நாகை அரசு
மருத்துவமனையில் தாக்குதல்: கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை அரசு
மருத்துவமனையில் செவிலியரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மற்ற செவிலியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
நாகை
கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவி (50). இவர், சிறுநீரக கோளாறு காரணமாக
நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவர்கள், ரவியை தஞ்சை அரசு
மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், அவரது உறவினர்கள்
தாங்கள் நாகை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி அங்கே
இருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ரவி
இறந்து விட்டார்.
அவருக்கு உரிய சிகிச்சை
அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த ரவியின் உறவினர்கள்,
வெள்ளிக்கிழமை காலை
பணியில் இருந்த செவிலியர் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், இந்திரா நகரைச் சேர்ந்த செல்லதுரை (28) என்பவரை
தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செல்லதுரைக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. செவிலியர் செல்லதுரை தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவமனையில்
இருந்த மற்ற செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நாகை அரசு மருத்துவமனை
முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உதவி காவல்
கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் போலீஸார் அங்கு வந்து, ரவியின் உறவினர்கள், போராட்டக் குழுவினருடன்
பேச்சுவார்த்தை நடத்தினர். செவிலியரைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அரசு ஆசுபத்திரிக்கு வரும் சில அரைமெண்டல்களை கையாளுவது எப்படி ?
வார்ட்ல 30 பெட் இருக்கம், அட்மிஸ்னா போட்டு 45 கேஸ் வார்ட்ல, எல்லாவனும் BED வேணும்னு நர்ஸ்கிட்ட மல்லுக்கு நிப்பான் ?
எமேர்கேன்சி வார்டுல டூட்டில இருப்போம் மெடிக்கல் வார்ட்கும் சேர்த்து டூட்டி போட்டு இருப்பாங்க, கைகால் வெட்டுபட்டு ஒரு MLC கேஸ் வந்து இருக்கும், கூட வந்தவன் பூராம் தண்ணிய போட்டு இருப்பான்,
அப்போ பார்த்து மெடிக்கல் வார்ட்ல இருந்து ரொம்ப நெஞ்சு வலிக்குதுனு நோயாளியோட உறவினர் வந்து சொல்லுவான்,
இப்போனா எந்த பேசன்ட்ட பாக்குறது?
ஹாஸ்பிடல்ல ஒரு பெண் செவிலியர் பணி முடித்து வெளியே வரும் பொழுது ஒருவன் அவர்களிடம் நீங்க குண்டில மட்டும் தான் ஊசி போடுவிங்களா XXXல போட மாட்டிங்கலானு கேட்டான்? பத்து அடி தள்ளி தான் நான் நின்றேன் என்ன செய்ய ?
இந்த அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர்களுக்கு முடிவெடுக்க முடியாத பல hypothetical situation நிலைமைகள் ஏற்படுகின்றன ?
நாகையில் செவிலியர் தாக்கபட்டார், போராட்டம் செய்ய வேண்டும் கண்டனும் தெரிவிக்கவேண்டும். ஆனால் இதேல்லாம தீர்வு ?
ஒரு வேளை இந்த மாதிரி நிலைகளில் அவரது கழுத்தில் மேலோட்டமாக பதம் கொஞ்சம் அழுத்தி பார்த்து இருந்தால், ஒரு வேளை இந்த மாதிரியான அரசு ஊழியர்கள் இறந்தால் என்ன செய்வார்கள்?
நாட்ல கலெக்ட்டர் கொலை செய்யபட்டாலே இங்கு தீர்வு காண வழி இல்லை,
உடனே அவனை கண்டுபிடித்து குவைத்போன்ற நாடுகளில் உள்ளது போல் உடனே தூக்கில போட்டு விட போகிறார்கள் ? கோர்ட்டுக்கு போனா ஜாமீன் தரபோறாங்க ?
தயவுசெய்து நாட்டை காப்பது அப்புறம் நம்மை நாம் காப்ற்றி கொள்ள வேண்டும்.
நோயாளியுடன் கவனனாக பேச வேண்டும் வார்த்தைகளை கவனமாக கையாளவேண்டும்.
நாம் சரியாகவே பேசினாலும் அதில் நோட்டை கண்டுபிடிபார்கள்
தப்பு சரி என்ற விஷயங்களை தாண்டி, தவறு நோயாளி மேல் இருந்தாலும் பிரச்னை இல்லாமல் அந்த விசயத்தை கையாளவேண்டும்.
ஏறக்குறைய IAS அதிகாரிகளை போல தான் நமது பணியும், பிரச்னை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். தப்பு சரி என்பது எல்லாம் அப்புறம்.
எந்த விசயத்தையும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கையாளவேண்டும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.