தமிழ்நாடு அரசு நர்சுகள்
சங்க தேர்தல் (தேர்தல் நாள் 18.04.2015)
பணி நிரந்தரம் வேண்டுமா ? தொகுப்பூதிய
செவிலியர்கள் செய்ய வேண்டியது என்ன ?
தொகுப்பூதிய
செவிலியர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களித்து நமக்கு பணி நிரந்தரம் பெற்று
தரும் தலைமையை தேர்தெடுக்க வேண்டியுள்ளது.
பிரச்னை என்னவென்றால் 25/03/2015 தேதியே உறுப்பினராக
கடைசி தேதி. அதற்குள் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் ரூபாய் 200 செலுத்தி தமிழ்நாடு
அரசு நிரந்தர செவிலிய சங்க ரசிதினை பெற்று கொண்டால் மட்டுமே வாக்களிக்க முடியும்.
200 ரூபாய் வீண் செலவு என்ற போதிலும் நமது துறையின்
தலைஎழுத்தையும் நமது தலைஎழுத்தையும் நிர்ணயிக்க இருக்கும் இந்த தேர்தலில்
தேர்தெடுக்கபட இருக்கும் உறுப்பினர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
எனவே தங்கள் மாவட்ட
நிரந்தர செவிலியசங்க உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் கீழ்க்கண்ட தொலைபேசி
எண்களில் தொடர்பு கொண்டு ரசிது பெற்று கொள்ளவும். அனைத்து மாவட்ட அரசு நிரந்தர
செவிலிய சங்க உறுப்பினர்கள் பெயர்கள் இன்று மாலைக்குள் அப்டேட் செய்யப்படும்.
முடியாதபட்சத்தில் நமது இணையத்தில் தங்கள் பெயர் பணி புரியும்
விலாசம் ஆகியவற்றை பதிந்து விடவும். அல்லது WHATSAPP
இல் பணி புரியும் விலாசம்
ஆகியவற்றை அனுப்பி வைக்கவும். செவிலியர்களுக்கு ரசிது அனுப்பி வைக்கபடும். 200 ரூபாய் பணத்தை தபாலிலோ அல்லது வங்கியிலோ செலுத்தி விடவும்.
இணையம் வங்கி தகவல்கள் இன்று மாலைக்குள் அப்ட்டே செய்யப்படும்
கீழ்கண்ட பதவிகளுக்கு
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்
1)மாநில தலைவர்
2)மாநில பொதுசெயலாளர்
3)மாநில பொருளாளர்.
4) மாநில துணைத்தலைவர் - 2 எண்ணிக்கை.
தேர்தல் நாள்
18.04.2015
தேர்தல் முடிவுகள்.
20.04.2015
வேட்புமனு தாக்கல்
23.03.2015 முதல் 30.03.2015 வரை.
வேட்புமனு வாபஸ்
31.03.2015 முதல் 01.04.2015 வரை.
வேட்புமனு இறுதி
செய்யும் நாள்
02.04.2015.
தேர்தல் பிரச்சாரம்
03.04.2015 முதல் 16.4.2015 வரை.
19-01-2015 அன்று அவசர செயற்குழு கூட்டம் நடத்தி தேதியை
அறிவிப்பு செய்த தற்போதைய தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநிலதலைவர்.
திருமதி.அறிவுக்கண் அவர்களுக்கும் மாநில செயலாளர் திருமதி.லீலாவதி அவர்களுக்கும்
மற்ற சங்க நிர்வாகிகள், சங்கத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்,.
சில கேள்விகள்:-
1)தொகுப்பூதிய செவிலியர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை
உண்டா,?
தொகுப்பூதிய செவிலியர்கள்
தமிழ்நாடு அரசு செவிலிய சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க
உரிமை நிச்சயம் உண்டு.
2) தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச தகுதி என்ன?
தேர்தலில் போட்டியிட வேண்டும் எனில்
காலமுறை ஊதியம் அதாவது நிரந்தர பணியமர்த்தம் பெற்ற வருடத்தில் இருந்து குறைந்தது 5 ஆண்டுகள்
சங்கத்தின்
உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
3) தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படல்
வேண்டும்?
சங்கத்தின் தனிநிலை சட்ட விதிகள் படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை.
4) ஓய்வு பெறும் வயதை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?
சங்கத்தின் தேர்தல் ஆண்டாவது 3 வருடங்களுக்கு ஒருமுறை
என்ற பட்சத்தில், தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் பணிக்காலம்
இருத்தல் வேண்டும்.