Wednesday, 28 January 2015

கவுன்சிலிங்

கவுன்சிலிங்


 
அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நிரந்தர பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் பெறப்பட்டு உள்ளது. சரியாக தேதி விரைவில் தெரிவிக்கபடும்.
 
அது முடிந்த உடன் அடுத்த மாதமே 500 இல் இருந்து 600 மேற்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடத்தபட இருக்கிறது.
 
ஸ்ரீரங்கம் தேர்தல் முடிந்த உடன் நமக்கு இந்த 500 மேற்பட்ட நிரந்தர பணி இடங்கள் உருவாக்க அனுமதி அளித்து செவிலியர்கள் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய மாண்புமிகு அம்மாவுக்கு அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கும் நமக்கு கவுன்சிலிங் நடத்த தேதியும் கெடைக்கும்.
 
அதற்குள் முடிந்ததை சுருட்ட முயற்சி மேற்கொள்ளபட்டு உள்ளது.
 
5000 ரூபாய்:
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது
 
அவங்க எதை பற்றி நீங்கள் பேசினாலும் கடைசியில் வந்து நிற்பது 5000, நீங்க வேணும்னா செக் பண்ணி பாருங்க, பிரைன் வாஸ் அதவது மூளை சலவை நன்றாக செய்வார்கள்.
 
FILE இந்த TABLE இல் இருந்து அந்த TABLE கு போக வேண்டுமென்றால் இவ்வளோ காசு கொடுக்க வேண்டும் என்று.
 
உங்கள் மனம் சொல்லும் 5000 தானே, கொடுத்துருவோம், எதுக்கு வம்பு, சிக்கிரம் ரெகுலர் வந்தா போதும் என்று,.
 
சத்தியமாக அது தவறான எண்ணம் அது விழலுக்கு இரைத்த நீரை போல தான்.
 
நீங்கள் ஏமாந்தால் எங்களுக்கு பணகஷ்டம் இல்லை மனகஷ்டம் தான்.
 
ஏற்கவேனே 112 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று உள்ளனர். கேட்டு பாருங்கள் பணம் கொடுத்தார்களா என்று
 
எதோ தினமும் நான்கு பேர் ஐந்து பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து கொண்டு இந்த பணி நிரந்தர கலந்தைவிற்காக இரவும் பகலும் அலைவது போல் சில பெண் செவிலியர்களிடம் போலியாக நம்ப வைத்து 5000 ரூபாய் கொடுத்தால் விரைவில் கவுன்சலிங் தேதி அறிவித்து விடுவார்கள் என்று தெரிவித்து இந்த 5000 ரூபாயை கலெக்ட் செய்ய தீவிரமாக பணி செய்து கொண்டு உள்ளனர்.
 
வழக்கம்போல் பழைய பாணியில் நமக்கு வர இருக்கும் கவுன்சலிங் இவன் தான் தடுக்கிறான் என்று வேறு செவிலிய
சகோதரசகோதரிகளை நம்ப வைத்து கொண்டு இருகின்றனர்.
 
விட்டா ஒட்டு மொத்த மக்கள் நல்வாழ்வு துறையை எனது கண்ட்ரோலில் தான் உள்ளது, மோடியுடன் இவனுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று சொல்லுவார்கள் போல
 
இவன் சொன்னால் தான் மக்கள் நல்வாழ்வு துறையில் அனைத்தும் நடைபெறும் என்று சொல்லுவார்கள் போல
 
இதையும் ஒரு குரூப் நம்புறாங்க
 
அதை நம்பி காசு கொடுத்தால் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
மற்ற நமது சகோதரிகள் ஏமாந்து விட வேண்டாம்.
காசு கொடுத்தால் தான் கவுன்சிலிங் DATE கிடைக்கும் என்றால் அதை
நாங்களே களத்தில் இறங்கி வசூல் செய்து கொடுபோம்.
 
ஆனால் அங்கு அவ்வாறான நிலை கெடையாது, அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை நமது நிலையை உணர்ந்து விரைவாக கவுன்சலிங் வைக்கத்தான் முனைகிறார்கள்.
 
ஆனால் சிலர் இதனை பயன்படுத்தி நாங்கள் தான் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம் கவுன்சிலிங் தேதி வாங்க என்று பித்தலாட்டம் செய்து கொண்டு இருகின்றனர்.
 
சர்விஸ் பர்டிகுலர் வந்து சேரவில்லை என்று அதை எனது விலாசத்துக்கு அனுப்புங்கள், மேலும் கவுன்லிங் விரைவாகவர பாடுபட்டு கொண்டு இருக்கிறோம், கொஞ்சம் பணம் தேவை படும் என்று அவுத்து விடுவார்கள்.
 
ஒன்றும் இல்லை DMS அலுவலகத்தில் சர்விஸ் வந்து சேரவில்லை என்றாலும் ஒரு பிரச்னையும் இல்லை. முடிந்த வரை அனைத்தும் சேர்த்து விடுவோம்.
 
ஒரு வேளை தவறினால் கூட கவுன்சிலிங் அழைக்கும் போது எத்தனை நபர்களுக்கு கவுன்சிலிங் என்று லிஸ்ட் DMS அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும்.
 
அதில் சர்விஸ் பர்டிகிலர்ஸ் மிஸ் ஆயிருந்தால் பெயர் இருக்கும்,
ஒரு நாள் முன்னாடியோ முடியாவிட்டால் கவுன்சிலிங் தேதி அன்று கூட கொடுத்து கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம்.
ஏற்கவனே நமது பேட்ச்சிற்கு நடைபெற்ற கவுன்சிலிங்கில் இதே முறை தான் பின்பற்றபட்டது.
 
அதனால் எதை நினைத்தும் அஞ்ச வேண்டாம், ஏமாற வேண்டாம்.
 
கவுன்சலிங் வரும், ஒருத்தரும் மிஸ் ஆக மாட்டாங்க, ஆகவும் விட மாட்டோம்.
 
 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.