Thursday, 26 February 2015

பணி நிரந்தர கலந்தாய்வு - பணி மாறுதல் கலந்தாய்வு







வரும் மார்ச் மாதம் 11/03/2015 மற்றும் 12/03/2015 ஆகிய தேதிகள் முறையே ஓமந்தூர் மற்றும் மற்ற மருத்துவமனை நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் பெறப்பட்டு உள்ளது. ஓமந்துருக்கு மட்டுமா இல்லை அனைத்து மருத்துவமனைகளுக்குமா போன்ற தகவல்கள் உறுதி செய்யபட்ட உடன் தெரிவிக்கபடும்.

மேலும் 2008 பேட்சை சேர்ந்த நமது தொகுப்பூதிய சகோதரிகளுக்கு வரும் மார்ச் மாதம் 16/03/2015 அன்று பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் பெறபட்டு உள்ளது.

16/03/2014 எத்தனை நபர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு அவர்கள் பெயர்கள் மற்ற தகவல்கள் விரைவில் தெரிவிக்கபடும். நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 600 கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நிரந்தம் பெற கூடும்.

இதுவரை இல்லாமல் முதல் முறையாக 505 மேற்பட்ட நிரந்தர பணி இடங்கள் உருவாக்க பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக புதிதாக ஆரம்பிக்கபட்ட 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நிரந்தர பணி இடம் உருவாக்க பட்டு உள்ளது.

இதற்கு அனுமதி அளித்து தொகுப்ப்திய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உதவிய மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், மரியாதைக்குரிய அதிகாரிகளுக்கும் 4000 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாகவும் அவர்கள் குடும்பங்கள் சார்பாகவும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறோம். விரைவில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் முடிவு செய்து உள்ளோம்.

மற்ற விவரங்கள் அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் தெரிவிக்கபடும்.


No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.