தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Friday, 25 September 2015
Wednesday, 23 September 2015
கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் போராட்டம்
1.அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2. அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.
3.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 6 செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
4.அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.
5.அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு அறவழி போராட்டம் இன்று
(23-09-2015 நேரம் 10- 1 pm), DMS வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்திற்கு
வரவேற்பு:
திரு. ம. உமாபதி,
மாநில நிர்வாக குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.
தலைமை:
திருமதி. வே. தேவிகா,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.
முன்னிலை:
திரு. வசந்த குமார், தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,
துவக்கவுரை:
மாண்புமிகு. குணசேகரன் அவர்கள், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
வாழ்த்துரை:
மாண்புமிகு. இராமச்சந்திரன் அவர்கள்,
தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.
திரு. சிவசூரியன் அவர்கள்.
விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர்.
திரு. பால்பாண்டியன் அவர்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்.
திரு. தொல்காப்பியன்
இளநிலை உதவியாளர் சங்கம்
திரு. சீதாராமன்,
திரு. கவிராஜ்,
முத்துமாரி அவர்கள்.
நன்றியுரை:
திரு. ஜான்சன்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
1.அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2.அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.
3.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 6 செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
4.அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.
5. அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று
(16-09-2015 நேரம் 8-5 pm), DMS வளாகத்தில் நடைபெற்றது.
உண்ணாவிரதத்தில்
வரவேற்பு:
திருமதி. C. மாரிச்செல்வி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம், சென்னை.
தலைமை:
திருமதி B. கலைச்செல்வி,
மாநில இணைச்செயலாளர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.
துவக்கவுரை:
Dr.G.R. இரவீந்திரநாத்,
மாநில பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
கோரிக்கை விளக்க உரை:
திரு. B. பசுபதி நந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம், சிவகங்கை.
வாழ்த்துரை:
திருமதி. R. தமிழ்ச்செல்வி,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
திரு.ச.இ.கண்ணன்,
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
திரு. மோகன்,
மாநில பொருளாளர், பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கம்,
திரு. இரவி,
மாநில துணை தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,
உண்ணாவிரதத்தை முடித்து வைப்பவர்.
திரு. குணசேகரன்,
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.
நன்றியுரை: ம. உமாபதி, மாநில நிர்வாக குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,
Monday, 21 September 2015
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலவாழ்வு சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்ட மன்றத்தில் சுகாதார துறை மானிய கோரிக்கை நடைபெறும் அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாள்: 23-09-2015
இடம்: DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை.
நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை.
அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்.
தொடர்புக்கு
திரு. வசந்தகுமார்
98 43 845593
Friday, 18 September 2015
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலசங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
நாள்:20/09/2015
நேரம்: திருச்சி- கம்யுனிஸ்ட் கட்சி அலுவலக கட்டடத்தில்-திருச்சி அரசு மருத்துவ கல்லுரி எதிரே
நேரம்: மதியம் 1 முதல் 5 வரை
வரும் 20/09/2015 அன்று திருச்சியில் அரசு மருத்துவ கல்லுரி எதிரே உள்ள கம்யுனிஸ்ட் கட்சி அலுவலக கட்டடத்தில் தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலசங்கத்திற்கு
மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தெடுக்க பட உள்ளனர்.
தயவுசெய்து செவிலியர் நலன் சார்ந்த பணிகளை துடிப்புடன், புதுமையாக,செம்மையாக செய்ய கூடிய நபர்களை தேர்தெடுக்க உள்ளோம்.
விருப்பம் உள்ள செவிலியசகோதரசகோதரிகள் யார் வேண்டுமானாலும் இந்த தேர்தலில் கலந்து கொள்ளலாம்.உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர்களே தலைமையிடத்திற்கு மாவட்ட நிர்வாகிகளாகவும் தேர்தெடுக்கபடுவர்.
மேலும் கூட்டத்திற்கு மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டால் மட்டுமே சரியான நபர்களை முறையாக தேர்தெடுக்க முடியும்.
அனைத்து செவிலியர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும். சிரமம் என்ற போதிலும் நம் அனைவரின் பிரச்சனைகளை சரி செய்ய வேறு வழியில்லை.
இந்த கூட்டத்தில் தேர்தெடுக்கபடும் சகோதரசகோதரிகள் மட்டுமே தொகுப்பூதிய செவிலியர் மற்றும் செவிலியர் நலன் சார்ந்த பணிகளை இனிவரும் காலங்களில் முன்னெடுத்து செல்வர்.
மீண்டும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டி, வேண்டி கேட்டு கொள்கிறோம்.
