Sunday, 26 April 2015

Tuesday, 21 April 2015

NCD & RCH செவிலியர்களுக்கு ஓர் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் வைக்க கோரிக்கை ?


அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பொதுவாக எங்களுக்கு பணி நிரந்தரம் வர கால தாமதம் ஆகும் பட்சத்தில் குறைந்த பட்சம் எங்கள் சொந்த ஊர்களுகாவது பணி மாறுதல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொகுபூதியத்தில் பணியில் இணைந்த தொகுப்பூதிய செவிலியர்களுக்கு இதுவரை ஒரு முறை கூட பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது, நடத்த பட வில்லை.

மேலும் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களை விட்டு வெகு தூரத்தில் பணி புரிகின்றனர்.
மேலும் MRB மூலம் தேர்தெடுக்க படும் செவிலியர்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து பணி இடங்களிலும் நிரப்பபடுவர்.
நினைத்த இடம் கிடைக்காமல் கிடைத்த இடத்திற்கு சென்று நமது சகோதரிகள் ஐந்து ஆண்டுகால பணி புரிந்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு தேர்வு மூலம் தேர்தெடுக்கபடும் செவிலியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தும் முன்னர் நமது தொகுப்பூதிய செவிலிய சகோதரிகளுக்கு ஒரு பணி இட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்த நமது மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் சுகாதார துறையை சிறப்பாக வழி நடத்தி கொண்டிருக்கும் நமது சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் ஐயா அவர்களிடமும் நமது துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கலாம் என்ற விருப்பம் உள்ளது.

மேலும் அப்படிஎன்றால் பணி நிரந்தரம் இந்த வருடம் வராதா என்றால் அந்த கேள்விக்கு விடை நாம் தான் தேட வேண்டும். முயற்சிக்க வேண்டும்.

ஏற்கனவே 3500 செவிலியர்கள் இன்று தொகுபூதியத்தில் இருக்கிறோம்.
இப்போது உள்ள சூழலில் அப்படியே பணி நிரந்தரம் வந்தாலும் இந்த வருடத்தில் 2008 பேட்ச் முழுதாக முடியுமா என்பது சந்தேகம்?
எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக மாண்புமிகு
மக்கள் முதல்வர் அம்மா அவர்களிடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்க வேண்டும்.

செவிலிய பெண்களின் பிரச்னைகளை முறையாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
இந்த வருடத்தில் அனைவரும் பணி நிரந்தரம் பெறுவோம். இல்லையென்றால் 2017 தான்.

வழக்கம்போல் எவனாவது ரெண்டு கிறுக்கன்கள் அமைச்சர் அதிகாரிகளை பார்ப்பார்கள்

நமக்காக நாய் மாதிரி அங்கு சென்று வாசலில் காத்து கொண்டு இருப்பார்கள்

அவர்களிடம் வாங்கிகட்டி கொண்டு நமது பிரச்னைகளுக்கு தீர்வோடு வருவார்கள்.

நாம் நமது கணவன் அல்லது அப்பாவை விட்டு என்ன தகவல் என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் இல்லை என்றால் இருருக்கவே இருக்கிறது இணையம் அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால் சாவுதான் ரெண்டு வருசத்துக்கு.

வாங்கனா வரணும்

ஒரு பேச்சிக்கு சொன்னா கூட காலுல விழுகணும்னா கூட ஒரு நுறு
பேரு விழுந்தா நல்லா இருக்குமா நாலு பேரு விழுந்தா நல்லா இருக்குமா

முடிவு உங்கள் கையில் முயற்சி எங்கள் கையில்.
நன்றி
 

Saturday, 18 April 2015

தமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு

 
  
காலி பணி இடங்கள் : 7243
 
பெண் செவிலியர்கள்: 6792
ஆண் செவிலியர்கள்: 451
 
கல்வி தகுதி: டிகிரி அல்லது டிப்ளோமா
 
ஊதியம்: 7700/-
 
Per Year 500 increment up to regular.
 
விண்ணபிக்க:-19/4/2015
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/05/2015
 
தேர்வு நாள்: 28.06.2015
நேரம்: 10:00 A.M. to 12:30 P.M.
 
வயது வரம்பு : 58 வயது பூர்த்தி அடைந்து இருக்க கூடாது.
 
