கடந்த 26/10/2014 அன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அரங்கில் தொகுபூதிய செவிலியர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 4500 தொகுபூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற செய்ய வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து கலந்தாலோசிக்க பட்டது.
கூட்டத்துக்கு பல மாவட்டங்களில் இருந்து செவிலியர்கள் கலந்து கொண்டனர். மேலும் செவிலியர்கள் மத்தியில் ஒருமுக தன்மை ஏற்படுத்தவும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செவிலியர்களிடம் கருத்துகள் கேட்கபட்டது.
மேலோட்டமாக பல பணிகள் செய்யபட்டாலும் அடிப்படையில் சங்கத்தை வலுபடுத்த வேண்டும் என்ற கருத்து வலியுறுத்த பட்டது. மேலும் சங்கம் வலுவாக இருந்தால் மட்டுமே எந்த வித செயல்பாடுகள் மேற்கொள்ளபட்டாலும் அது வலுவாக இருக்கும் என்று தெரிவிக்கபட்டது.
மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக தொகுபூதிய செவிலியர்கள் கூட்டம் நடைபெற முடிவு செய்யபட்டது. இதன் மூலம் அடிப்படை சங்ககட்டமைப்பை வலுபடுத்தும் அதன் மூலம் மூலமாக நமது பணி நிரந்தரத்தை பெற பணிகளை முயற்சிகளை செய்யவும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
கூட்டத்தில்
கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தீர்மானம்:
1.
செவிலியர்களின்
வேண்டுகோளுக்கு மாவட்டம் வாரியாகவும் மண்டல வாரியாகவும் கூட்டம் நடத்தவும்
2.
அதன் மூலம்
உறுப்பினர் சேர்கையை அதிகபடுத்தவும்
3.
உறுப்பினர்களுக்கான
அடையாள அட்டையை வழங்கவும்
4.
மேற்கண்ட பணிகள்
மூலம் சங்கத்தை வலுபடுத்தவும்
5. இவற்றின் மூலம் பணி நிரந்த்ரதிற்கான அடுத்த கட்ட பணிகளை துரிதபடுத்த
தீர்மானம் நிறைவேறியது.
மாவட்ட மற்றும் மண்டல வாரியான கூட்டம் மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விரைவில் தெரிவிக்கபடும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.