நல்ல பேர நீங்க வாங்க
நாறு நாறாய் கிழியுறோமே நாங்க!
ஐயா நாங்க வாழ
ஒரு திட்டம்
நீங்க போட்டதில்ல ஏங்க!
வருசம் ஏழு ஆகி போச்சி
வனவாசம் முடியவில்லை இங்க!
எட்டாயிரம்
நாங்க வாங்க எழும்பு நொறுங்க
உழைக்கிறோமே ஏங்க!
இரவு,பகல் சிப்ட் போட்டு
வாட்டி நீங்க வதைக்கையிலும்
சத்தம் நாங்க போட்டதில்ல!!
ஏன்னு கூட கேட்டதில்ல இங்க!
வித விதமாய் நோய் வந்து
உயிர்ப்கொன்று போகும்போது,
ரண ரணமாய் நாங்க -இருந்தும் ராப்பகலாய் அழையுறோமே ஏங்க!
இரத்த பந்தம் வீட்டினிலே
நோய்பட்டு படுத்தாலும்,
எட்ட நின்னு பார்த்திடவும்
எட்டு தினம் ஆகுமய்யா இங்க,
பல்லுபோன பாட்டன் கூட
ஓய்வுகூலி முப்பதாயிரம் வாங்கயில;
முன்னூறு ரூபாய்க்குள்
என் இளமையினை தொலைக்கிறேனே இங்க!
ஊர் குடும்பம்
நல்லா இருக்க
ஊர் ஊராய் திரியுறோமே நாங்க!
தாய்ப்பால கொடுக்க சொல்லி
தக்க சேதி சொல்லுறமே நாங்க!
எம்புள்ள பாலுக்காக ஏங்குதய்யா இங்க!
எங்களுக்கும் குடும்பமுண்டு ஐய்யா
அத மறக்காம நெனைக்கனுமே நீங்க!
,
நைட்டிங்கேர்ள வாழும்-
எங்கள
பைட்டிங்கேர்ளா மாத்த வேணாம் நீங்க!
மாற்றம் வேணும் எங்களுக்கு;
நிரந்தரமாக்கிவிடு-
சீக்கிரமாய்!!!!
கவிதை வடித்த ஆண் செவிலியர் ரமேஷ்கு செவிலியர்கள் சார்பாக நன்றி
Thursday, 17 September 2015
Monday, 14 September 2015
கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் உண்டு உண்டு உண்டு
வரும் 16/09/2015 அன்று திட்டமிட்டபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத நடைபெறும்.
முடிந்த வரை அனைவரும் காலை 7 மணிக்கே வந்து விடவும்.
ஒரு சிறு மாற்றம்
நடைபெறும் இடம்
DMS வளாகம்
தேனாம்பேட்டை
சென்னை
அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களின் 2015 குள் பணி நிரந்தரம் என்ற நனவை நனவாக்கும் முயற்சியில் முதல் படியான இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த நாம் முயற்சி மேற்கொண்டால்
நமது நனவை கனவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதோடு உண்ணாவிரதம் கிடையாது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி செவிலியர் மத்தியில் குழப்பம் விளைவித்து வருகின்றனர். இதனை யாரும் கருத்தில் கொள்ள வேண்டாம்.
முடிந்த வரை தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வரவும்.
மேலும் பேருந்து வசதி செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் மேலும் நிதி சமந்தமான சில பிரச்சனைகள் இருப்பதால் மாற்று ஏற்பாடாக அனைத்து மாவட்டங்களில் இருந்து கவனஈர்ப்பு உண்ணாவிரதத்திற்கு வரும் அனைத்து செவிலியர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அந்த அந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்புசெயல்பட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கபடும்.
இதன் மூலம் அனைவரும் இனைந்து ஒரே பேருந்திலோ அல்லது ஒரு வேன் போன்ற வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியோ ஒன்றாக இணைந்து கவனஈர்ப்பு உண்ணாவிரதத்திற்கு வந்து விட வேண்டி கேட்டு கொள்கிறோம்.
மேலும் வரும்பொழுது சீருடை எடுத்து வரவும். மாற்றம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யபடும்.
மேற்கொள்ளும் முயற்சிகளில் பல தடைகள் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. சில குறைகள் இருக்கலாம். வரும் காலங்களில் இவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். ஏழு வருடம் தொகுப்பூதியம் என்ற சுமையை சுமந்த நமக்கு இதெல்லாம் ஒரு பிரச்னை அல்ல என நம்புகிறோம்.
