Saturday, 8 August 2015

செக் மோசடியில் சிக்க வைக்கபட்ட தொகுப்பூதிய செவிலியர்: செவிலியர்கள் கவனம்






மதுரை அருகே உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழாம் வருடத்தில் தொகுபூதியத்தில் பணி புரியும் நமது சகோதரி ஒருவர், ஒரு செக்கை தனது கரங்களால் பூர்த்தி செய்ததன் காரணமாக இன்று பணி இன்றி சிரமப்பட்டு வருவதோடு, அவர்மேல் FIR காவல் துறையால் பதியபட்டு உள்ளது.


PHC யில் உள்ள அலுவலக கண்காணிப்பாளர் (office superintendent) ஆணைகிணங்க அவர் சொல்வதை ஒரு செக்கை பூர்த்தி செய்து உள்ளார், வழக்கமாக JSY செக் FILL UP செய்வது போல(ஏற்கனவே மருத்துவ அலுவலர் போல் கையொப்பம் இடப்பட்ட செக்)


ஆனால்  அலுவலக கண்காணிப்பாளர் மிகவும் திறமையாக அந்த செக் முழுவதையும் இந்த செவிலியரையே பூர்த்தி செய்ய வைத்து பின்னர் அந்த செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை பெற்று கொண்டு வா. வங்கியில் பணத்தை பெற்று கொண்ட பின்னர் AMOUNT RECEIVED  BY SUSILA என்று கையொப்பம் இட்டு பணத்தை பெற்று கொண்டு வா ஏனெனில் இந்த பணத்தை அந்த CHN இடம் தரவேண்டும் என்று கூறி உள்ளார்.


நமது செவிலிய சகோதரியும் பணத்தை பெற்று கொண்டு வந்து அலுவலக கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டார்.


ஒருமாதம் கழித்து மருத்துவஅலுவலர் ACCOUNT STATEMENT பார்க்கும் பொழுது பணம் TALLY ஆகாமல் உள்ளது. மேற்கொண்டு அவர் விசாரித்த போது அலுவலக கண்காணிப்பாளர் திறமையாக அந்த செக்கை காணவில்லை யாரோ திருடி உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.


பின்னர் செக் எப்போது வங்கியில் செலுத்தபட்டது என்ற விவரம் VIDEO ஆதாரங்களை பார்க்கும் போது 

இந்த செவிலியர் வங்கியில் பணத்தை 
செலுத்தியதும், செக் முழுவதும் இந்த செவிலியரின் கையொப்பம் இருந்ததும் இந்த செவிலியரின் கண்ணீரையும், வாக்குமூலத்தையும் வீணாக்கி நிர்முலமாக்கியது.

தற்பொழுது கோர்டில் நிலுவையில் வழக்கு.

கையில் கைக்குழந்தை,

ஆதரவற்ற குடும்ப சூழல்.


இது சமந்தகமாக நமது துறை உயர்அதிகாரிகளின் உதவியை நாடினோம். அவர்களும் மனசாட்சிபடி செவிலியர் தவறு செய்யவில்லை  என்பதை ஏற்று கொண்டாலும் சட்டத்தின் பார்வையில் சாட்சிகளின் பார்வையில் குற்றவாளி யார்?

ஆனாலும் முடிந்த வரை உதவுவதாக கூறியுள்ளனர்.


ஒரு செக்கை எடுத்து மோசடி செய்யும் அளவுக்கு செவிலியர்கள் முன்னேற்றம் அடைந்து விடவில்லை என்பது அனைவர்க்கும் தெரியும். 

ஆனால் சூழ்நிலை கைதியாய் இன்று அந்த செவிலிய சகோதரி கண்களில் கண்ணீரோடு.

இருப்பினும் அந்த செவிலியரை கடைசிவரை உடன் இருந்து அவர்க்கு தேவையானதை நாம் செய்து கொடுப்போம் அதில் எந்த மாற்றமும் இல்லை. 

இருப்பினும் தற்போதைய சூழலில், அன்றாட குடும்ப செலவுகளுக்கே, குழந்தையை வளர்க்கவும் இந்த ஊதியத்திதை நம்பி இருந்த சூழலில்.

கண்களில் கண்ணீர் தான் வருகிறது நமக்கும், விட்டு விடமாட்டோம் இருப்பினும்  அந்த செவிலியரின் தற்போதைய நிலை, மனஉளைச்சல், அவற்றை எல்லாம் எவ்வாறு சரி செய்வது என்பதே புரிய வில்லை.




1 comment:

  1. " காசோலையை யார் பூர்த்தி செய்தார்கள்? என்பது முக்கியம் அல்ல! காசோலையைப் பூர்த்தி செய்த பின்னரே, மருத்துவ அலுவலர், அதனைச் சரிபார்த்து, பிறகு, கையொப்பமிட வேண்டும். காசோலையைப் பூர்த்தி செய்யும் முன்னரே, அதில் கையொப்பமிட்டு, உரிய அலுவலரிடம் கொடுக்கப்படும், என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. மேலும், ஒவ்வொரு காசோலையை வழங்கும் முன்னரும் " Cheques issue Register " என்னும் பதிவேட்டில் அனைத்து கலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து அதன் பின்னரே, காசோலைப் புத்தகத்தைப் பராமரிக்கும் அலுவலக கண்காணிப்பாளர், காசோலையை குறிப்பிட்ட நபரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு, வழங்க வேண்டும். காசோலைப் புத்தகத்தை பராமரிக்கும் நபர், அதனை ரொக்கம் போன்று கண்காணிப்புடன் கையாள வேண்டும். காசோலை காணாமல் போனதாகத் தெரிவிக்கும் கண்காணிப்பாளர், இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். மேற்படி காசோலைப் புத்தகத்தையும், காசோலை வழங்கும் பதிவேட்டையும், சரிவரப் பராமரித்து இருந்தாலே காணமற் போனதாகத் தெரிவிக்கப்படும் காசோலை விவரத்தினை, உடனுக்குடன் அப்போதே கண்டுபிடித்திருக்கலாம். இந்த நிகழ்வில் யாருடைய பெயருக்கு காசோலை எழுதப்பட்டது? செவிலியர் எதற்ககாக வங்கிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டார்? அப்படி அவர் அலுவலக நாளில், மருத்துவப் பணிகளை மேற்கொள்ளும் நேரத்தில், மருத்துவமனையினை விட்டு வெளிச்சென்றால், " Staff Movement Register "-ல் உரிய பதிவுகளை மேற்கொண்டு, பிறகு வெளிச் சென்றாரா? அவருடைய பணிகளை கண்காணிக்கும் மேல் அலுவலர் யார்? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. இந்த நிகழ்வில், அலுவலக கண்காணிப்பாளர், காசோலையில் கையொப்பமிட்ட மருத்துவர் மற்றும் தொடர்புடைய செவிலியர் ஆகிய மூவருக்கும் சமபங்கு பொறுப்பு உள்ளது. செவிலியரை மட்டும் குற்றவாளியாக்குவது ஏற்புடையது அன்று! "

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.