தேர்வு முறை: 200 கேள்விகள்
கொடுக்க பட்ட விடைகளில் சரியான விடையை தேர்வு செய்யது OMR SHEET இல் குறிக்க வேண்டும். (choose the best answer)
 
கண்டிப்பான முறையில் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் 19/04/2015 குள் பதிவு செய்து இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்:
 
Rs.600/- (Rupees Six hundred only) be paid by all the candidates (excluding candidates belonging to SC/SCA/ST communities). SC/SCA/ST candidates have to pay Rs.300/- (Rupees Three hundred only).
Online payment and offline payment both also available.
விண்ணப்பிக்கும் முறை:
 
www.mrb.tn.gov.in சென்று online registration என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.
 
மற்ற விவரங்களை notification படித்து தெரிந்து கொள்ளவும்.
 
தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 7243 காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலிய காலி பணி இடங்களுக்கு தமிழக அரசு MRB மூலம் தேர்வு வைத்து தொகுப்பூதிய அடிப்படையில் எடுக்க உள்ளது.
 
தேர்வில் தேர்வு செய்யபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பட்டு இரண்டு வருடம் பணி புரிய வேண்டும். அதன் பின்னர் ஏற்கனவே உள்ள முறைபடி இருக்கின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அல்லது ஏற்படுத்தபடுகின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அவர்கள் படிபடியாக பணி நிரந்தரம் செய்யபடுவர்.
 
 
http://www.mrb.tn.gov.in/notifications.html
 
http://www.mrbexam.in/
 
 
 
தமிழக அரசு 7000 செவிலியர்களை  ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.

விண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

COMMUNITY CERTIFICATE NUMBER
ISSUED DATE
ISSUING AUTHORITY

SSLC YEAR OF PASSING
HSC YEAR OF PASSING
DIPLOMA DATE OF PASSING 

TAMILNADU NURSING COUNCIL PERMANENT REGISTRATION  NO
DATE OF REGISTRATION


PHOTO 20 KB
SIGN 10 KB

ஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு  கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும்

http://www.mrbexam.in/

உதவிக்கு கீழ்காணும் படங்கள்


 
 
 
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு அரசில் DMS மூலம் நியமிக்க பட்டு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணபிக்க தேவை இல்லை.
 
ஏகம் மேச்வேல் போன்ற அமைப்புகள் மூலம் பணி அமர்த்தபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் விண்ணபிக்க வேண்டும். அப்பொழுது தான் தொகுப்பூதிய அடிப்படியில் தேர்வில் வெற்றி பெற்றால் பணியில் இணைய முடியும். குழப்பி கொள்ள வேண்டாம் பாஸ் செய்தால் பணி இல்லை என்றால் இல்லை.

NCD செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் அரியர் ஆணை வெளியிடு

 
 
 
தமிழகம் முழுவதும் உள்ள NCD செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் அரசு ஆணை படி தரபடவேண்டிய அரியர் தொகைக்கான பட்ஜெட் தொகை ஒதுக்கபட்டு ஆணை வெளியிட பட்டுள்ளது.

இந்த ஆணைகள் அந்தஅந்த மாவட்ட TNHSP NCD COORDINATOR அவர்களிடம் பெற்று கொள்ளவும் அல்லது தங்களது அலுவலகத்திற்கு அனுப்ப சொல்லவும். இதன் மூலம் NCD செவிலியர்கள் உடனடியாக அரியர் மற்றும் புதிய ஊதியத்தை பெற முடியும்.
இதற்கான தமிழக அரசிற்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஆணையின் நகல்.
 

 
.

Thursday, 16 April 2015

தபால் வரவில்லை ???????????

 
கடந்த மாதம் நடந்த தொகுபூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர கலந்தாய்விற்கான பணி நியமன ஆணைகள் தாபல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது, ஓரிரு நாட்கள் முன்பின் தபால் வந்து விடும்.

அவர்களுக்கு வந்து விட்டது இவர்களுக்கு வந்து விட்டது நமக்கு வர வில்லையே என்று பதட்டபட வேண்டாம்.


DMS, DME யில் இருந்து கண்டிப்பாக அனைவர்க்கும் விரைவில் வந்து விடும்.

Sunday, 12 April 2015

கவுன்சிலிங் ஆடர் - தாபல் மூலம் அனுப்பபட்டு உள்ளது

.
கடந்த மாதம் நடைபெற்ற தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர கலந்தைவிற்கான பணி நியமன ஆணைகள் தபால் மூலம் அனைத்து செவிலியர்களுக்கும் அனுப்பபட்டுளதாக தெரிகிறது அல்லது அனுப்பபட உள்ளதாக தெரிகிறது.