வீட்டில் எதாவது பிரச்னை அல்லது எதாவது நமக்கு வேண்டும் என்றால் அம்மாவிடம் கோபித்து கொண்டு சாப்பிடாமல் இருபதற்கு அர்த்தம் அம்மாவை நமக்கு பிடிக்காது என்பது அல்ல, நமக்கு வேண்டியதை நமது அம்மாவிடம் கேட்க நமக்கு உரிமை உண்டு. அது போலதான் இதுவும்
நமது முதல்வர் அம்மாவிடம் நாம் கேட்கிறோம், கேட்பதற்கு நமக்கு உரிமை உண்டு. கொடுப்பதற்கு அவர்களிடம் மனமும் உண்டு. பின்பு எதற்கு தயக்கம்?
முயற்சிப்பது எங்கள் கையில், வெற்றி பெற வைப்பது உங்கள் கையில்.
Friday, 11 September 2015
தோழர் உமாபதி அவர்களின் திருமண வரவேற்பு-12/09/2015
Thursday, 10 September 2015
நிதி அவசரம்-தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை
அனைத்து செவிலியர்கள் கனிவான கவனத்திற்கு
நமது தோழர் திரு உமாபதி மற்றும் பல செவிலிய நண்பர்களின் முயற்சியால் தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை என்ற அமைப்பு துவங்கபட்டு உள்ளது.
இதன் மூலம் திரட்டபடும் நிதி முழுக்கமுழுக்க செவிலியர் நலன் சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தபடும்.
கடந்த காலங்களில் எதிர்பாராமல் செவிலியர்கள் சிலர் இறந்த பொழுது நம்மால் FACEBOOK கிலும் இணையத்திலும் RIP வருந்துகிறோம் என்று தெரிவிக்கிறோம், ஆனால் உண்மையில்
இத்தனை ஆயிரம் பேர் இருந்தும் அவர்களுக்கு நம்மால் உதவ வேண்டும் என்று நினைத்தால் கூட எப்படி செய்வது என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே மறந்து விட்டு விடுகிறோம்.
இந்த நிலை மாறவேண்டும் அதனை நாம் அனைவரும் இணைந்து மாற்ற வேண்டும்.
அரசு உதவ வேண்டும் என்று தெரிவிக்கிறோம், ஏன் 15000 பேருக்கு மேல் உள்ள நாம் நினைத்தால் முடியாத ?
பத்து ரூபாய் கொடுத்தால் போதும் 150000 லட்சம்.
பத்து ரூபாய் கூடவா நாம் கொடுக்க முடியாது ?
அது மட்டுமில்லாமல் செவிலியர் நலன் சார்ந்த கருத்தரங்குகள், போராட்டங்கள் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு குறைந்த பட்ச நிதியாவது தேவை படுகிறது.
எமர்ஜென்சி:
வரும் வாரத்தில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதால் அது சமந்தமான பணிகளை மேற்கொள்வதற்கு அதே பேருந்து போன்ற வசதிகளை செய்து தர உத்தேசித்து இருப்பதால் ரூபாய் 1000 நிதியை உடனடியாக செலுத்துமாறு செவிலியர்கள் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
ரூபாய்: 1000
நிதி செலுத்தும் முறை:
இந்தியன் வங்கிகளில் செலுத்தலாம் ஒரு வேளை தங்களுக்கு அருகில் இந்தியன் வங்கி இல்லாத பட்சத்தில் தங்களுக்கு அக்கவுன்ட் உள்ள எந்த வங்கியில் இருந்தும் NEFT என்ற முறையின் மூலம் தங்கள் வங்கியில் இருந்தே இந்த இந்தியன் வங்கி வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யலாம்.
முக்கிய குறிப்பு:
நீங்கள் பணம் செலுத்திய அடுத்தகணம் நீங்கள் செய்ய வேண்டியது நமது இணைய தளத்தில் உள்ள செவிலியர் நலவாழ்வு அறகட்டளை என்ற பக்கத்தில் தங்கள் பெயர் மற்றும் தாங்கள் செலுத்திய தொகையை உடனடியாக பதிவு செய்யவும். இதனை 24 மணி நேரமும் செலுத்தியவர்கள் விவரத்தை உடனே தெரிந்து கொள்ளலாம்.
www.tnfwebsite.com
100% இந்த தொகை செவிலியர் நலன் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தபடும். மேலும் இத்தனை நிர்வகிப்பது திரு.உமாபதி என்பதால் 100% மாற்று கருத்துக்கு இடம் இல்லை.
