Tuesday, 1 September 2015

பணி நிரந்தரத்தை வலியுறுத்தி, தொகுபூதியத்தை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் நிரந்தர மற்றும் தொகுப்பூதிய செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்




மரியாதையைகுரிய மூத்த நிரந்தர செவிலியர்கள் அனைவர்க்கும்  அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரதிற்காக மரியாதையைகுரிய சீனியர் ரெகுலர் செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து பணி புரிந்து வருகின்றனர்.

அவர்கள் அனைவர்க்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 
பொதுவாக நமது செய்திகளை மீடியாவில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால் மீடியாவை பொறுத்தவரை கரண்டு கம்பத்தில் ஏறி செவிலியர் போராட்டம், செல்போன் டவர் மீது ஏறி பணி நிரந்தரத்தை வலியுருத்தி செவிலியர் தற்கொலை மிரட்டல், நோயாளிக்காக செவிலியர் வாட்டம்னா போடாதவர்கள், ஓட்டம்னா கோட்டை எழுத்தில் போடுவார்கள், அவர்களை சொல்லி குற்றம் இல்லை அப்படி இருந்தால் தான் அரசும் சரி மக்களும் சரி திரும்பி பார்பார்கள்.
 
பிரச்சனை என்னவென்றால் அடித்தளமே நாம் தான் அமைக்க வேண்டியுள்ளது.
 
அதனால் சிறிது சிரமமாக உள்ளது, உரிமைகளை ஊமையாக இருந்தால் பெற முடியாது.
 
நாம் ஒன்றும் அநியாமான கோரிக்கை ஒன்றையும் வைக்கவில்லை.
உங்களுக்கு டெலிவரிபார்க்க நர்ஸ் வேணும், 24 PHC ல நர்ஸ் வேணும், ஊசி போட நர்ஸ் வேணும், BP பார்க்க நர்ஸ் வேணும், எல்லாத்துக்கும் நர்ஸ் வேணும், ஆனா காண்ட்ராக்ல வேணும்.
10 ஆம் படிச்ச லேப் அசிஸ்டென்ட் ரெகுலர், VAO ரெகுலர், ஆனா DIPLOMA, BSC, MSC, PHD முடிச்ச செவிலியர்கள் தொகுப்புதியம் , பரிச்சை எழுதி பாஸ் பண்ணி வந்தா கூட தொகுப்பூதியம் இது எந்த ஊரு நியாயம்னே தெரியல

 
விரைவில் சரியான விடை கிடைக்காத பட்சத்தில் ஏற்கனவே தீர்மானித்த உண்ணாவிரம், MCI மீது வழக்கு தொடுக்க வேண்டியது தான்.
  





 





























No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.