Wednesday, 9 September 2015

செவிலியர்கள் உண்ணாவிரதம் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி நாள்-16/09/2015-இடம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை


 

 
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் இணைந்து பணி நிரந்தரத்தை வலியுறுத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வரும் 16/09/2015 அன்று சென்னையில் அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.
 
 
இதன் பின்பும் நமக்கு முறையான நீதி வழங்கபடாத பட்சத்தில் வரும் 19 தேதி முதல் DMS வளாகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடவும் முடிவு செய்யபட்டு உள்ளது. அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் MCI மீது வழக்கு தொடுக்கவும் முடிவு செய்யபட்டு உள்ளது.

 

 

உண்ணாவிரத போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திருமதி. தமிழ்செல்வி மற்றும் , பொது செயலாளர் திரு. பாலு அவர்கள், மற்றும் செயலாளர் திரு. கண்ணன் அவர்கள் கலந்து கொள்ள இருகின்றனர்.  
 
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 
 
அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.
 
மேலும் சில முக்கியமானவர்களையும் அழைத்து உள்ளோம்.
 
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் பெரும்பாலனோர் பெண்கள் என்ற காரணத்தால் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து சென்று வர பயணம் சார்ந்த விஷயங்களை திட்டமிட்டு வருகிறோம்.
 
விரைவில் வழிமுறைகள் தெரிவிக்கபடும்.

UNIFORM எடுத்து வரவும், மற்ற வசதிகள் அங்கேயே செய்யபடும்.
 
நிதி தேவை
நாளை தொகுப்பூதிய செவிலிய நல அறகட்டளையின் வங்கி விவரம் தெரிவிக்கபடும்.


மற்ற சில விஷயங்களை திட்டமிடவேண்டி போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் செவிலியர்களின் எண்ணிக்கை நமக்கு தேவைபடுகிறது.  கலந்து கொள்ள இருக்கும் அனைத்து செவிலியர்களும் இங்கே பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் மற்ற விவரங்களை பதிந்து விடவும். 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.