Sunday, 28 December 2014

திருச்சி ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்க கூட்டம்தமிழ்நாடு ஒப்பந்த செவிலியர் நலசங்கத்தின் கூட்டம் திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கபட்டது.
 
 
 
 
 

 

 

 
கூட்டத்திற்கு வந்த அனைத்து செவிலிய சகோதரிகளுக்கும், கூட்டத்திற்கு வந்த அவர்களுடைய பெற்றோர்களுக்கும் எங்கள் நன்றி. தொலைவில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு இன்னல்களையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள் உணர்வோடு கலந்து கொண்டது மகிழ்ச்சி.
 
 

 
 உங்களுடைய இந்த சோர்வு, வலி, வேதனை தான் சங்கத்திற்கான உந்து சக்தி


 

 
 
நிகழ்சிக்கு திரு. ஆரோக்கியதாஸ், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். செல்வி.கலைச்செல்வி அவர்கள் மாநில இணை செயலாளர் தலைமை தாங்கினார்.


 


உயர்திரு சட்டமன்ற உறுப்பினர் திரு. குணசேகரன் MLA அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

 

மேலும் உமாபதி, ரவி சீத்தாராமன், சிலம்பரசன், வசந்த், கவிராஜ், மாரிமுத்து, நந்தினி, வள்ளி அவர்கள் உரையாற்றினார்கள்.

 
 
 
 
 
இதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


இதனை வரும் வாரம் அரசிடம் சமர்பிக்க உள்ளோம்.

1.       தமிழக சுகாதார துறையில் கடந்த ஆண்டுகளில் சுமார் 2000 மேற்பட்ட நிரந்தர செவிலிய பணி இடங்களை உருவாக்கிய மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கு, மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர்  அவர்களுக்கும் இச்சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

 

2.       மருத்துவ சேவையில் இந்தியாவில் முதல் முன்னோடி மாநிலமாக தமிழகம்விளங்குகின்றது. அதன் பெரும் பங்களிப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் செவிலியர்கள் என்றால் அது மிகையல்ல. PHC யின் அனைத்து நிலைகளிலும் MEDICAL OFFICER PHARMACIST, ANM, VHN, LAB TECHNICIAN, HOSPITAL WORKER ஆகியோருக்கு நிரந்தர பணி அமர்வு இருக்கும் நிலையில் செவிலியர்களுக்கு மட்டும் இருக்கும் ஓப்பந்த முறையை ரத்து செய்யவும், முதற்கட்டமாக 1600 க்கும் மேற்பட்ட PHCயில் ஒரு நிரந்தர செவிலியர் பணி இடத்தை உருவாக்கிடவும், படிப்படியாக கூடுதல் நிரந்தர பணி இடங்களை உருவாக்கிடவும், நமது தமிழக அரசினை இச்சங்கம் வேண்டி கேட்டு கொள்கிறது.

 

3.       தமிழக சுகாதார துறையில் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமா பணி அமர்த்துவதை கைவிட்டு இந்தி வரும்காலங்களில் மக்கள் செவியை கருத்தில் கொண்டு செவிலியர்களை நிரந்தரமாக் பணி அமர்த்த வேண்டி இச்சங்கம் நமது தமிழக அரசினை வேண்டி கேட்டு கொள்கிறது.

 

4.       தமிழக அரசின் அரசாணைபடி அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிந்த செவிலியர்களில் இரண்டு ஆண்டுகள் ஓப்பந்த காலம் போக மீதம் உள்ள காலத்தை நிரந்தர காலத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு நமது தமிழக அரசினை இச்சங்கம் வேண்டி கேட்டு கொள்கிறது.

 

5.       மக்கள் முதலவர் வழங்கிய மகப்பேறு விடுப்பு, ஓப்பந்த அடிப்படை காரணமாகவும், பணி நிரந்தர கால தாமதத்தின் காரணமாகவும், மகப்பேறு விடுப்பும், மகப்பேறு விடுபிற்கான ஊதியமும் வழங்கபடுவது இல்லை. தாயுள்ளத்தோடு எந்த வித நிர்பந்தமும் இன்றி ஆறு மாத மகப்பேறு விடுப்பையும் ஊதியத்துடன் வழங்க  வழிவகை செய்ய இச்சங்கம் வேண்டி கேட்டுகொள்கிறது.

 
 
மேலும் இதன் பின்னர் இந்த வருட அதாவது 2015 இறுதிக்குள் நாம் அனைவரும் பணி நிரந்த்ரம் பெற தவறினால் அதன் பின்னர் தேர்தல், விதிமுறைகள், என்று பல பிரச்சனைகளை சுட்டி காட்டி அடுத்த ஆண்டு அதாவது 2016 இறுதி ஆகிவிடும். அதன் பின்னர் நேரிடையாக 2017, 2018 தான். 


எனவே நமது அரசிடம் நமது நியமான கோரிக்கைகளை முறையாக சரியான வழியில் எடுத்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எதுவாக இருபினும் அனைத்து செவிலியர்களும் ஒன்று பட்டு ஒரே குரலில் நமது கோரிக்கையை வைத்தால் மட்டுமே நாம் நமது நியமான கோரிக்கைகளை வென்று எடுக்க முடியும்.

 

மேலும் ஏற்கனவே புதிதாக ஆரம்பிக்க பட்ட 118 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் நமது மக்கள் முதல்வர் அவர்கள் ஆட்சியில், மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கருணையாலும், அதிகாரிகளின் சீரிய முயற்சியாலும் GO 400 வெளியிட்டு 500 க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது நமது தமிழக அரசு.

 

 


 
 
 

இதே போல் 2009 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை 4000 மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படை என்ற இருளில் இருந்தாலும் அடுத்து தேர்தல் வரும் முன்னர் மீதம் உள்ள அனைத்து தொகுப்பூதிய செவில்யர்கள் அனைவர் வாழ்விலும் பணி நிரந்தரம் என்ற தீப விளக்கை ஏற்றி 2015 ஆம் ஆண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் இனிய ஆண்டாக அமைய நமது மக்கள் முதல்வர் அம்மா அவர்களும், தமிழக அரசும் நமக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது நமது கடமை.

 

 
 
 

 
 

 
 

 
 
 
 அனைத்து செவிலியர்களுக்கும் வரும் வருடம் இனிய வருடமாக அமைய அந்த இறைவனை வேண்டி இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.