நண்பர் உமாபதி அவர்களுக்கும் திருமதி.கலைச்செல்வி அவர்களுக்கும் இரண்டு வாரம் முன்பு ஆகஸ்ட் 27 தேதி மிகவும் எளிமையான முறையில் திருச்சியில் திருமணம் நடந்தது.
அதனை தொடர்ந்து வரும் 12/09/2015 அன்று விழுப்புரம் அருகே உள்ள கானை என்ற ஊரில் உள்ள செந்தமிழ் திருமண மண்டபத்தில் மாலை ஆறு மணி முதல் 7:30 மணி வரை நண்பரின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
தோழர் உமாபதி பற்றி அனைவரும் அறிவர். அவர் செவிலிய சமூகத்திற்கு ஆற்றி வரும் பணிகள் குறித்தும் இங்கே சொல்லி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது இல்லை.
செவிலியர் நலனுகாக அவர் மேற்கொண்டு முயற்சிகள், ஆற்றிய பணிகள் ஏராளம், அதை அனைவரும் நன்கு அறிவர் எனினும் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் திருமணம் முடிந்த ஒரு நாள் தான் ஆகிறது பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும், செவிலியர் நலன் சார்ந்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த நாளே கலந்து கொண்டதோடு அதற்கான பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டார்.
காதல்-கல்யாணம்
அனைவரது வாழ்விலும் இந்த இரண்டும் இருக்கும்.
ஆனால் சிலரது வாழ்வில் மட்டுமே இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் இருக்கும்.
அந்த வகையில் தோழர் உமாபதி அவர்களின் வாழ்வில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
செவிலியர் நலனுக்காக பல பணிகளை மேற்கொண்டு வரும் தோழர் உமாபதி அவர்கள் திருமண வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டி அனைத்து செவிலியர்களின் சார்பாகவும் மனமார வாழ்த்துகிறோம்.
திருமண வாழ்த்துக்கள்
ReplyDeleteதிருமண வாழ்த்துக்கள்
ReplyDelete