Saturday, 4 October 2014

என்னடா சத்தமே இல்லாம இருக்கு ?




செவிலிய சகோதரசகோதரிகளே வழக்கு தொடுக்க வேண்டும் என்றார்கள், போராட்டம் செய்ய வேண்டும் என்றார்கள் ஒன்று செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்று தவறாக யாரும் நெனைக்க வேண்டாம்.

வழக்கு முதல் போராட்டம் வரை அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் உள்ளது.

பிரச்னை என்னவென்றால் நாங்கள் வாங்கி இருப்போம். இவர்கள் தான் வழக்கு தொடுத்து போராட்டம் செய்து அரசுக்கு நம் அதிப்தியை ஏற்படுத்தி விட்டார்கள்.

பெனால மை எல்லாம் ஊத்தி ரெடியா வச்சு இருந்தாங்க,

ரெகுலர் ஆர்டர் டைப் பண்ணிட்டு இருந்தாங்க

கையெழுத்து போட போறப்போ இவங்களலா எல்லாம் கெட்டுபோச்சு

அப்படி இப்படினு பழிய தூக்கி போட ரெடியா இருகாங்க.

அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்த வேண்டாம், ஊத்துன மை ஊத்தியதாகவே இருக்கட்டும்.

இன்னும் சில நாட்கள் பார்க்கலாம்,

அரசியல் நிலவரமும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.


இரண்டவாது செவிலியகள் மத்தியில் பல கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடைபெற வேண்டும், செவிலியர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக நிலவுகிறது.  அதற்கான முயற்சிகள் எடுக்கபட உள்ளது.

அதற்கு செவிலிய சகோதரிகள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.



பார்க்கலாம் பொறுமை வெல்கிறதா அல்லது போராட்டம் வெல்கிறதா என்று ?

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.