மரியாதையைகுரிய அரசு நிரந்தர
செவிலிய சங்க தலைவி லீலாவதி மேடம் அவர்கள் மற்றும் மற்ற சங்க உறுபினர்கள் அனைவரின்
சார்பிலும் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னையில் மாபெரும்
உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்காக மரியாதையைகுரிய
லீலாவதி மேடம் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை
தெரிவித்து கொள்கிறோம்.
தொகுபூதியத்தை ரத்து செய்து 4500 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
30 ஆண்டுகளாக செவிலியராக பணியில் இணைந்து செவிலியராகவே பணி ஓய்வு பெறுவதால் 10, 15, 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு தரபடவேண்டும்.
இதில் முக்கியமான விஷயம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள அனைவரும் தன் உடல் நலனையும் கருத்தில் கொள்ளாது ஒன்று திரண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து இருந்தனர்.
உண்மையில் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்காக நமது கோரிகைக்காகக் இந்த வயதில் இங்கு வந்து இவர்கள் அமர வேண்டிய தேவை என்ன ? இருந்த போதிலும் நமது நலனையும் நமது துறையின் நலனையும் கருத்தில் கொண்டு நியாமான கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராடியது பெருமையாக இருந்தது.
இந்த கோரிக்கைகள் வென்று எடுக்காமல் இந்த முயற்சி வீணாகி விடகூடாது.
வெற்றிகான அனைத்து வழிகளையும் கையாள வேண்டும்.
பின் குறிப்பு:
மரியாதையைகுரிய லீலாவதி மேடம் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டு ரெகுலர் அடுத்த தெருவில் நிற்கிறது, நமது தெருவுக்கு வர வேண்டுமென்றால் இவ்வளோ காசு கொடுங்கள என்று எவனாவது கேட்டால் ஏற்கனவே சொன்னது போல் காலில் உள்ள செருப்பு அடுத்த ஒரு நொடியில் கைக்கு வந்து விட வேண்டும்.
நமது நலனுக்காக, செவிலிய சங்க நலனுக்காக எப்போது, எங்கே, எவ்வளவு தரவேண்டும் என்று தர வேண்டிய சூழ்நிலை வரும் போது அனைவர்க்கும் தெரிவிக்கக்படும்.
அதுவரை பிச்சைகாரர்களின் பொய்யான தகவலை நம்பி யாமற வேண்டாம் சகோதரிகளே.
ரெண்டாவது பிள்ளைகள் வளர்ந்து சம்பாரித்து தாயை கண்டிப்பாக பார்த்து கொள்ளலாம். அதுவரை பிள்ளைகளுக்கு அவர்கள் செய்வது தவறு இல்லை. மேலும் அவர்கள் நம்மிடம் இருந்து எதுவும் எதிர்பார்ப்பது இல்லை. ரொம்ப நல்லவங்க. எல்லாம் இந்த பிரிண்ட் அவுட் பாய்ஸ் அல்லக்கைகள் செய்யும் வேலை. யாவனவது காசு கீசு கேட்டா வாய்ஸ்ச ரெகார்டு பண்ணி அனுப்பி வைக்கவும்.
http://thanjaideva.blogspot.in/2014/09/blog-post_12.html
ReplyDeleteதாழ்மையான வேண்டுகோள் !!! யாரெல்லாம் இப்பதிவை படிக்க நேரிடுகிறார்களோ அவர்கள் லைக் போடுவதோடு நிறுத்தி கொள்ளாமல் அனைவரும் பகிர்ந்தால் நலம் பயக்கும்... (Please SHARE this post)
ReplyDeleteஇந்த பதிவின் நோக்கமே உயிரை காக்கும் உன்னதமான பணியில் ஈடுபடும் செவிலியர்களின் நிலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று அவரின் மூலமாக நல்லதொரு தீர்வை எட்டும் என்ற உயர்ந்த நம்பிக்கையில்...
