Sunday, 14 September 2014

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழியில்



மீனவர்கள் பிரச்சனையில் இருந்து காவேரி பிரச்னைவரை தமிழர்களின் நலன் காக்க நியாமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியாத நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குகள் தொடுத்து தமிழர்களுக்கான நீதியை பெற்று தந்து உள்ளார்கள் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்.

எதிர்பாரத விதமாக கடந்த ஆறு ஆண்டுகளாக 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மகப்பேறு சிகிச்சைக்கு முதுகெலும்பாக திகழ்ந்து வரும் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நியாமான கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டதா இல்லை கொண்டு செல்லபட்டு அங்கு இவர்களை நிரந்தரம் செய்தால் அரசுக்கு வீண் செலவு என்று நிதித்துறையால் திரித்து கூறப்பட்டதா என்று தெரியவில்லை.

சிலர் MCI விதிப்படி மருத்துவமனையில் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தால் அது அரசுக்கு எதிரான செயல் என்று கூறுகின்றனர்.

எங்களுடைய பணி நிரந்தராதிர்கான முயற்சிகளை மேற்கொள்வது எப்படி எந்த வகையில் அரசுக்கு எதிரான செயலாக இருக்க முடியும்.

இரண்டரை வருடங்களாக காலில் விழாத குறையாக கேட்டு விட்டோம். அனைத்து ஆதரங்களையும், பணி நிரந்தரம் கோருவதற்கான அனைத்து நியாமான முகாந்திரங்களையும் எடுத்து கூறி விட்டோம்.

மக்கள் நல்வாழ்வு துறையும் அதற்கான முறையான முயற்சிகளை மேற்கொண்டது. நிதி துறைஒப்புதல் தரவில்லை.

வேறு என்னதான் செய்வது, வரும் போது வரட்டும் அதுவரை அமைதியாக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதா ?


அரசுக்கு எதிராக செயல்பட்டால் எங்களுக்கு என்று எதுவும் நிதி வரபோகிறதா இல்லை ரெகுலர் வரபோகிறதா ?

எதாவது ஒரு வழியில் வெற்றி கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் தெரிந்த அனைத்து வழிகளையும் கையாண்டால் இவ்வாறு திரித்து விடுவது


உடன் பணி புரியும் பணியாளர்களாலும் சொந்தகளாலும் சுற்றங்கலாலும் சமுதாயத்தாலும் மிகுந்த மனஉலைச்சளுக்கு ஆளாக்கபடுகிறோம். நர்சு வேலைக்கு தெரியமா படிச்சிட்டோம் இந்த ஒரு தடவை மன்னிச்சி ரெகுலர் பண்ணங்க சார், இனிமேல் சத்தியமாக படிக்க மாட்டோம்

நாங்க என்ன கட்சியா நடத்துறோம், எதிராக செயல்பட ?


எப்போது ரெகுலர் வரும் உடன் பிறந்த சகொதரிகளுக்கு திருமணம் செய்வது,  விருப்பம் இல்லாவிட்டாலும் கூட வயதின் காரணமாக சமுதாயதிற்காக திருமணம் செய்யவேண்டிய கட்டாயம்,  வங்கியில் கடன் கேட்டால் நீ அரசு ஊழியர் இல்லை என்று சொல்கிறார்கள்? , அவரிடம் நான் சொல்லவா முடியும் நான் எப்போ இருந்தாலும் ரெகுலர் ஆயிருவேன்னு, இங்கு தொகுபூதியத்தில் பணி புரியும் செவிலியர்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு, இதற்கு எல்லாம் ஒரே தீர்வு பணி நிரந்தரம்


 மக்கள் நலனுக்காக உரிமைகளை பெற்று தர அரசு வழக்கு தொடுத்தால் நியாயம் என்று ஏற்று கொள்ளும் அன்பு உள்ளங்கள் நமது செவிலிய சமுதாயத்திற்கான நியாமான உரிமைகளை பெற்று தர வழக்கு தொடுத்தால் எதிரான செயல் என்று எதற்காக சித்தரிகின்றன ?

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.