மருத்துவர் பணி என்பது
NOT ONLY A NOBLE PROFESSION
Its also a ROYAL PROFESSION
என்பது மட்டும் தான் உண்மை.
நேற்று மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அங்கு பணி புரியும் மருத்துவர்கள் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதை களைவதற்கான வழிமுறைகள் போன்றவற்றை பற்றி கலந்துரையாடுவதற்காக மிகபெரிய கூட்டம் தமிழ்நாடு கவேர்மென்ட் டாக்டர்ஸ் அசோசியேசன் சார்பில் நடத்தபட்டது.
கூட்டத்தில் பிடித்த விஷயங்கள்:
1. ஒரு
சங்க கூட்டத்திற்கு அவர்களது கோரிக்கைள் மற்றும் பிரச்னைகளை களைவதற்காக
மருத்துவதுறையின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள அனைவரும் கலந்து கொண்டது.(HEALTH
MINISTER, DME, DPH, JDs and DDs, collector,
……………………………...etccccccccccccccccccccccccc)
2. மரியாதையைகுரிய
DPH குழந்தைசாமி சார் அவர்கள் மருத்துவர்களுடன்
நேரிடியாக நேருக்கு நேர் அமர்ந்து அவர்களுடன் பலமணிநேரம் கலந்துரையாடி அவர்களது
பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு தீர்வு கண்டது.
3. மாண்புமிகு
அமைச்சர் ஐயா அவர்கள் நோயாளிகளை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள், உங்களை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று தெரிவித்தது.
4. மருத்துவர்களின்
கோரிக்கையை உடனே பரிசிலித்து அதே மேடையில் அரசானை வெளிடப்படும் என்று தெரிவித்தது.
5. மிகப்பெரிய
அளவில் மருத்துவர்கள் கலந்து கொண்டது.
6. இந்த
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கி அரசானை
வெளியிட்டது.
நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள்:
1. இதே
போல் அனைத்து சங்க கூட்டங்களில் உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் கலந்து கொள்ள
முடியாது என்றாலும் கூட மருத்துவதுறையில் மக்கள் நலனுக்காக பல கூட்டங்கள் மாதந்தோறும் அதிகாரிகள் அமைச்சர்கள்
மத்தியில் நடைபெறுகிறது, அதே போல் மாததிற்கு ஒரு முறை ஒரு
குறிப்பிட்ட மணி துளிகள் ஒதுக்கி மருத்துவ ஊழியர்களுகாக ஒதுக்கி மருத்துவ துறையில்
பணி புரியும் ஊழியர்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்தால் அனைவரும்
மகிழ்ச்சி அடைவர்.
2. மருத்துவ
துறையில் மத்திய அரசு மருத்துவர்களையும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமியிங்கள்
என்று கூறினாலும் கூட மக்கள் நலனில் அக்கறை கொண்ட நமது தமிழக அரசு மருத்துவர்கள்
நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் கொள்கையை மாற்றி மருத்துவர்களை எடுத்த உடன்
நிரந்தர பணியிலேயே அமர்த்துவோம் என்று கூறி அதனை கொள்கை முடிவாக அறிவித்து
அமல்படுத்தி வருவது வரவேற்க தக்கது.
ஆனால் அனைவரும் மருத்துவர் பணிக்கு
படிக்க இயலாது, துப்புரவு
பணியாளர் என்றாலும் பணி என்ற நிலையில் அவரது பணியையும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அப்புறம் எதற்கு தொகுப்பூதியம் ??? அப்படியே இருந்தாலும் தொகுப்பூதியம்
என்பது எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாமல் விடியல் வரும் என்ற நம்பிக்கையில்
ஓவ்வொரு நாளும் நகர்வது நியாமா ?
மருத்துவர்கலாவது வருமானம் வருவதற்கு
வழி இருக்கிறது, மற்றவர்களுக்கு என்ன வழி இந்த ஊதியம்
தான் அவர்கள் வாழ்கை தரத்தை நிர்மாணிகிறது.
அப்படி உள்ள சூழலில் நிதி துறையானது
மருத்துவதுறையில் உள்ள மற்ற ஊழியர்களின் பணி நிரந்தரத்தை கருத்தில் கொள்ளமால்
இருப்பது கொடுமை.
தேர்வு வைத்து தொகுபூதியத்தில் பணி
அமர்த்தபடும் ஒரே துறை மருத்துவதுறை.
ஒரு சாதாரண மருத்துவ ஊழியனின் பார்வையில்
எங்கள் கோரிக்கை மிக எளிமையானது.
தொகுப்பூதியம் அறவே ரத்து செய்யபட
வேண்டும்
அல்லது
வரைமுறை படுத்தபட வேண்டும்
வேண்டும்
தர ஊதியம்
அல்லது
தரமான ஊதியம்.
குறைந்த பட்சம் உங்களை போல் வாழ
விட்டாலும் உங்கள் உடன் தான் நாங்களும் வாழ்கிறோம் என்ற உணர்வோடாவது வாழ
வகைசெய்யுங்கள்
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.