NAME: TAMILNADU NURSES WELFARE TRUST
ACCOUNT NUMBER : 63707 44909
BRANCH : KANAI INDIAN BANK(Villupuram District)
IFSC Code : IDIB000K063 (5th character is zero)
மேலும் இது சமந்தமாக இன்னும் குழப்பம் வந்தாலோ அல்லது பணம் செலுத்தும் முறையில் சிரமம் இருப்பதாக கருதினால் தொடர்பு கொள்ளவும்.
Wednesday, 9 September 2015
செவிலியர்கள் உண்ணாவிரதம் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி நாள்-16/09/2015-இடம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
UNIFORM எடுத்து வரவும், மற்ற வசதிகள் அங்கேயே செய்யபடும்.
மற்ற சில விஷயங்களை திட்டமிடவேண்டி போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் செவிலியர்களின் எண்ணிக்கை நமக்கு தேவைபடுகிறது. கலந்து கொள்ள இருக்கும் அனைத்து செவிலியர்களும் இங்கே பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் மற்ற விவரங்களை பதிந்து விடவும்.
05/08/2015-பணி இட மாறுதல் ஆணை
கடந்த மாதம் 05/08/2015 அன்று நடைபெற்ற தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி இட மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கான பணி இட மாறுதல் ஆணைகள் கீழ் கண்ட அனைத்து அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபட்டு உள்ளது.
alljdhs <alljdhs@gmail.com>,
cuddalore jdhs <cuddalore.jdhs@gmail.com>,
Dharmapuri JDHS <dharmapuri.jdhs@gmail.com>,
"dindigul.jdhs" <dindigul.jdhs@gmail.com>,
erode jdhs <erode.jdhs@gmail.com>,
JDHS Coimbatore <coimbatore.jdhs@gmail.com>,
JDHS Sivagangai <sivaganga.jdhs@gmail.com>,
JDHS Thanjavur <thanjavur.jdhs@gmail.com>,
JDHS Thirunelveli <tirunelveli.jdhs@gmail.com>,
JDHS Thiruvallur <tiruvallur.jdhs@gmail.com>,
JDHS Thiruvannamalai <tvmalai@gmail.com>,
JDHS Thiruvarur <tiruvarur.jdhs@gmail.com>,
JDHS Thoothukudi <tuticorin.jdhs@gmail.com>,
JDHS Trichy <trichy.jdhs@gmail.com>,
JDHS Vellore <vellore.jdhs@gmail.com>,
JDHS Villupuram <villupuram.jdhs@gmail.com>,
Kanchipuram jdhskanchipuram <kanchipuram.jdhs@gmail.com>,
kanyakumari jdhs <kanyakumari.jdhs@gmail.com>,
Karur Jdhs <karur.jdhs@gmail.com>,
krishnagiri.jdhs@gmail.com,
Nagapattinam Jdhs <nagapattinam.jdhs@gmail.com>,
namakkal.jdhs@gmail.com,
Perambalur Jdhs <perambalur.jdhs@gmail.com>,
Pudukottai Jdhs <pudukottai.jdhs@gmail.com>,
Salem Jd <salem.jdhs@gmail.com>,
The Nilgiris Jdhs <thenilgiris.jdhs@gmail.com>,
theni.jdhs@gmail.com,
"tiruppur.jdhs" <tiruppur.jdhs@gmail.com>,
"virudhunagar.jdhs" <virudhunagar.jdhs@gmail.com
ddhs Ariyalur <ddh.tnari@nic.in> , DDHS Cheyyar <dphcyr@nic.in> , DDHS Coimbatore <dphcbe@nic.in> , DDHS Cuddalore <dphcud@nic.in> , DDHS Dharmapuri <dphdpi@nic.in> , DDHS Dindigul <dphdgl@nic.in> , DDHS Erode <dpherd@nic.in> , DDHS Kallakurichi <dphkkr@tnhsp.net> , DDHS Kancheepuram <dphkpm@nic.in> , DDHS Kanniyakumari <dphkkm@nic.in> , DDHS Karur <dphkar@nic.in> , DDHS Kovilpatti <dphkpt@nic.in> , DDHS Krishnagiri <dphkgi@nic.in> , DDHS Madurai <dphmdu@nic.in> , DDHS Nagapattinam <dphngp@nic.in> , DDHS Namakkal <dphnmk@nic.in> , DDHS Nilgiris <dphnlg@nic.in> , DDHS Palani <dphpal@nic.in> , DDHS Paramakudi <dphpkd@nic.in> , DDHS Perambalur <dphpmb@nic.in> , DDHS Poonamallee <dphpme@nic.in> , DDHS Pudukottai <dphpdk@nic.in> , DDHS Ramanathapuram <dphrmd@nic.in> , DDHS Saidapet <dphsad@nic.in> , DDHS Salem <dphslm@nic.in> , DDHS Sankarankoil <dphskk@nic.in> , DDHS Sivagangai <dphsvg@nic.in> , DDHS Sivakasi <dphski@nic.in> , DDHS Thanjavur <dphtnj@nic.in> , DDHS Theni <dphthn@nic.in> , DDHS Thiruvannamalai <dphtvm@nic.in> , DDHS Thoothukudi <dphtut@nic.in> , DDHS Tirunelveli <dphtnv@nic.in> , DDHS Tirupattur <dphtpt@nic.in> , DDHS Tiruppur <dphtpr@nic.in> , DDHS Tiruvarur <dphtvr@nic.in> , DDHS Tiruvellore <dphtlr@nic.in> , DDHS Trichy <dphtry@nic.in> , DDHS Vellore <dphvel@nic.in> , DDHS Villupuram <dphvpm@nic.in> , DDHS Virudhunagar <dphvnr@nic.in> , dphatg@nic.in
4/8/2015 கவுன்சிலிங் ஆணைகள் அனுப்பபட்டுள்ள முகவரிகள்
alljdhs@gmail.com , ddh.tnari@nic.in , dphcyr@nic.in , dphcbe@nic.in , dphcud@nic.in , dphdpi@nic.in , dphdgl@nic.in , dpherd@nic.in , dphkkr@tnhsp.net , dphkpm@nic.in , dphkkm@nic.in , dphkar@nic.in , dphkpt@nic.in , dphkgi@nic.in , dphmdu@nic.in , dphngp@nic.in , dphnmk@nic.in , dphnlg@nic.in , dphpal@nic.in , dphpkd@nic.in , dphpmb@nic.in , dphpme@nic.in , dphpdk@nic.in , dphrmd@nic.in , dphsad@nic.in , dphslm@nic.in , dphskk@nic.in , dphsvg@nic.in , dphski@nic.in , dphtnj@nic.in , dphthn@nic.in , dphtvm@nic.in , dphtut@nic.in , dphtnv@nic.in , dphtpt@nic.in , dphtpr@nic.in , dphtvr@nic.in , dphtlr@nic.in , dphtry@nic.in , dphvel@nic.in , dphvpm@nic.in , dphvnr@nic.in , dphatg@nic.in
Saturday, 5 September 2015
கருப்பு பேட்ச்-அடையாள உண்ணாவிரதம்-தொடர்உண்ணாவிரதம்-MCI வழக்கு தொடுப்பது
இன்னும் ஒரு வாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் இணைந்து பணி நிரந்தரதிற்காக அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யபட்டு உள்ளது.
தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கபடும்.
ஒரு வேளை அதுவும் அரசின் கவனத்தை ஈர்க்க தவறும் பட்சத்தில் தொடர் உண்ணாவிரதம் அடுத்தகட்டமாகக இருக்கும்.
அதையும் தாண்டி தேவைபட்டால் முறையாக செவிலியர்களை நியமிக்காமல் இல்லாத செவிலியர்களை இருப்பது போல் காண்பிக்கும் MCI மேல் வழக்கு தொடுக்கபடும்.
ஏற்கனவே சொன்னதுபோல் எப்போதும் அரசுக்கு அவபெயரோ அல்லது அதிகாரிகளுக்கு தலைவலி உண்டாக்குவதோ எங்கள் நோக்கம் அல்ல.அந்த மாதிரியான சிந்தனைகள் எங்களுக்கு துளி கூட கிடையாது. இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் கிடையாது.
ஆனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கடந்த 2012 முதல் இந்த பணி நிரந்தரதிற்காக அலைந்து வருகிறோம்.
எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எங்கள் துறையும் மிகவும் மோசமாக உள்ளது.அது அனைவரும் அறிந்த ஒன்று.
ஒரு சாதராண பணியாளர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட எங்கள் துறைக்கும் எங்களுக்கும் வழங்கபடுவது இல்லை.
எங்களுக்கான உரிமைகளை வழங்குங்கள், இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு சேவை செய்து தமிழக அரசிற்கு நற்பெயர் பெற்று தருவோம்.
Friday, 4 September 2015
90 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு-860 முதல் 960 வரை உள்ள நமது சகோதரசகோதரிகளுக்கு
90 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு-860 முதல் 960 வரை உள்ள நமது சகோதரசகோதரிகளுக்கு
நாள்:07/09/2015
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக சிறு சிறு நன்றியாக கூறாமல் பெரிய நன்றியாக கூற விரும்புகிறோம்.
Wednesday, 2 September 2015
112 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு-737 முதல் 859 வரை உள்ள நமது சகோதரசகோதரிகளுக்கு
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்