இந்த பதிவை பகிர்வதின் மூலம் அவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளை அரசாங்கத்திற்கு கொண்டுசேர்ப்பதுடன் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களின் குடும்பங்கள் காக்கப்படும் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
சட்ட வல்லுநர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களால் பயனுறும் ஆயிரமாயிரம் பொதுமக்களுக்கும் தஞ்சைதேவாவின் கேள்விகள்...
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பணிபுரியும் பல செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவத்தின் நோக்கம் என்ன?
அரசாங்கத்தில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்பட வேண்டும் ?
அரசாங்கத்தில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை எவ்வளவு காலம் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிய வைக்கவேண்டும் ?
அரசாங்கத்தில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை எத்தனை வருடங்களுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்?
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள், மின்சார ஊழியர்கள் போன்றவர்களை ஓரிரு ஆண்டுக்குள் நிரந்தரமாக்கும் தமிழ்நாடு அரசு உயிரை காக்கும் உண்ணதமான செயலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நான்கைந்து ஆண்டுகளாக வெறும் எட்டாயிரம் ஒன்பதாயிரம் சம்பளம் கொடுத்து நிரந்தரம் செய்யாமலே வைப்பது எந்தவிதத்தில் நியாயம்?
இரவு பகல் பாராமல் சொந்த ஊரை விட்டு கணவனை பிரிந்து வெகுதூரத்தில் பணியமர்த்தபட்டு அவர்களின் சேவையை மட்டும் வாங்கிகொண்டு பிச்சை போடுவது போல் வெறும் எட்டாயிரம் ஒன்பதாயிரம் பணத்தை தூக்கி போடும் தமிழக அரசுக்கு ஏன் தெரியவில்லை அவர்களின் வாழ்க்கை நிலை ?
கேவலம் ஒரு டாஸ்மாக்கில் வேலை செய்யும் குடியை கெடுக்கும் சாராயத்தை ஊத்திகொடுப்பனுக்கு கூட எட்டாயிரம் முதல் இதர வருமானம் கிடைகிறது ஆனால் உயிரை காக்கும் செவிலியர்களின் நிலை மயிருக்கும் சமமாக நடத்தப்படும் அவலம் இங்கே கண்ணெதிரே நடக்கிறது.
அனைத்திற்கும் சங்கம் வைத்து போராடும் பலருக்கு கிட்டும் அரசாங்க ஆதரவு "நோயாளிகளின் நலன்கருதி" அனைத்து செவிலியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்தும் அதே அரசாங்க ஆதரவு கிட்டாதது ஏன்?
நன்றி
தஞ்சை தேவா
http://thanjaideva.blogspot.in/2014/09/blog-post_12.html
செவிலியர்கள் பற்றிய பதிவுகள் போட்டேன் share செய்ய மனம் மறுக்கிறது பலருக்கு?
ReplyDeleteகாசுள்ளவர்கள் தனியாரிடம் செல்வேன் என்ற திமிரா இல்லை நம் குடும்பத்தில் செவிலிய பணியில் யாரும் இல்லை என்ற சுயநலமா என்று தெரியவில்லை!
ஆனால் தனியாரை விட அதிநவீன தொழிற்நுட்ப கருவிகளுடன் கொண்ட எத்தனயோ அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் எத்தனை எத்தனையோ சாத்தியபடாத நோய்களுக்கு தீர்வுகண்டுள்ளது. அதற்க்கு மருத்துவர்களுக்கு பக்க பலமாக இருப்பது, இருந்தது அந்த அரசாங்க ஒப்பந்த செவிலியர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
சுயநல கட்சிகளுக்கு கொடி பிடித்து போராடிய நம்மக்கள் ஒவ்வொரு உயிரையும் கட்சி சாதி பேதமின்றி காக்கும் உயரிய தொழிலில் தம்மை ஈடுபடுத்தி கொண்ட ஆயிரமாயிரம் செவிலியர்களுக்கு குரல் கொடுக்க தயங்குவதேன்?