Tuesday, 28 October 2014

சிவகங்கை-டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை-நோயாளிகள் கடும் அவதி


சிவகங்கை, :

சிவகங்கை, :
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி


சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 6 தாலுகா தலைமை மருத்துவமனைகள், 47ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இங்கு பகலில் மட்டுமே டாக்டர்கள் சிகிச்சையளிக்கின்றனர். இரவு நேரங்களில் பிரசவம் பார்ப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை செவிலியர்களே மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்வது, கர்ப்பிணிகள் கணக்கெடுப்பு, குழந்தை பிறப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு என பல்வேறும் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு முகாம்கள் உள்ள நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருபவர்கள் ஊசி போடுவதற்குகூட வழயில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். பகல் நேரத்தில் மட்டுமே டாக்டர்கள் இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல கர்ப்பிணிகள் தயங்குகின்றனர். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால் டாக்டர்களை அழைப்பது அல்லது வேறு தலைமை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வது நோயாளிகளுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில்,‘வாரத்தில் பெரும்பாலான நாட்கள் செவிலியர்கள் பல்வேறு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 

இதனால், பணி ஓய்வு பெற்ற செவிலியர்கள் சிலர் தற்போதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வந்து ஊசி போடுவது, மாத்திரை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். டாக்டர்கள் முழுநேரம் இல்லாதது, செவிலியர்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதிப்படுகிறோம். 

 கிராமங்களில் உள்ளவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களே நம்பி உள்ளனர். எனவே, போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.