Sunday, 26 October 2014

குமுதம் ரிப்போர்ட்டர்-திணறும் அரசு மருத்துவமனைகள்சுத்தம் சுகாதாரம் என்ற வார்த்தைக்கு பொருள் தேடி அரசு மருத்துவமனைக்கு சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனென்றால் அரசு ஆண்டுதொறும் பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு நிதியை அதிகரித்து வந்தாலும் அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்காது இதற்கு முக்கிய காரணம்.

தமிழகத்தில் மருத்துவ அறிவியல் துறை இயக்குனரகத்தின் DMS கீழ் 30 தலைமை மருத்துவமனைகள் 158 தாலுகா மருத்துவமனைகள் 79 இதர மருத்துவமனைகள் 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகள் 19 டிஸ்பென்சரிகள் உள்ளன. இதில் கிரேடு 1 நர்சிங் கண்காணிப்பார்கள் 25 பேர் Grade II நர்சிங் கண்காணிபாளர்கள் 279 பேர் 4997  நர்சுகள் பணியில் உள்ளனர்.
 மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் 19 மருத்துவ கல்லூரிகள் 35  மருத்துவகல்லுரி மருத்துவமனைகள் உள்ளன. இதில் GRADE 1 நர்சிங் கண்காணிபாளர்கள் 35 பேர், GRADE II நர்சிங் கண்காணிபாளர்கள் 557 பேர் 7500 ஸ்டாப் நர்சுகள் பணியாற்றுகின்றனர்.

பொதுவாக மருத்துவமனைகளில் 8 நோயாளிகளுக்கு ஒரு நர்சு நியமிக்கபடவேண்டும். என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிபடி உள்ளது. தமிழக மக்கள் தொகை சுமார் 7 கோடி. இவர்களில் 10 சதவிதம் பேர் மட்டும் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களாக எடுத்து கொண்டால் கூட 70 லச்சம் பேர் வருகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள நர்சுகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்துக்கும் கீழ் தானாம். அதிலும் 4500 பேர் தொகுபூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆக 411 நோயாளிகளுக்கு ஒரு என்ற நிலையே உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொகுப்பூதிய நர்சுகள் நலச்சங்க மாநில துணை தலைவர் ரவிசீத்தாராமன் கூறுகையில் தமிழகத்தில் தான் தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்குகின்றது. இதற்கு முக்கிய காரணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களே. அதே சமயம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகத்ரா நிலையங்களின் எண்ணிக்கை வெறும்
1624, இங்கு முதுகெலும்பாக தொகுபூதிய நர்சுகள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் 5 வருடம் பணி முடித்த நர்சுகள் 1700 பேரும் 4 வருடம் முடித்த 2800 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யபடாமல் தொகுபூதியதிலே பணியாற்றி வருகின்றனர். இவர்களூகு அடிப்படை சம்பளம் 7700 விடுப்பு பணி பாதுகாப்பு கருணை உதவி எதுவும் கெடையாது.

செவிலியர்கள் சங்க மாநில துணை செயலாளர் கலை செல்வி கூறுகையில் அரசு ஆணை 230 படி நர்சுகளை 2 வருட ஒப்பந்த காலம் முடிந்ததுமே நிரந்தம் செய்ய வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் நிரந்தரம் செய்யாமல் அதிகாரிகள் இழுத்துதடிகின்றர். அதாவது நிரந்தர பணி இடம்
உருவனால் மட்டுமே தொகுபூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியும் என இன்னொரு உத்தரவை போட்டு குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

1970 இல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணி இடங்கள் இருந்ததோ அதே பணி இடங்கள்தான் இப்போதும் உள்ளன, ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை பல லச்சம் அதிகம். என்றார்.

தொகுப்பூதியல் பணி புரியும் செவிலியர்களான ரேவதி யசோதா ஆகியோர் கூறுகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுபூதியத்தில் பணிபுரியும் நர்சுகளின் முக்கால்வாசி பேர் பெண்கள். இவர்களின் பேருகாலதிற்கு விடுப்பு கூட கிடையாத நிலை உள்ளது. என்று புலம்பினர்.

ஆண் நர்சு உமாபதி மாதம் மாதம் ரூபாய் 80000 ஆயிரம் வாங்கும் அரசு அதிகாரியின் சம்பளத்தை ஒரே தவணையில் ஒரு லட்சமாக உயர்த்துகிறார்கள் அதே சமயம் தொகுப்பூதியமாக 80000 சம்பளம் வாங்கும் நாங்களும் அதே விலைவாசியில் தான் வாழ்கிறோம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். எநேரரமும் நோயாளிகளுடன் பொழுதை கழித்து வரும் நர்சுகள் மனபுழுக்கம் எதுவுமில்லாமல் நல்ல மனநிலையில் இருந்தால் தான் அவர்களின் சேவை சிறக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் என்கிறார் வேதனையுடன்.

இது தொடர்பாக சுகாதார துறை உயர் அதிகாரிகளிடம் பேசிய போது அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற நர்சுகளை நியமிக்க வேண்டும் என்று  தனியாரில் பயிற்சி பெற்றவர்களும் அவர்களை நியமிக்க கூடாது என அரசில் பயிற்சி பெற்றவர்களும் கோர்ட்டுக்கு போனதால் சில ஆண்டுகளாக நர்சு நியமனம் நடைபெறவில்லை. கோர்ட்
 தீர்ப்பின் படி விரைவில் 6 ஆயிரம் முதல் 7000 நர்சுகள் நியமிக்கபட உள்ளனர். இதற்கான அரசு ஆணையும் பிறப்பிக்கபட்டு விட்டது.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கபட்ட நர்சுகள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய பட்டு வருகின்றனர் இந்த ஆண்டு 500 பேர் பணி நிரந்தரம் செய்யபட உள்ளனர்.No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.