தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின், வேலூர் மாவட்ட கூட்டம் இன்று 30-11-2014 அன்று வேலூர் கோட்டை வளாகத்தில் சுமார் 2.00 மணியளவில் நடைபெற்றது.
![]() |
திரு. அருண்குமார் செவிலியர் உரை |
![]() |
திரு. பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் உரை |
![]() |
திரு. உமாபதி. அவர்கள் உரை, |
நிகழ்ச்சிக்கு திருமதி.கலைச்செல்வி, வேலூர் மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாலாஜி, அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திருமதி. ஜெயலட்சுமி, மாநில உப தலைவர் அவர்கள், திரு. உமாபதி, மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அஜய் செவிலியர், அரசு மருத்துவமனை அரூர், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். திரு. கதிர்வேலு, மாவட்ட பொருளாளர் அவர்கள் வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பித்து பேசினார்.
திரு. பிரசண்ணகுமார், செவிலியர், அரசு மருத்துவமனை, குடியாத்தம் அவர்கள் நன்றியுரை கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்கள்:-
1. தமிழகத்தில் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு 2000 த்திற்கும் மேற்பட்ட நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கியமைக்கு மக்கள் முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
2. கிராமப்புர மக்களுக்கு சேவை செய்ய அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலிய பணியிடங்களை உருவாக்கி 4500 ற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
3. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் குழந்தைகள் வார்டு மற்றும் NICU வில் MCI விதிப்படி செவிலியர்களை பணியமர்த்த வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
4. ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதை கைவிட்டு செவிலியர்களை மக்கள் சேவையை கருத்தில் கொண்டு நிரந்தரமாக பணியமர்த்த வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
5. அரசாணை 230 படி செவிலியர்களின் 2 ஆண்டு ஒப்பந்த முறை போக மீதமுள்ள ஆண்டுகளை பணியில் இணைக்க வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.