எனவே அனைவரும் தங்கள் துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகத்திலும், மருத்துவமனையிலும், BLOCK மற்றும் PHC யிலும் கேட்டு கொள்ளவும் தபால் வந்து விட்டதா என்று.

 

Saturday, 11 April 2015

செவிலிய சகோதரர் திரு. உமாபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திரு.உமாபதி

நமது அருமை நண்பர் திரு.உமாபதி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

இவரை பற்றி இங்கு இன்று தெரிவிக்க காரணம்

தொகுப்பூதிய செவிலிய சங்கம் ஆரம்பித்ததில் இருந்து அதன் முக்கிய தூணாக இருந்து பல பணிகளை பணி நிரந்தரதிர்காக செய்து உள்ளார்.
 
மரியாதையைகுரிய திரு. உமாபதி செவிலியர்களின் உரிமைகளுக்காக எப்போது இருந்தோ குரல் கொடுத்து அதற்கான முறையான முயற்சிகளை முன்னெடுத்து செல்பவர்.
 
 
இன்று அனைத்து செவிலிய சகோதரிகளும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே செவிலிய துறை சமந்தமான தகவல்களை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் சகோதரர் தான்.
 
இந்த இணைய தளத்தை முதன்முதலில் செவிலியர்களுக்காக தன் சொந்த செலவில் சேவை நோக்கில் ஆரம்பித்தவர் நமது சகோதரர் திரு. உமாபதி அவர்கள் தான்.
 
தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரதிற்காக பல பணிகளில்
தன்னை இணைத்து கொண்டு சிறப்பாக களப்பணி புரிந்தார், புரிந்துகொண்டும் இருக்கிறார்.
 
 
வெறும் வாய்ச்சொல் புகழுரை அல்ல இது. உண்மை நடு இரவில் ரோடு ரோடு ஆக போஸ்டர் ஓட்டியதில் இருந்து பல போராட்டங்கள், கூட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய பங்கு வகித்து, எத்தனையோ அவமானங்களை கடந்து செவிலிய துறைக்காக செவிலியர்களுக்காக, பணி நிரந்தரதிற்காக பணி செய்து இருக்கிறார்.

செவிலிய துறையின் சேவகர்  என்றால் அதற்கு உமாபதி பொருத்தமான நபர்.


இங்கு தெரிவித்து சில இருப்பது இன்னும் பல

வாழ்த்துக்கள் நண்பா.
 
 
அவரது பிறந்த நாளில், மேலும் அவர் வாழ்கையில் உயர வேண்டும் என வாழ்த்தி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாகவும் தொகுப்பூதிய செவிலியர்கள் சங்கத்தின் சார்பாகவும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
 
 

Tuesday, 7 April 2015

NCD @ CEMONC செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் அரியர்ஸ் அரசு ஆணை 322 படி முறையாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தபடாமல் 10200 ஊதியமாக பெற வேண்டிய இடத்தில இன்னும் ஆறாம் ஆண்டு பணி புரியும் செவிலியர்களுக்கே பழைய ஊதியமான 8000 மட்டுமே வழங்கபட்டு வருகிறது.

TREASURY யில் அலுவலகத்தில் இது சமந்தமாக செவிலியர்கள் முயற்சி மேற்கொண்டபோதும் எதுவும் பலன் அளிக்க வில்லை என தெரிவிக்கபட்டது உள்ளது.

இது சமந்தமாக விரைவில் உயர் அதிகாரிகள் கவனித்திற்கு கொண்டு செல்லபட்டு பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளபடும்.

சாமி வரம் பூசாரி வரும் கொடுக்காமல் சாவடிப்பது இதுதான்

Saturday, 4 April 2015

வன்மையாக கண்டிக்கிறோம்

அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் திரு. செல்லத்துரை, அவர்கள் தாக்கப்பட்டதை, தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, இந்த சமூக விரோத செயலை செய்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்வதை விட அவர்களை நம்பி உள்ள குடும்பத்தினையும் கருத்தில் கொண்டு, இது போன்ற சமூக விரோத சக்திகளிடம் இருந்து தனக்களை தற்காத்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்


நாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்
நாகை அரசு மருத்துவமனையில் தாக்குதல்: கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகை அரசு மருத்துவமனையில் செவிலியரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மற்ற செவிலியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவி (50). இவர், சிறுநீரக கோளாறு காரணமாக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், மருத்துவர்கள், ரவியை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், அவரது உறவினர்கள் தாங்கள் நாகை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி அங்கே இருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ரவி இறந்து விட்டார்.

அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த ரவியின் உறவினர்கள்,


வெள்ளிக்கிழமை காலை பணியில் இருந்த செவிலியர் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், இந்திரா நகரைச் சேர்ந்த செல்லதுரை (28) என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செல்லதுரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செவிலியர் செல்லதுரை தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவமனையில் இருந்த மற்ற செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நாகை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் போலீஸார் அங்கு வந்து, ரவியின் உறவினர்கள், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். செவிலியரைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


அரசு ஆசுபத்திரிக்கு வரும் சில அரைமெண்டல்களை கையாளுவது எப்படி ?


வார்ட்ல 30 பெட் இருக்கம், அட்மிஸ்னா போட்டு 45 கேஸ் வார்ட்ல, எல்லாவனும் BED வேணும்னு நர்ஸ்கிட்ட மல்லுக்கு நிப்பான் ?


எமேர்கேன்சி வார்டுல டூட்டில இருப்போம் மெடிக்கல் வார்ட்கும் சேர்த்து டூட்டி போட்டு இருப்பாங்க, கைகால் வெட்டுபட்டு ஒரு MLC கேஸ் வந்து இருக்கும், கூட வந்தவன் பூராம் தண்ணிய போட்டு இருப்பான்,


அப்போ பார்த்து மெடிக்கல் வார்ட்ல இருந்து ரொம்ப நெஞ்சு வலிக்குதுனு நோயாளியோட உறவினர் வந்து சொல்லுவான்,

இப்போனா எந்த பேசன்ட்ட பாக்குறது?


ஹாஸ்பிடல்ல ஒரு பெண் செவிலியர் பணி முடித்து வெளியே வரும் பொழுது ஒருவன் அவர்களிடம் நீங்க குண்டில மட்டும் தான் ஊசி போடுவிங்களா XXXல போட மாட்டிங்கலானு கேட்டான்? பத்து அடி தள்ளி தான் நான் நின்றேன் என்ன செய்ய ?


இந்த அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர்களுக்கு முடிவெடுக்க முடியாத பல hypothetical situation நிலைமைகள் ஏற்படுகின்றன ?


நாகையில் செவிலியர் தாக்கபட்டார், போராட்டம் செய்ய வேண்டும் கண்டனும் தெரிவிக்கவேண்டும். ஆனால் இதேல்லாம தீர்வு ?


ஒரு வேளை இந்த மாதிரி நிலைகளில் அவரது கழுத்தில் மேலோட்டமாக பதம் கொஞ்சம் அழுத்தி பார்த்து இருந்தால், ஒரு வேளை இந்த மாதிரியான அரசு ஊழியர்கள் இறந்தால் என்ன செய்வார்கள்?


நாட்ல கலெக்ட்டர் கொலை செய்யபட்டாலே இங்கு தீர்வு காண வழி இல்லை,


உடனே அவனை கண்டுபிடித்து குவைத்போன்ற நாடுகளில் உள்ளது போல் உடனே தூக்கில போட்டு விட போகிறார்கள் ? கோர்ட்டுக்கு போனா ஜாமீன் தரபோறாங்க ?


தயவுசெய்து நாட்டை காப்பது அப்புறம் நம்மை நாம் காப்ற்றி கொள்ள வேண்டும்.


நோயாளியுடன் கவனனாக பேச வேண்டும் வார்த்தைகளை கவனமாக கையாளவேண்டும்.


நாம் சரியாகவே பேசினாலும் அதில் நோட்டை கண்டுபிடிபார்கள்


தப்பு சரி என்ற விஷயங்களை தாண்டி, தவறு நோயாளி மேல் இருந்தாலும் பிரச்னை இல்லாமல் அந்த விசயத்தை கையாளவேண்டும்.


ஏறக்குறைய IAS அதிகாரிகளை போல தான் நமது பணியும், பிரச்னை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். தப்பு சரி என்பது எல்லாம் அப்புறம்.


எந்த விசயத்தையும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கையாளவேண்டும்.