள்ளும் முயற்சிகளில் பல தடைகள் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. சில குறைகள் இருக்கலாம். வரும் காலங்களில் இவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். ஏழு வருடம் தொகுப்பூதியம் என்ற சுமையை சுமந்த நமக்கு இதெல்லாம் ஒரு பிரச்னை அல்ல என நம்புகிறோம்.
 
வீட்டில் எதாவது பிரச்னை அல்லது எதாவது நமக்கு வேண்டும் என்றால் அம்மாவிடம் கோபித்து கொண்டு சாப்பிடாமல் இருபதற்கு அர்த்தம் அம்மாவை நமக்கு பிடிக்காது என்பது அல்ல, நமக்கு வேண்டியதை நமது அம்மாவிடம் கேட்க நமக்கு உரிமை உண்டு. அது போலதான் இதுவும்
 
நமது முதல்வர் அம்மாவிடம் நாம் கேட்கிறோம், கேட்பதற்கு நமக்கு உரிமை உண்டு. கொடுப்பதற்கு அவர்களிடம் மனமும் உண்டு. பின்பு எதற்கு தயக்கம்?
 
முயற்சிப்பது எங்கள் கையில், வெற்றி பெற வைப்பது உங்கள் கையில்.

1 comment:

  1. மதிபிற்குரிய நிர்வாகிகள் அவர்களுக்கு,

    எங்களின் நலன் கருதி நீங்கள் மேற்கொள்ளும் அணைத்து செயல்களும் வரவேற்க கூடியவை என்பதில் துளியும் மாற்று கருத்தில்லை. ஆனால் பணியிட மாற்றம் நடைபெற்றதில் எத்தனை பேருக்கு பணியிட மாற்ற ஆணை வரையவில்லை என்பதை அறிந்ததுண்டா? பல செவிலியர்கள் தேவையான இடத்தை தேர்வு செய்தும் ஆணை வரமால் காத்திருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? அவர்களுக்காக நமது இயக்கத்தின் சார்பாக dms அலுவலத்தை தொகுப்பூதிய சங்கத்தின் சார்பாக தொடர்பு கொண்டு காரணத்தை அறிந்து தெளிவு படுத்திநீர்களா? பலருக்கு ஆணை கிடைக்கபெற்று சிலர் ஆணை கிடைக்காமல் தவிப்பது சங்கத்துக்கு கவலையில்லையா

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.