அதிகாரபூர்வ தகவல்
மாண்புமிகு மக்கள் முதலவர் அம்மா அவர்களின் கருணையாலும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் முயற்சியால் பல வருடங்களுக்கு பின்னர் தமிழகத்தில் 600 கும் மேற்பட்ட புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டு அதன் மூலம் தொகுப்பூதிய செவிலியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புதிய நிரந்தர பணி இடங்கள் தோற்றுவிக்கபடாமல் போயிருந்தால் எப்போது நிரந்தர பணியில் இருக்கும் ஒரு செவிலியர் பணி ஓய்வு பெறுவார் அல்லது பதவி உயர்வு பெறுவார் என்று தொகுப்பூதிய செவிலியர்கள் காத்துகொண்டிருக்க வேண்டிய நிலை. ஏனெனில் இதுவரை இது மாதிரியான நிகழ்வுகள் மூலம் ஏற்பட்ட காலி பணி இடங்களின் மூலம் மட்டுமே தொகுப்பூதிய செவிலியர்கள் பனி நிரந்தரம் பெற்று வந்தோம்.
தற்பொழுது அந்த நிலை மாறி ஏற்கனவே 2008 பேட்சை சேர்ந்த 100 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்ற சூழலில் இந்த புதிய பணி இட உருவாக்கம் காரணமாக தற்பொழுது 2008 பேட்சில் அடுத்து உள்ள 540 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் என்ற நமது கனவை பெற உள்ளனர்.
அதே போல் அடுத்து உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் முறையான வழியில் விரைவில் பணி நிரந்தரம் பெறுவதற்கான அனைத்து சாத்தியகூறுகளும் ஆராயபட்டுளது.
விரைவில் மக்களவை தேர்தல் வேறு நெருங்கி வந்து கொண்டிருகிறது. எனவே நாம் அனைவரும் ஒருகிணைந்து செயல்பட்டு சரியான வழியில் நமது கோரிக்கைகள் எடுத்து அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் இந்த வருட இறுதிக்குள் பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒற்றுமை இந்த வார்த்தை தான் அனைத்திற்கும் மூலகாரணம்.
நமது வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இந்த வார்த்தைதான்.
வரும் 16, 17, 18 தேதிகளில் கவுன்சிலிங் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உள்ள அனைத்து சகோதரசகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். இதோடு நமது பயணம் முடிந்து விடாது, இன்னும் நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டிய, சீர்திருத்த வேண்டிய பல விஷயங்கள் செவிலிய துறையில் உள்ளது.
இதற்கு அனைத்து செவிலியர்களின் பங்களிப்பும் அவசியம்.
இங்கு பணி நிரந்தரம்தான் செய்யபட இருக்கும் செவிலியர்ளின் தரவரிசை பட்டியல் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்வீஸ் பர்டிகுலர் NOT RECEIVED என்று குறிப்பிட்ட நபர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.
இதை தவிர்த்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் WHATSAPP இல் மெசேஜ் செய்யவும். தவிர்க்க முடியாத சூழலில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
16 ஆம் தேதி ரெகுலர் கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வேண்டிய தொகுப்பூதிய
செவிலியர்களின் பெயர்கள்
ROLL NO 113 TO 250
TOTAL MEMBERS 123
17 ஆம் தேதி ரெகுலர் கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வேண்டிய தொகுப்பூதிய
செவிலியர்களின் பெயர்கள்
ROLL NO 251 TO 500
TOTAL MEMBERS 230
18 ஆம் தேதி ரெகுலர் கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வேண்டிய தொகுப்பூதிய
செவிலியர்களின் பெயர்கள்
ROLL NO 502- 724
TOTAL MEMBERS 197
மீதம் உள்ள செவிலியர்களுக்கு எப்பொழுது அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முயற்சிகள் குறித்து அடுத்த சங்க கூட்டத்தில் தெரிவிக்கபடும்.
small lettters
WWW.TNFWEBSITE.COM
WWW.CBNURSE.COM
அரசு ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தர பணி அமர்த்தலுக்கான கலந்தாய்வு வரும் 16, 17,18 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
16-03-2015 ஆம் நாள் கலந்தாய்வு கடிதம்
17-03-2015 ஆம் நாள் கலந்தாய்வு கடிதம்
18-03-2015 ஆம் நாள் கலந்தாய்வு கடிதம்
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.